We Can Books இணைய புத்தகக் கண்காட்சி அறிவித்த நாள் அன்று, ஒரு நண்பரிடம் அழைப்பு வந்தது.
“ஸார் ! உங்க Online book fair நல்ல யோசனை. எங்க பதிப்பக புத்தகமும் வைக்க முடியுமா ! அதுக்கு நாங்க ஏதாவது செய்யனுமா” என்று கேட்டார்.
அறிவித்த சில மணி நேரத்தில் இப்படி ஒரு அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. அவரின் புத்தக தலைப்பு அனைத்தும் விற்பனையாக கூடியது.
நீங்கள் புத்தக கடைக்கு கொடுக்கும் சலுகை விலையோடு புத்தகம் கொடுங்கள் போதும். எந்த பண உதவியும் வேண்டாம் என்றேன்.
என் நெருங்கிய நண்பர்கள் புத்தகம் கொடுப்பவர்களிடம் ஏதாவது பணம் வாங்குறியா ! அவங்க தபால் செலவுக்கு பணம் தராங்களா...! என்று பல கேள்விகள்.
தபால் செலவு, 10% தள்ளுபடி எல்லாம்.. எனக்கு கொடுக்கும் சலுகை விலையில் இருந்து தான் வாசகர்களுக்கு கொடுக்கிறேன்.
இதனால், உன் லாபம் குறையுமே என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். எல்லா விஷயங்களுக்கும் லாபத்தை மனதில் வைத்துக் கொண்டு நடத்தினால் எந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. இந்த முயற்சியில் எனக்கு கிடைக்கப் போவது குறைந்த லாபம் தான். இருந்தாலும், புத்தகத்தில் லாபம் கிடைப்பது மிக பெரிய சாதனை !!!
எந்த ஓரு முயற்சிக்கும் ஒரு தொடக்கம் வேண்டும். அது தான் இந்த அறிவிப்பு. இந்த யோசனை நாளை பெரிய பதிப்பகங்கள் பயன்படுத்திக் கொண்டால் லாபம் வாசகர்களுக்கும் கிடைக்கும்.
புத்தக விற்பனையாளர் செய்யும் போது பதிப்பகங்கள் செய்ய முடியாது !!
மேலும், சில புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறும். புத்தகத்திற்கான பட்டியலை பார்க்க....
http://guhankatturai.blogspot.com/2011/02/we-can-books.html
**
முதல் ஆர்டர்
இணைய புத்தகக் கண்காட்சி அறிவிப்பை பெங்களூரை சேர்ந்த ஒரு தோழி இரண்டு புத்தகத்தை ஆர்டர் செய்திருந்தார். தமிழக அல்லாத முகவரி என்பதால் புத்தகம் அனுப்புவதைப் பற்றி நேரடியாக தொடர்பு கொண்டேன்.
” ஸார் ! உங்க ஐடியா சூப்பர். சென்னைக்கு வர முடியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு இது பெரிய Gift” என்று பாராட்டினார்.
ஒரு நிமிடத்தில் என்னை நினைத்து நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். அதே சமயம் என் மீது எனக்கே கோபம் வந்தது. தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படியாவது தமிழ் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கும். ஆனால், வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பது மிகவும் கடினம். இதைப் பற்றி யோசிக்காமல் இருந்தது என் தவறு தான்.
அந்த தோழி கோரியர் செலவு அவர் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார். இருந்தும் புத்தகத்திற்குரிய விலையை மட்டும் வங்கி கணக்கில் செலுத்துமாறு சொன்னேன். என்னுடைய நோக்கம் வாசகர்கள் தபால் செலவு இல்லாமல் புத்தகம் பெற வேண்டும். ’கோரியர் கட்டணம்’ என்ன தான் உயர்ந்தாலும் இதில் இருந்து நாங்கள் மாற போவதில்லை.
தமிழ்நாட்டு அல்லாத வாசகர்கள் புத்தகத்தின் விலையை மட்டும் கொடுத்தால் போதுமானது (குறைந்தது ரூ.200 இருக்க வேண்டும்). தபால் செலவு கொடுக்க வேண்டியதில்லை. இவர்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி தர முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
**
இணைய புத்தக்க் கண்காட்சிக்காக எனக்கு தெரிந்த அமெச்சூர் டிசைனில் ஒரு லோகோவை தயார் செய்திருக்கிறேன். இந்த கண்காட்சிப் பற்றி தங்கள் பதிவில் ஒரு மாதத்திற்கான அறிவிப்பை தெரிவித்தால் ’We Can Books’ அரும்பு முயற்சிக்கு உதவியாக இருக்கும்.
அட்வான்ஸ் நன்றிகள்
அன்புடன்,
குகன்
1 comment:
புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.
Post a Comment