வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 29, 2012

கேட்காமல் கிடைக்குமா ?

நேற்று, அபிராமியில் ரூ.25/- மிராண்டா பெப் பாட்டிலை ரூ.33 என்றார்கள். சண்டை போடாமல் பில் மட்டும் தான் கேட்டேன். முதலில் தர மறுத்தார்கள். பிறகு, ரூ.28வாது தர சொன்னார்கள். 40 ரூபாய் கூட தருகிறேன், எனக்கு பில் வேண்டும் என்றேன். எங்கோ ஒருவர் வந்து மிராண்டா 25 ரூபாய் தான், புது ஆள் தெரியாமல் சொல்லிவிட்டார் என்று சமாளித்தார். குடும்பத்துடன் சென்றதால், வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ரூ.25 கொடுத்து விட்டு வந்தேன்.

குற்றவுணர்வு எனக்குள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

கண்டிப்பாக இவர்கள் எல்லோருக்கும் எம்.ஆர்.பி யை விட அதிகமாக தான் விற்க போகிறார்கள். நமக்கான உரிமையை ஒவ்வொரு முறையும் போராடி தான் பெற வேண்டுமென்றால், கண்டிப்பாக இது ஜனநாயகம் இல்லை. தியேட்டர், பஸ் ஸ்டான்ண்ட், டாஸ்மார்க் யில் எம்.ஆர்.பி யை விட அதிகமாக பொருளை விற்க பயப்பட வேண்டும்.

வன்முறையில்லாமல் எப்படி செய்ய வேண்டும் ? கேட்டால் கிடைக்கும் என்பதை விட கேட்காமல் கிடைக்கும் நிலை வருமா ?

1 comment:

வவ்வால் said...

குகன்,

பரவாயில்லை பில் கேட்டதும் வழிக்கு வந்தார்களே, இப்படி நானும் கேட்டுள்ளேன், இஷ்டம் இருந்தா வாங்கு என்று பதில் சொல்வார்கள் :-)) கூட்டம் இல்லாத படமா? கூட்டமான நேரத்தில் கேட்டு இருந்தீர்கள் நெற்றிக்கண் இல்லாமலே எரித்திருப்பார்கள்.

சென்னையில் பெட்டிக்கடையிலேயே 30 ரூ சொல்கிறான், கேட்டால் கூலிங்க் செய்ய பிரிட்ஜில் போட கரண்ட் பில் காசு யார் தருவா என்கிறார்கள். ரொம்ப பேசி அன்று 27 ரூ என விலைக்குறைத்து வாங்கினேன். அநேகமாக சாவுகிராக்கி என்று திட்டிக்கொண்டே கொடுத்திருப்பான் . எவனோ ஒருவன் படத்தில் மாதவன் காட்சி தான் நினைவுக்கு வருகிறது(ஹாலிவுட் ஒரிஜினல் ஃபாலிங் டவுனிலும் கோக் கு அதிக காசு கேட்பதாகவே வரும், அமெரிக்காவிலும் இப்படித்தான் என ஒரு அல்ப சந்தோஷம்)இவர்களிடம் தினம் மல்லுக்கட்டி அதை குடிக்கனுமா என இப்போதெல்லாம் வாங்குவதே இல்லை. "டெய்லீ ஆப்பிள் "ஜூஸ் 500 மிலி. 25 ரூ என எம்.ஆர்.பிக்கே தருகிறான் அதை தான் வாங்குகிறேன்(சரக்குக்கும் அதான் மிக்சிங்).

டாஸ்மாக்கில் எல்லாம் பேசவே விட மாட்டேங்கிறார்கள், சிலர் அங்கும் எம்.ஆர்.பியில் கேட்டால் கிடைக்கும் என்கிறார்கள்,எனக்கு தான் கிடைக்கமாட்டேன்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails