வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 25, 2011

நல்லா பண்ணுடா !!

புத்தகம் விற்பதில் எந்தளவுக்கு நான் தீவிரமாக இருக்கிறேன் என்று என்னால் சென்ற ஞாயிறு (20.2.11) அன்று உணர முடிந்தது. அன்று மாலை, என் பள்ளி நண்பனின் ஜானகிராமன் திருமண மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி. பள்ளி முடிந்து 12 வருடம் கலித்து நினைவில் வைத்துக் கொண்டு பலரை அழைத்துயிருக்கிறான். அதே சமயம், வாரம் ஒரு நாளவது புத்தக ஸ்டால் போட வேண்டும் என்று பதிப்பகத்தில் தீவிரமாக இருக்கிறேன்.

இந்த இடத்தில் ஜானகி ராமனை பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். நண்பர்களின் திருமணத்திற்கு போனில் அழைத்தாலே நேரில் சென்று பரிசோடு வாழ்த்துபவன். அழைத்த நண்பனை விட அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் நண்பர்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் அவனுக்கு உண்டு. மாப்பிளையை வாழ்த்தும் போது, "கங்கிராட்ஸ் மச்சான் ! நல்லா பண்ணுடா " என்பான். மணப்பெண் உட்பட பக்கத்தில் இருப்பவர்கள் சிரிப்பார்கள். ஒரு சிலர் முகம் சுலிப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டான். எல்லோர் திருமணத்தில் இந்த வசனத்தை மாற்றுவதில்லை. என் திருமணம் நிகழ்ச்சி உட்பட எங்கள் பள்ளி நண்பர்கள் நிகழ்ச்சியில் இப்படி தான் செய்துயிருக்கிறான்.

இப்போதைக்கு ஜானகிராமனை புராணத்திற்கு தற்காலிக புள்ளி வைத்துவிடுவோம்.

அன்றைய தினம் 'LLA' நூலகத்தில் புத்தக ஸ்டால் போட்டேன். அங்கு இரண்டு நிகழ்ச்சி இருந்தும் கூட்டமும் இல்லை, எந்த புத்தகமும் விற்பனையாகவில்லை. ஒரு விதத்தில் நல்லதாக பட்டது. ஏழு மணிக்கே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வீட்டுக்கு வந்தேன். ஜானகிராமனுக்காக வாங்கிய பரிசை பேக் செய்து 8 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றேன்.

என் வகுப்பில் படித்த 53 மாணவர்களில் 23 பேர் வரை வந்திருந்தார்கள். 12 வருடம் கலித்து பழைய நண்பர்கள் ஒருகினைந்து ஒரு இடத்தில் சந்திப்பது மிக பெரிய விஷயம். ஒவ்வொருவருக்கும் பல வேலைகள். குடும்பத்திற்காக செலவு செய்வது ஞாயிறு ஒரு தினம் தான். அந்த தினமும் நண்பனுக்காக ஒதுக்குவது மிக பெரிய சவாலக இருக்கிறது. ( ஒரு வேளை புத்தகம் நன்றாக விற்பனையாகியிருந்தால் நான் கூட சென்று இருப்பேனா என்பது சந்தேகம் தான்.)

அதற்காக ஜானகிராமனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

23 பேரில் ஒரு சிலரை பள்ளி முடித்து இன்று தான் தான் சந்திக்கிறேன். ஸ்ரீ குமாருக்கு தலை முடி முழுவதும் காலி. பிரசாத், பிரதாப் இருவருக்கும் பாதி மூடி காலி. ஒல்லியாக இருந்த ஞான பிரகாஷ், அன்பு இருவரும் தொப்பை போட்டு இருந்தார்கள். கோபி, பிரபு மேலும் உடல் பெருத்து இருந்தார்கள். சச்சின், சரத் இருவருக்கும் திருமணமாகி அவரவர் மனைவியுடன் வந்திருந்தார்கள். எனக்கும் தலை முடி நரைத்து இருந்தது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்களுக்கு இருந்த உருவத்தை தொலைத்திருந்தோம். ஆனால், மீண்டும் பள்ளியில் சென்று வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதில் இருந்தது.

’நட்பு பிரியாதது’ தத்துவம் சொன்னாலும் இரண்டு பேர் பெயரை நான் மறந்திருந்தேன். என்னைப் போல் ஒரு சிலர் பெயரை நினைவுப் படுத்த சிரம்மப்பட்டார்கள்.

கல்லூரி நண்பர்களுக்கும், பள்ளி நண்பர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் ஒரே துறையில் இருக்க வாய்ப்புள்ளது. (என் கல்லூரி நண்பர் பெரும்பாலும் I.T துறை). பள்ளி நண்பர்கள் அப்படியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் இருந்தனர். இருவர் சொந்தமாக தொழில் நடத்திக் கொண்டுயிருக்கிறார்கள். சினிமா, சிவில், மார்க்கெட்டிங் என்று அவரவர் துறை கதைகளை பேசிக் கொண்டுயிருந்தோம்.
அடுத்த நாள் வேலை இருப்பதை நினைக்கும் போது சாப்பாட்டு ஞாபகமும், நண்பனை வாழ்த்த வேண்டும் என்ற ஞாபகமும் வந்தது. அப்போது, பிரபு தன் திருமண நிகழ்ச்சியில் ஜானகிராமன் சொன்னதை எங்களிடம் சொல்லி, “அவன ஒரு வழி பண்ணனும்...” என்றான்.

திருமணம் ஆன மூன்று பேர் அதற்கு அதரவாக இருந்தனர். எல்லோரும் கொண்டு வந்த பரிசு போருட்களையும், மொய் கவட்ரையும் வாங்கி பெயருக்கு பக்கத்தில் எழுதினான். ஒரு சிலர் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. எங்களில் பலர் அவன் எழுதுவதை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தோம். எங்கள் பரிசு பொருளில் பிரபு எழுதுவதை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

சாப்பிடுவதற்கு முன்பு, மாப்பிள்ளை வாழ்த்த அனைவரும் பெரும் படையாக மேடை ஏறினோம். மணப்பெண்ணின் பக்கத்தில் இருந்த ஜானகியை தளுவியும் , கை கொடுத்தும் நாங்கள் சொன்ன வாழ்த்து, “ மச்சான் கங்கிராட்ஸ், நல்லா பண்ணுடா” என்று சொல்லி பரிசு பொருட்களை கொடுத்தோம்.

பரிசு பொருளை வாங்கிய மணப்பெண்ணின் அம்மாவின் முகம் மாறியிருந்தது. “நல்லா பண்ணுடா” என்று எழுதியதை பார்த்தது.

2 comments:

iniyavan said...

குகன்,

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

தயவு செய்து திருத்திவிடுங்கள். படிக்க கஷ்டமாக உள்ளது.

அமர பாரதி said...

பதிவு ஓ.கே. ஆனால் உலகநாதனை கண்டபடி வழி மொழிகிறேன். "ழ" வே வராதாய்யா உனக்கு?

LinkWithin

Related Posts with Thumbnails