ஓர் இயக்கத்தின் உண்மையான வளர்ச்சியைக் காட்டு வது எது? அவ்வியக்கத்துக்குக் கிடைத்திருக்கிற பணக்காரர்களின் ஆதரவா? அவ்வியக்கத்தின் பால் ஏழைகள் காட்டும் நேசமா?பணக்காரர்கள் ஆதரித்தால் பணம்தான் கிடைக்கும். ஏழைகள் ஆதரித்தால் தான் இயக்கத்தில் உயிரோட்டம் இருக்கும்.
இக்கருத்தை,அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மாநாட்டில் சுவையான ஒரு நிகழ்ச்சியைக் கூறி விளக்கினார்கள்.
நான் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தபோது,செட்டிநாடு ராஜா வீட்டில் விருந்து.பொப்பிலி ராஜா முதல் தமிழ் நாட்டுப் பணக்காரர்கள் யாவரும் வந்திருந்தனர்.மறுநாள் நான் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.ராஜா தன் காரைக் கொடுத்து, காரைகுடியில் ரயில் ஏற என்னை அனுப்பினார். வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் இடையில் நின்றது. டிரைவர் இறங்கி ஏதேதோ செய்து கொண்டிருந்தார். ரயில் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. நான் டிரைவரிடம் “என்னைய்யா வண்டியைக் கிளப்ப முடியுமா? முடியாதா? நான் ரயிலுக்குப் போய் ஆக வேண்டுமே”என்று படபடப்பாக்க் கேட்டேன்.
டிரைவர் நிதானமாக,”இப்ப எதுக்கு அவசரப்படுறீங்க? அவசர அவசரமா மெட்ராஸ் போயி,இன்னும் நாலு பணக்காரங்களை வாழ வைக்கப் போறீங்களா?” என்று குத்தலாகக் கேட்டார். யார் மூலமாகவோ ரயில் நிலையம் சென்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியெல்லாம் மறைந்து, நமது கட்சி ஆரம்பித்து இப்போது சில நாள்களுக்கு முன் செட்டி நாட்டுப் பகுதிக்குப் பேசப் போனேன். கூட்டம் முடிந்தது. நம் மாவட்ட செயலாளர் ஒரு காரில் என்னை ரயில் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்.இப்போது நிஜமாகவே கார் ரிப்பேர். இறங்கி ரோட்டில் நிற்கிறேன். ஒரே இருட்டு, ரயிலுக்கு நேரமாகிறதே என்ற அவசரம்.
அப்போது ஒரு பெரிய கார் வந்து நின்றது.
டிரைவர் இறங்கிவந்து “என்னண்ணா கார் ரிப்பேரா?நான் ஸ்டேக்ஷனுக்குத்தான் போறேன்.வண்டியிலே ஏறிக்கங்கண்ணா”என்றார்
”இது யார் வண்டி?” என்றான்.”ராஜா வண்டி”என்றார்.
”வேண்டாம், என்னை அழைத்துச் சென்றது தெரிந்தால்,ராஜா உங்களைக் கோவிச்சுக்குவார்” என்றேன். பரவாயில்லை. ஏறுங்கண்ணா”என்று வற்புருத்தி ஏற்றிக் கொண்டார்.
நான் சிந்தனை வயப்பட்டேன்.ராஜா அன்று நம்மிடம் இருந்தார்.டிரைவர் நம்மை எதிர்த்தார். இப்போது டிரைவர் நம்மை நம்மோடு. ஆனால் ராஜா நம்மோடு இல்லை. டிரைவரின் ஆதரவுதான் நம்மை வளர்த்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.”
இவ்வாறு அண்ணா எது வளர்ச்சியின் அடையாளம் என்று விளக்கினார்.
ஏழைகள் ஆதரிக்குமாறு இயக்கம் நடத்தினால் வளரலாம்.செல்வர்கள் ஆதரவு செல்வத்தைத் தரும். இயக்கத்திற்க்கு வளர்ச்சி தராது.
அண்ணா எத்தனை பெரிய தலைவர் என்று புரிகிறதா?
சொன்னவர்;இ.ரெ.சண்முகவடிவேல்.
’அண்ணா’ படம் வைத்து கட்சி நடத்தும் இரண்டு கட்சிக்கும் எப்போது உணர்வார்களா ??
***
தொண்டர்களால் உயர்ந்தவன் நான்
அண்ணா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். நின்று பேச வசதியாக்க் கை வைத்துக் கொண்டு பேசும்படியாக ஒரு மேடை வைத்திருந்தனர்.
அண்ணா அந்த மேடையருகே சென்று நின்றார். சராசரி உயரத்துக்கும் குறைவான அண்ணாவை மறைத்த மேடையை அகற்றுமாறு கூச்சலிட்டனர்.
அப்போது ஓர் அன்பர் ஓடிப்போய் ஒரு கள்ளிப் பெட்டியைக் கொண்டுவந்து போட்டு,அதில் நின்று பேசுமாறு அண்ணாவை வேண்டினார்.
அண்ணா இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார், ”தொண்டர்களால் உயர்ந்தவன் நான்.”என்பது இப்போது புரிந்திருக்கும்.”
இதை கேட்ட கடல் போல் குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து முழங்கினர்.
***
இணைய புத்தகக் கண்காட்சிக்காக இரண்டு சி.டிக்கள் இடம் பெறுகிறது.
சி.டி
67.அமரர் கல்கியின் படைப்புகள் - ரூ.199 ( 10 புதினங்கள் மற்றும் 75 சிறுகதைகள்)
68.தமிழ் புதினங்கள் 1 - ரூ.99 ( 20 புதினங்கள் )
புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் முழு புத்தக பட்டியலை பார்க்க .....
1 comment:
நல்ல பதிவு
Post a Comment