வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, October 7, 2010

சத்யஜித் ரே – ஒரு எளிய அறிமுகம்

“காமிராவுடனும், நடிகர்களுடனும் வேலை செய்வது என்பது சினிமா பற்றிய பனிரெண்டு புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததை விட அதிகமாகக் கற்றுத் தந்தது.
- சத்யஜித் ரே”


ஆஸ்கர் என்று தெரியாத இந்தியர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று இந்தியர்களுக்கான முதல் ஆஸ்கரை காட்டியவர் சத்யஜித் ரே.ஓவியராக தன் வாழ்க்கை தொடங்கி இயக்குனர் என்ற அவதாரம் எடுத்து எழுத்தாளராகவும் பவனி வந்த 'சத்யஜித் ரே' பற்றிய புத்தகம் இது. அவருடைய வாழ்க்கை குறிப்புகள், பெட்டி, சிறுகதை, ரேவை பற்றி திரைப்பரபல பார்வைகள் என்று இந்த புத்தகம் செல்கிறது.

ஒவ்வொரு இயக்குனரும் திரைக்கதை அவர்களுக்கு என்று ஒரு வழி வைத்திருப்பார்கள். சத்யஜித் ரே அடிப்படையில் ஓவியர் என்பதால் ஓவியம் வரை பிறகே தன் அந்த காட்சிக்கான திரைக்கதையை அமைப்பாராம்.

சோவியத் திரைப்பட மேதை ஐசன்ஸ்டைன் சினிமா ‘எப்படி எடுக்கப்பட வேண்டும்’ என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு விட வேண்டும் என்று சொன்னார். ரேயின் சினிமாக்களோ முன்கூட்டியே சித்திரங்களாகவே வரையப்பட்டுவிடும். இந்த சித்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, ரே தனது ஒவ்வொரு காட்சியையும் எடுத்து விடுவார்.

படத்திற்கான உடை அலங்காரங்கள், காட்சி அமைப்புகள், விளம்பர அமைப்புகள் ஆகிய அனைத்தையும் ரே படங்களாகவே வரைந்து வைத்துக் கொள்வார். எனவே, ரே எனும் ஓவியரின் முழுபாதிப்பும் அவரது சினிமாவின் மீது இருந்தது.

நார்த் ஒயிட்ஹெட் என்று தத்துவவாதி "எல்லாக் கலைகளுக்குமே இரண்டு
முக்கிய நோக்கங்கள் உள்ளன. 1. உண்மை. 2 அழகு. இதன் இரண்டும் சத்யஜித் ரே படங்களில் நாம் பார்க்க முடியும்.

பதே பாஞ்சாலி நாவலுக்கு அட்டை படம் வரைந்தவர் சத்யஜித் ரே அதை படமாக எடுக்கவும் முடிவு செய்தார். ‘இயற்கை இருக்கிறது. அதை ஏன் திரித்துக் கூற வேண்டும்' என்று தன் படத்தின் எல்லா காட்சிகளையும் இயற்கை அழகிலே எடுத்து முடித்தார்.

சிறுவர்களுக்கான படங்கள் எடுக்க முன் உதாரணமாக இருந்தவர் சத்யஜித் ரே என்றால் மிகையாகாது.

இன்று இந்தியாவில் இருந்து வந்த முதல் உலகப் படம் என்றால் 'பதேர் பாஞ்சாலி' என்று சொல்கிறார்கள். ஆனால், பல வளர்ச்சிகள் அடைந்த சினிமாத்துறையில் இன்னும் அந்த படத்தை மட்டுமே நாம் பெருமை அடித்துக் கொள்கிறோம் என்பதில் வேதனையாக இருக்கிறது.

படம் ஓடுற மாதிரி எடுப்பவர்கள், கொஞ்சம் சத்யஜித் ரே வைப் போல் பார்க்கிற மாதிரி எடுத்தால் நன்றாக இருக்கும்.

**
கட்டுரைக்கு உதவிய நூல்

சத்யஜித் ரே - இந்திரன்
ஆருத் புக்ஸ் 4/1,
ராஜாஜி அவென்யூ அனெக்ஸ்
வளசரவாக்கம், சென்னை - 87

3 comments:

ராஜ நடராஜன் said...

நல்ல பகிர்வு!நன்றி.நானும் பதேர் பாஞ்சலியை தேடி தேடி அலைஞ்சதுதான் மிச்சம்.

Anonymous said...

அருமையான செய்தியை தந்திருக்கிறீர்கள்...நன்றி

Anbarasu said...

Mr. Raja Natarajan, You will pathar panchali movie DVD in Landmark, my friend got this a year back for 600 rupees.

LinkWithin

Related Posts with Thumbnails