அன்-ரிசர்வ் பெட்டியில் இடம் பிடிக்க வரிசையாக அவரவர் கையில் பெட்டியுடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள். இடம் பிடிப்பது முடியாத காரியம் கூட்டத்தை பார்த்தவுடன் புரிந்துக் கொண்டேன். நிற்க இடம் கிடைத்தால் நல்லது என்று தோன்றியது.
என் முன் நிற்பவர் ஒரு நாளிதழ் படித்துக் கொண்டு இருந்தார். ரயில் வரும் வரை படிக்கலாம் என்று அவரிடம் பேப்பர் கேட்டேன். தான் படிப்பதை என்னிடம் கொடுத்து, வாரப் புத்தகத்தை படிக்க எடுத்தார்.
“பெருசா நியூஸ் இல்ல சார். எல்லா பக்கமும் லஞ்சம், ஊழல் தான். இத காசு கொடுத்து வாங்கி படிக்கனும்னு தலையில எழுதியிருக்கு...”
” அப்போ எதுக்கு பேப்பர் வாங்குனீங்க...?”
”நாமல எப்படி ஏமாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வேண்டாம் !!!”
அவரை பார்த்தால் எந்த கட்சியும் சேர்ந்தவில்லை என்று தோன்றியது. சராசரி பிரஜையின் கோபம் தான் அவரிடமும் இருந்தது. வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட சட்டை. பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல் தெரிந்தார். ரயிலில் வந்ததும் அடித்து பிடித்து ஏறினேன். கூட்டத்தில் அந்த மனிதர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
விழுப்புரம் வந்ததும் தன் குடும்பத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அந்த மனிதரை அழைத்து வாங்கின பேப்பரை கொடுத்து டீ குடிக்க அழைத்தேன்.
"உக்கார இடம் கிடச்சுதா ?"
"மேல ஏறினதும் எட்டு பேருக்கு இடத்த போட்டுடேன்." என்று பெருமையாக சொன்னார்.
"அவ்வளவு இடம் புடிச்சிங்களே ! யாரும் சண்டைக்கு வரலையா ?"
"இரண்டு மூனு பேரு கத்துனாங்க.. நான் காதுல வாங்கிக்கல " என்றார்.
“சாதான ஆள் நீங்க... உங்க குடும்பத்துக்கு இத்தன இடத்த புடிக்கும் போது. பதவியில இருக்குறவன் செஞ்ச மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருது ? " என்றேன். சிரித்துக் கொண்டு அவர் எந்த பதிலும் சொல்ல வில்லை. இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வார் என்றே தோன்றியது.
2 comments:
Excellent Thought with Simple Delivery. HATS OFF my dear friend!!!
குகன் சார்...
வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் தான்
மனிதர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்பது பொது விதி தானே..
கதை அருமை. வாழ்த்துக்கள்.
Post a Comment