அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ சிறுகதை தொகுப்புக்கு பிறகு நான் படித்த ஈழ சிறுகதை நூல் ‘கூடுகள் சிதைந்தபோது’. ஈழத்தின் புனைக்கதை என்று சொல்ல மனம் வரவில்லை. எங்கோ ஈழத்தில் அல்லது கனடாவில் இப்படி நடந்திருக்கும் என்று தோன்றும் அளவிற்கு கதைகள் உள்ளது. இந்நூலில் மோத்தம் பதிநான்கு கதைகள்.
1.வலி
கனடாவில் வாழும் ஈழ தமிழன் மயூரன் அசைவம் இல்லாமல் உணவு இறங்காது. ஹாக்கியில் கனடா வெல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு கனடா வாசியாக மாறிவிட்டவன். அவன் அசைவம் சாப்பிடுவதை கைவிடும் காரணத்தை சொல்லும் கதை.
2. அம்மா எங்கே போகிறாய் ?
ஈழத்தில் விசாலாட்சியிடம் பாசமாய் இருந்த மகன், மகள் கனடாவில் தங்களுக்கென்று குடும்பம் வந்ததும் சுயநலமாக மாறுகிறார்கள். விசாலாட்சியின் பென்ஷன் பணத்திற்காக இருவரும் உருமை கோருகிறார்கள். இறுதியில் விசாலாட்சி என்ன முடிவு எடுக்கிறாள் ?
என்பது தான் கதை.
3. பதவி உயர்வு
பிரிகேடியர் சில்வா சிங்கள இராணுவத்தில் ஜென்ரல் பதவி அடைய பல உயிர்களை கொன்றவன். அவன் மகன் அசோகா சில்வாவுக்கு உயிரின் அருமையஒ உணர்வது தான் கதை.
4. ரேடியோப்பெட்டி
முதுமைக் காதலுக்கு நினைவுச் சின்னமாக இருக்கும் ரேடியோப்பெட்டியை இயங்க வைக்க துடிக்கும் ஒரு மூதாட்டியின் முயற்சியும், அவரது காதலும் தான் கதை.
5 பெரிய கல் வீடு
சிங்கள இராணுவத்தால் ஈழத்தில் எத்தனையோ வீடுகள் போலிவு இழந்துள்ளது. பல கல்வீடுகள் கல்லாக மாறுயுள்ளது. அவர்களின் குண்டுகளுக்கு தப்பிய பெரிய கல்வீடு உரிமைக்காக வேண்டுவதே கதை.
9. கூடுகள் சிதைந்தபோது
இந்த நூலின் தலைப்பில் அமைந்த கதை. நெஞ்சை நெகிழ வைக்கும் களம். சிங்கள குண்டுகளுக்கு பயந்து தன் அன்பு மனைவி, குழந்தை பிணத்தை விட்டு ஓடிவந்தவனின் குற்றவுணர்வுடன் புலம்புகிறான். தான் தப்பி வந்ததை நினைத்து தன்னை தானே நொந்துக் கொள்கிறான்.
12. அண்ணாநகரில் கடவுள்
இந்த நூலின் சென்னையை கதைக்களமாக கொண்ட ஒரே கதை. படிக்கும் போது புதுமைபித்தனின் கதை ( ‘கடவுளும், கந்தசாமியும்’ என்று நினைக்கிறேன்), கடவுள் படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணாநகரில் இறங்கிய கடவுள் மனிதர்கள் நம்பாமல் புறக்கணிப்பது தான் கதை.
ஓர் இதயத்திலே, உறுத்தல் போன்ற கதைகள் வேறு களத்தில் படித்த ஞாபகம் இருந்ததால் என்னை பெரிதாக கவரவில்லை.
கண்ணீர் அஞ்சலி, கிறுக்கன், இது இவர்களின் காலம், வெளியில் எல்லாம் பேசலாம், தேடல் போன்ற சிறுகதைகளை நூல் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்.
பல கதைகள் கனடாவை கதைக்களமாக கொண்டுள்ளது. ஈழத்தைப் பற்றி பல பதிவுகள் நூலாக வந்துள்ளது. ஆனால், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் கதையை பதிவு செய்யும் நூல் மிக அறிதாக உள்ளது. புனைக்கதை மூலம் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பதிவு செய்துள்ளார். இவர் 1991 இல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் ஆகிய நாடுகளில் சில காலங்கள் வசித்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். www.tamilauthors.com என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார்.
34 பக்கங்கள் அணிந்துரை, என்னுரை என்று வாசகன் படித்து விட்டு முதல் கதையை படிக்க வேண்டியதுள்ளது. 3 பேரின் அணிந்துரை அவசியம் அற்றது என்று தோன்றுகிறது.
கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் வாழ்க்கையை "கூடுகள் சிதைந்தபோது" சிறுகதை நூல் மூலம் பதிவு செய்த அகிலின் முயற்சி பாராட்டியாக வேண்டும்.
இந்த நூலை வாங்க.... இங்கே.
கூடுகள் சிதைந்தபோது
அகில்
பக் : 184, விலை. 120/-
வம்சி புக்ஸ்
19, டி.எம் சாரோன்
திருவண்ணாமலை,
செல் : 94448 67023, 04175-251468
No comments:
Post a Comment