வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 16, 2011

எமர்ஜென்ஸி : ஜெ.பி.யின் ஜெயில் வாசம்

எம்.ஜி.தேவசகாயம்
தமிழில் :எம்.ராம்கி

’எமர்ஜென்ஸி’ என்றவுடன் நம் எல்லோர் நினைவில் வந்து நிற்ப்பது இந்திரா காந்தி தான். கோபக்காரர். பங்லாதேஷ் நாட்டு விடுதலைக்கு உதவியவர். ஈழ விடுதலைக்கு உதவ நினைத்தவர். 26/11 தாக்குதல், இலங்கை இராணுவம் மீது தாக்குதல் என்று தொடர்ந்து இந்தியாவை தாக்குதிலுக்கு எதிர்தாக்குதலுக்கு அஞ்சும் காங்கிரஸ் பிரதமர்களுக்கு மத்தியில் மிகவும் தைரியமானவர். 1971ல் பாகிஸ்தானுடன் யுத்தம், போற்கோவிலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தாக்க ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்று துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டவர். தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் ”ஜனநாயகத்தை எமர்ஜென்ஸியின் மூலமாக காப்பாற்றுகிறோம்” என்று சொல்லி ஜனநாயகத்தை காலில் மிதித்தவர்.

இப்படி, எமர்ஜென்ஸியின் பிரதான நாயகியாக இந்திரா காந்தி இருந்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரு வில்லன் இருந்ததை சரித்திர பக்கங்கள் குறிப்பிடாமல் மறந்துவிட்டது. அல்லது மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அன்றைய இந்திராவின் எமர்ஜென்ஸிக்கு தடையாக இருந்தவர் எழுபது வயது இளைஞன் ’ஜெ.பி’ என்கிற ஜெயபிரகாஷ் அவர்கள். எமர்ஜென்ஸி காலத்தில் வட இந்தியாவில் பல இளைஞர்களுக்கு உத்வேகமாய் இருந்தவர் ஜெ.பி. எமர்ஜென்ஸியின் கைது செய்தவர்கள் விடுதலையான பின்னும் ஜெ.பியை விடுதலை செய்ய இந்திரா சர்வதிகாரம் யோசித்தது. ஜெ.பியை விடுதலை செய்வதும் அல்லது பரோவில் விடுவதும், எமர்ஜென்ஸியை முடிவுக்கு கொண்டுவருவதும் ஒன்று தான் என்று நினைத்தது.’சஞ்சய் காந்தி’ என்ற இளைஞர் பிரதமராக தடையாக இருந்ததும் இந்த எழுபது வயது முதியவர் தான். அதனால், ஜெ.பி விடுதலை செய்யாமல் காலம் கடத்தினர். டெல்லிக்கு அவர் எழுதிய கடிதங்களை பல கடிதங்கள் அனுப்பப்படமால் இருந்தது. ஜெ.பி உடல்நலத்தின் மீது அரசு பெரிய ஆர்வ காட்டவில்லை. காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததால் அவரது சீறுநீரகம் கூட பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பியைப் பற்றி ஒரு வரியின் சொல்ல வேண்டும் என்றால் காமராசர் போல் மிகவும் எளிமையானவர். சிறையில் இருந்த போதிலும் ஜெ.பி நாட்டு மக்களுக்காக கவலைப்பட்டவர். “திருமண சந்தையில் இராணுவ அதிகாரிகளுக்கு என்றும் மதிப்பில்லை” என்று வருத்தப்பட்டார். 1966ல் வறட்சியால் 30 லட்ச மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர். சிறையில் இருந்தப் போது கூட உத்திர பிரதேச மாநிலத்தைப் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினார். விறட்சியை பிரதமரிடம் பேச வேண்டும், அந்த சந்திப்பை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த போவதில்லை என்று உறுதியளித்தும் இந்திராவை சந்திக்கும் வாய்ப்பு ஜெ.பிக்கு கிடைக்கவில்லை.

எமர்ஜென்ஸியின் போது ஜெ.பி அடிக்கடி பிரிட்டிஷ் காலத்தை நினைத்து பார்ப்பார். அவர்கள் கூட இவ்வளவு சர்வாதிகாரத்துடன் நடந்துக் கொண்டதில்லை என்று சொல்லுவாராம். ( காமராசர் கூட இப்படி சாகும் முன்பு இப்படி தான் சொன்னாராம்.)

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா ரஷ்யாவின் கை பொம்மையாக இருந்ததை ஜெ.பி குறிப்பிட்டுள்ளார். இந்திராவுக்கு எதிராக அவர் எதோ உலருகிறார் என்று அன்று எல்லோரும் கருதினர். ஆனால், 1990ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் சோவியத் அரசின் உளவுத்துறையின் கடுமையாக கண்காணிப்பில் இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது வெளியே தெரியவந்துள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் ஆவணங்கள் குறித்து கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ, வாசிலி மீத்ரோகின் ஆகியோர் தொகுத்து ’மீத்ரோகின் ஆவணங்கள் : ஜெ.பியும் உலகமும்’ என்ற புத்தகத்தை தொகுத்தனர். அந்த ஆவணப்படி ரஷ்யதான் இந்தியாவுக்கு லஞ்சத்தை அறிமுகப்படுத்தியது. கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமான பண சூட்கேஸ்களில் அடைக்கப்பட்டு பிரதமரின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எமர்ஜென்ஸி காலத்தில் கைது செய்யப்பட்ட ஜெ.பியை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த தேவசகாயம் அவர்கள் ஜெ.பியுடன் பழகிய தருணங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஜெ.பி அரசியல் பார்வையும், எமர்ஜென்ஸி முடிவுக்கு வந்தால் இந்திராவுக்கு எதிராக அவர் வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டுள்ளார் ஜெ.பி. அதில், ஜெ.பியின் முக்கியமான திட்டம், காமராசரை தி.மு.கவுக்கு ஆதரவாக மாற்ற வைப்பது. ஆனால், இந்திராவை பிரதமராக்கி தான் மிக பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்விலே காந்திஜெயந்தி அன்று காமராசர் இறந்தது ஜெ.பி ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேசிய அளவில் மிக பெரிய பலமான கட்சி இல்லை என்பது தான் 1977 வரை அவர்களின் மிக பெரிய பலமாக இருந்தது. ஜனதா கட்சி, பா.ஜ.க என்று பல தேசிய கட்சிகள் வந்தாலும் ஏழைகளை ஏழைகளாக்கும், பணக்காரர்களை பணக்காரர்களாக்கும் காங்கிரஸிடம் தான் மக்கள் மாட்ட வேண்டியதாக உள்ளது.


நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்:288
கிழக்கு பதிப்பகம்

**

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails