நடிகர் ராஜேஷ்
திரைப்பட நடிகர் இரண்டு முறை சீனாவுக்கு சென்ற தனது பயணக் கட்டுரையை தொகுப்பாக கொண்டுவந்துள்ளார்.
கம்யூனிச கொள்கை கொண்ட சீனா மேற்கத்திய கலாச்சாரத்தில் மயங்கி வருவதாக வரும் செய்திகளை இந்த புத்தகம் மேலும் உறுதி செய்கிறது.
உலகில் அதிக மக்கள் தொகை அதிக உள்ள சீனா நாட்டில் போலீஸ்காரர்கள் மிகக் குறைவாக இருப்பதை சொல்லும் போது வியப்பாக உள்ளது. குற்றங்கள் அதிகம் நடக்காதது தான் இதற்கு காரணம் என்று சொல்லுகிறார்.( மெற்கத்திய கலாச்சாரம் வளர்ந்து விட்டால், அதிக போலீஸ்காரர்கள் தேவைப்படும். )
சீனாவில் ஆறு மாடிகள் வரை லிஃப்ட்கள் கிடையாதாம். அவர்களுக்கு தொப்பை இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லுகிறார்கள்.
ரூ.10,000 மதிப்புள்ள ஹோட்டல் அறையின் வாடகை சீனாவில் ரூ.2000 தான் வாடகை. 2 நபர்கள் தங்கும் அறையின் வாடகை ரூ.850 என்றால், ஒருவர் மட்டும் தங்கும் அறைக்கு ரூ.1300 இருக்குமாம். ஒருவர் மட்டும் தங்கும் அறையில் அதிக வசதிகள் இருப்பது தான் காரணமாம்.
மத்திய நேர உணவு இடைவேளையில் வாடிக்கையாளர் வராத சமயத்தில் கடையில் வேலை செய்பவர்கள் நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் தூங்குவார்களாம். வேலை செய்கிற பெண்களில் சிலருக்கு சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளும் அந்த கடைகளிலேயே ஒரு ஓரத்தில் தூங்கின்றன.
சீனர்கள் விலையை அதிகம் ஏற்றி விற்பனை செய்வதில்லை என்ற சொல்லும் வியாபாரி, இந்தியர்கள் எந்த பொருளை வாங்கினாலும் பேரம் பேசி வாங்குபவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருப்பதை காட்டியுள்ளது.
சந்தேகமே இல்லாமல் பள்ளிப்பாட புத்தக நடையில் எழுதியிருக்கிறார். தேர்வு படிப்பது போல் படிக்க வேண்டிய கட்டாயத்தில் வாசகன் தள்ளப்படுவது தடுக்க முடியாது. போதுவாக , பயணக்கட்டுரை எழுத்தாளரோடு நாமும் சேர்ந்து பயணிக்கும் அனுபவம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த புத்தகத்தில் அவர் பயணம் மேற்க்கொண்ட இடத்தின் பற்றின தகவல் மட்டுமே அறிந்துக் கொள்ள முடிகிறது. நம்மால் சேர்ந்து பயணிக்க முடியவில்லை.
ரூ.45, பக் : 96
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
No comments:
Post a Comment