வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 1, 2011

அறிவாளியும், நாதாரியும்

வெளியே செல்லும் முன் பத்து ஐந்து நிமிடம் மௌனமாக இருக்க வேண்டும் என்று ராஜகோபால் பல முறை சொல்லியும் பத்மா கேட்பதில்லை. கிளம்பும் போது எதையாவது மறந்து வைத்து விடுவான். இல்லை என்றால் கோபமாக வண்டி ஓட்டுவான். வெளியே செல்லும் முன் கிடைக்கும் பத்து நிமிட அமைதி தான் ஞாபகமாக எல்லாவற்றையும் எடுத்து செல்லவும், அமைதியாக வண்டி ஓட்டவும் உதவும். அது பத்மாவுக்கு புரிவதில்லை.

எப்போதும் வெளியே செல்லும் போது தான் எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள். இன்றும் அப்படி தான். பத்மா திட்டுவதை காதில் வாங்கிக் கொண்டே வெளியே வந்தான் ராஜகோபால். அவள் திட்டுவது புதுசு இல்லை என்றாலும், இன்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டாள்.

காலை, ராஜகோபாலிடம் படித்த மாணவன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான்.

" ஸார் ! நா ஜோசப். உங்க கூட படிச்ச ஸூடண்ட். என்ன தெரியுதா !" என்றான்.

" உள்ள வாப்பா. வருஷத்துக்கு இர நூறு பேரு என் கிட்ட படிக்கிறாங்க. எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடிய மாட்டிங்குது" சிரித்தப்படி தன் மாணவனை வரவேற்றான் ராஜகோபால்.

"இல்லனா மட்டும் இந்த மனுஷன் ஞாபகம் வச்சு எல்லாத்தையும் செஞ்சிடுவான்" என்று ராஜகோபலின் மனைவி உரக்க திட்டியபடி அடுப்பங்கரையில் பாத்திரத்தை உருட்டினாள்.

வந்த மாணவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ராஜகோபாலுக்கு பலகிவிட்டது. ஜோசப் மெதுவாக உள்ளே நுழைந்தான்.

" நீ எந்த பெட்ச்ல என் கிட்ட படிச்ச..."

"2003 பெட்ச். உங்க க்ளாஸ்ல நா தான் நாதாரி பையன்"

தன் வகுப்பில் அதிகம் கேள்வி கேட்கும் மாணவனை ’அறிவாளி’ என்றும், அதிகம் சேட்டை செய்யும் மாணவனை ’நாதாரி பயல்’ என்று அழைப்பது ராஜகோபாலின் வழக்கம். இப்படி, அவர் வகுப்பு எடுக்கும் ஒவ்வொரு க்ளாஸிலும் ஒரு அறிவாளியும், நாதாரி பயலும் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகுப்பில் இரண்டு மாணவர்களுக்கு பிரோகிதர் இல்லாமல் அதுவே பட்ட பெயராக நாமம் சுட்டப்படுவார்கள்.

வகுப்பில் நுழைந்ததும், அறிவாளி மாணவனிடம் எதாவது படிக்க சொல்லி அவன் கேள்வி கேட்பதை தடுப்பார். நாதாரி மாணவனை அடிக்காமல் அந்த வகுப்பை விட்டு வெளியே போக மாட்டார். அவன் எப்போ சேட்டை செய்வான் என்று அவர் பிரம்பு காத்துக் கொண்டு இருக்கும்.

தன்னை ’நாதாரி’ என்று ஜோசப் சொன்னதும் ராஜகோபாலுக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் தான் ஆசிரியரானது போல் இருந்தது. தன் வார்த்தைக்கு மதிப்பில்லாத வீட்டில் தன் பழைய பாடத்தை கேட்ட மாணவனை பார்க்கும்ப் போது தொழைந்த சந்தோஷம் கிடைத்தது போல் உணர்ந்தார்.

"பத்மா ! காபி கொண்டா ". அமர்ந்தப்படி கொஞ்ச அதிகார தோரனையில் மாணவனுக்கு காபி கேட்டான்.

“பிரிஸ்பால் ஸ்டிபம் எங்கே இருக்காரு தெரியுமா ஸார் ?”

“அவரு ரிடையர் ஆயிட்டு, பையனோட அமெரிக்காவுல செட்டில் ஆய்ட்டாரு”

ராஜகோபாலும், ஜோசப்பும் தங்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டு இருந்தனர்.

பதினைந்து நிமிடமாகியும் ராஜகோபால் பத்மாவிடம் சொன்ன காபி வரவில்லை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத ஒருவன் உள்ளே நுழைந்தான்.

"யாருப்பா நீ"

" ஸார் ! இவன் தான் ரமேஷ். நம்ம க்ளாஸ் அறிவாளி. என் கூட தான் வந்தான்"

" ஓ...அப்படியா ! எப்படிப்பா இருக்க. உள்ள வராம ஏன் வெளியேவ இருந்த "

" இல்ல சார். கார் வைக்க இடமில்ல. வச்சிட்டு வரதுக்கு நேரமாச்சு"

"ஸார் ! நேரமாச்சி. நான் வரேன்." காபிக்காக காத்திருந்த ஜோசப் சமையலறையில் பத்மாவுக்கு கேட்குபடி சொன்னான்.

"இருப்பா.... பத்மா....". இது வரை மனைவியை அழைத்த குரல் கத்துவது போல் மாறியது.

முகம் கடுகடுப்புடன் இரண்டு காபி டம்பலரை வந்து வைத்து விட்டு சென்றாள். வந்த மாணவர்களை பார்த்து ஒரு புன்முறுவல் சிரிப்புக் கூட சிரிக்கவில்லை.

ஜோசப்பும், ரமேஷூம் காபியை குடித்த வேகத்தில், ஜோசப் தன் திருமண பத்திரிகையை நீட்டினான்.

“அவசியம் குடும்பத்தோட என் கல்யாணத்துக்கு வரனும்” என்றான்.

அழைப்பிதழ் வைத்த இரண்டு நிமிடத்தில் ஜோசப்பும், ரமேஷூம் சென்றனர்.
மனைவியிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்கும் தைரியம் ராஜகோபாலுக்கு இல்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள , " பத்மா ! எனக்கும் ஒரு காபி !" என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் முகம் சிவப்பாய் இருந்ததை பார்த்தான்.

" காபி பொடியில்ல. வந்தவங்களுக்கு போட்டு கொடுத்திட்டேன். அவங்களால எனக்கும் காபியில்ல..."

வாழ்க்கை முழுவதும் மாணவர்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்துவிட்டு, மனைவிக்கு தமிழ் பன்ப்பாடு தெரியாமல் போனதை இந்த வயதுக்கு மேல் சொல்லி என்ன பயன்.

" இந்த மனுஷன ஞாபக வச்சி இரண்டு பேரு வந்துட்டா பெரிய மனுஷன் நினைப்பு. போய் காபி பொடி வாங்கிட்டு வாங்க " என்று கணவனை விரட்டினாள்.

பத்மா கோபமாக பேசினாலும், உண்மை தான். வேலை ஓய்வு பெற்ற பிறகு எந்த மாணவன் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். யார் தன்னை நினைவில் வைத்துக் கொண்டு இருக்க போகிறார் என்று நினைத்தப்படி காபி வாங்க சென்றான்.

**

சிங்கப்பூர் விமான நிலையம்.

முரளி தன் குழந்தையுடன் சிங்கப்பூர் ஆர்லைஸ் விமானத்தை பிடிக்க சென்றுக் கொண்டு இருந்தான். விமானம் பிடிக்கும் நோக்கத்தில் தங்கள் பெட்டியை இழுத்துக் கொண்டு சென்ற போது ரவி மீது மோதிவிடுகிறது.

" ஆ....."

" ஸாரி சார் ! தெரியாம பட்டுடிச்சு...." என்றாள் முரளியின் மனைவி.

மனைவி வரதாததை திரும்பி பார்த்த அவளின் கணவன் முரளி, " என்னம்மா ஆச்சு...!" கொஞ்சம் பதற்றத்துடன் வந்தான்.

அடிப்பட்டவன் கொஞ்சம் நேரத்தில் அடையாளம் கண்டுக் கொண்டான் முரளி.

" டேய் அறிவாளி ! நீயாடா......"

ரவி முகம் கொஞ்சம் மாறியது. தன்னுடன் பள்ளியில் படித்த முரளி என்று அடையாளம் கண்டுக் கொண்டான்.

" ஏய் ! நீ நாதாரி பய தானே "

தன் கணவன் ’நாதாரி’ என்று ரவி சொன்னதும் கோபம் வந்ததும். முரளி தன் மனைவியிடம் ரவியை பற்றி சொல்கிறான்.

கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"அது என்ன அறிவாளி, நாதாரி பட்ட பேரு " என்று முரளியின் மனைவி கேட்க, " அந்த பேர எங்களுக்கு வெச்சதே எங்க ராஜகோபால் சார் தான்" என்றான் முரளி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails