ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது எனக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. 1947ல் தீவிரமாக செயல்பட வேண்டிய இந்து பிரிவினை வாதத்தை காலம் கடந்து இன்னும் உடும்பு பிடியாக பிடித்திருப்பவர். இவர்கள் என்ன தான் தீவிரமாக செயல்ப்பட்டாலும், இந்து மதத்தில் இருப்பவர்களே கால்வாசி பேர் இவர்களை உண்மையாக ஆதரிப்பது மிக பெரிய விஷயம்.
கடவுளே காலவதியாகிக் கொண்டு இருக்கும் போது மதம் நம்பிக்கை அடிப்படையாக வைத்து மாற்றம் கொண்டு வர நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் என்ற என் எண்ணத்தில் இருந்து நான் மாறவில்லை. இந்த புத்தகமும் ஆர்.எஸ்.எஸ் மீது பலர் கொண்டுள்ள எண்ணத்தையும் மாற்றப்போவதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சில நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை புரியவைத்திருக்கிறது. மற்றப்படி கட்டுரையின் தொடக்கத்தின் சொன்ன வரியின் இருந்து நான் பின்வாங்கவில்லை.
புத்தகத்திற்கு வருவோம்.
என் ஆஸ்தான குரு பா.ரா அவர்கள் எழுதிய புத்தகம். ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியின் அவர் புத்தகத்தை வாங்கி விடுவது வழக்கம். இந்த முறையும் அப்படியே... காஷ்மீர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
1. அரசியக் கட்சித் தலைவர்கள் தம் வாரிசை அரசியலுக்கு அழைத்து வருவதுப் போல் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை. இங்கு, குடும்பம் என்பது இயக்கம் மட்டுமே.
2. தனக்கு அடுத்து இவர் தான் தலைவர் என்று முடிவு எடுத்து விட்டால், மற்றவர்கள் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை. தலைவர் தேர்ந்தெடுக்கும் நபர் தான் அடுத்த தலைவர். இது வரை விமர்சிக்கப்படாத முறை தலைவர்களை தேர்ந்தெடுத்துயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
3.கோவா சுதந்திரத்திற்கு பிறகும் கோவா போர்த்துகீசிய காலனியின் கீழ் தான் இருந்தது. இராணுவ நடவடிக்கை எடுக்கவோ நேரு மறுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்குள் ஒருவரான ஜகன்னாத் ராவ் ஜோதி நேரே கோவாவில் சத்தியகிரகம் இருந்தற்காக கைது செய்தது. அந்த செயலை எதிர்த்து ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சத்தியகிரகத்தில் இறங்க, 1950 இந்திய சுதந்திர தினத்தன்று போர்த்துகீசிய போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறங்கியது.
ஆர்.எஸ்.எஸ்., சில புரட்சி அமைப்பினரும் சேர்ந்து கோவா காவல் நிலையத்தை கைப்பற்றி தாத்ரா விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தனர். சரியாக ஒரு வாரத்தில் பல இடங்களில் தாக்குதல் நட்த்தப்பட்டது. இறுதியில் நேரு இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது. டிசம்பர் 18,1961ல் கோவா இந்தியாவுடன் இணைந்தது.
4. 1962ல் இந்திய- சீனா யுத்தத்தின் போது இந்தியாவில் இருக்கும் ஒரு இடதுசாரி இயக்கங்கள் சீனாவை ஆதரித்தது. கம்யூனிசம் – கேபிடலிசத்திற்கான யுத்தம் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஜவான்களுக்கு உதவியது. வாகனங்கள், ஆயுதம் செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரம் செய்ய தயாராக இருந்தார்கள். பிரதமர் நேருக் கூட இதை எதிர்பார்க்கவில்லை.
1963ல் ஜனவரி 26ல் தேதி நடந்த குடியரசு தின அணி வகுப்பிற்கு அனுமதி தந்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. பிரச்சனை, அந்த தேசபக்தியின் மீது அவர்கள் மீது பூசும் மதச்சாயத்தில் தான்.
ஆரம்ப அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை பா.ரா உணர்த்தியிருக்கிறார்.
**
ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான விவாதிக்கப்படும் குற்றங்களை இந்த நூலில் பதில் இல்லை. மிக பெரிய வருத்தம்.
இந்து மதத்தில் இருப்பவர்கள் மத மாறுவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அதில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து ஏன் போராடவில்லை?
பழங்குடியினர் இடத்தில் கூட தங்கி தங்கள் கொள்கையை பரப்ப நினைப்பவர்கள், எத்தனை பழங்குடி இனத்தை சமூகத்தின் முன் உயர்த்தி உள்ளார்கள். ?
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மன்னிப்பு கோரியதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்திராவின் சர்வதிகாரத்தன எமர்ஜன்ஸியின் போது ஜெபியை தனியே விட்டு ஓடிவந்தவர்களை மேலோட்டமாக ஒரு வரியில் சொல்லியிருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
”இவர்கள் நேர்மை இல்லாதவர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ்.யைப் பற்றி ஜெபி குறிப்பிட்டுள்ளார். எமர்ஜன்சஸிப் பற்றி குறிப்பிடும் போது ஜெபி ஆர்.எஸ்.எஸ்.ப் பற்றி விமர்சனத்தையும் குறிப்பிட்டுயிருக்க வேண்டும்.
**
கடைசி ஒரு இரண்டு மூன்று பக்கத்தில் மேலோட்டமாக ஆர்.எஸ்.எஸ் மீது சில குறைகளை சொல்லிவிட்டு இந்த புத்தகத்தை நடுநிலையான புத்தகம் என்று சொல்வதில் எந்த நியாயமுமில்லை. ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்துக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் புரிந்துக் கொண்டு எதிர்க்க இந்த நூல் உதவும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஹீரோ இயக்கமாக கூறும் நூலாக எனக்கு படுகிறது.
நூலை வாங்க... இங்கே.
ரூ.75. பக் : 144
கிழக்கு பதிப்பகம்
3 comments:
கண்டிப்பா வாங்க வேண்டிய நூல் எனப் படுகிறது உங்கள் கருத்தை படித்தவுடன் :)))
\\19550 இந்திய சுதந்திர தினத்தன்று\\
இதென்ன கலாட்டா..?
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
===> 1. இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
===> 2. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். .
...
Post a Comment