கடந்த வாரம் சொந்த வேலையாக கூடுவாஞ்சேரிக்கு ரயிலில் சென்று இருந்தேன். கூடுவாஞ்சேரி ரயில் இறங்கியதும் டீ சாப்பிட்டு கிளம்பலாம் என்று ஒரு டீ கடைக்கு சென்றோம். சிறு ப்ளாஸ்டிக் கப்பில் டீ கடைக்கார அம்மா கொடுத்தார்.
"என்ன அம்மா ! ப்ளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது அரசு சொல்லுதே ! நீங்க இன்னுமா ப்ளாஸ்டிக் கப்புல டீ தரீங்க. பேப்பர் கப்பல தரக்கூடாதா ?" என்றேன்.
" எல்லா இடத்துலையும் ப்ளாஸ்டிக் ஒழிச்சிட்டாங்களா !!" என்று சிரித்தப்படி கேட்டார்.
நாம் வாங்கும் பொருட்கள் ப்ளாஸ்டிக் கவர் பேக்கிங்வோடு வருகிறதே தவிற, டீக்கடை, உணவு விடுதி, இலவசமாக ப்ளாஸ்டிக் கவர் கொடுப்பதை தவிர்ப்பது போன்றவற்றை தீவிரமாக பின்பற்றுகிறோம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், நகர் புறப்பகுதியில் ப்ளாஸ்டிக் கப் எப்போது போல் புழகத்தில் தான் உள்ளது. அதை விட பெரிய அதிர்ச்சி எதிரில் இருந்த போர்ட் பார்த்ததும் வந்தது.
மேல் இருக்கும் எந்த அளவுக்கு அழகாக வார்த்தைகள் எழுதப்பட்டதோ மிக அழுக்கு படிந்த அதிகமான ப்ளாஸ்டிக் குப்பை கொட்டி இருந்தது.
" இந்த போர்ட் இங்க இருக்கே. அதுக்காவது ப்ளாஸ்டிக் பயன்படுத்தாம இருக்க கூடாதா ?" என்றேன்.
" நாலு மணி நேரம் பவர் கட்டுனு சொல்லி. இன்னும் 6 - 7 மணி நேரம் பவர் கட் பண்ணுறாங்க. அவங்கள விடவா நாங்க பண்ணுறோம்." என்றார்.
கோவை, திருச்சி நண்பர்களிடம் விசாரித்ததில் 6 - 7 மணி நேரம் பவர் கட் இருப்பதாக கூறினர். நாலு மணி நேரம் பவர் கட் என்பது வேறும் பெயர் அளவிற்கு மட்டுமே என்று கூறினர்.
ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கும், பவர் கட்டுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், ஒருவரை ஒருவர் குறைச் சொல்ல சம்மந்தப்படுத்தப்படுகிறது.
அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கு ஏற்ப்படும் அசௌகர்யத்தை அரசு விரைவில் போக்க வேண்டும். இதை இரண்டும் நடக்காத வரையில் ஒருவரை ஒருவர் பழிப்போடும் படலம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment