வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 1, 2012

சூரியன் பெற்ற சூழல் பூமி !!மிசாவை ஈசியாய் பார்த்தவர் !
ஜார் மன்னர் ஆட்சியை ஓழித்த
புரட்சியாளரின் பெயர் கொண்டவர் !
உடல் அறுபது என்றாலும்
இருபது போல் உழைப்பவர் !
இளைஞர் பலர் இருந்தாலும்
என்றும் இளைஞர் அணி தலைவர் !!

ஊழல் குற்றம் சொல்பவர்களுக்கு
ஊழ்வினை சரியாய் இருப்பதில்லை
அவர்கள் பார்த்த ஜாதகமே
அவர்களுக்கு பாதகமாகிறது !
ஆனால்,
பெரியார் சொன்ன பகுத்தறிவு
கட்சி களப்பணியில் தெரிகிறது !
கோயில் வாசல் மிதிக்காமல்
மக்கள் நலப்பணியில் கால் செல்கிறது !

உம் நேற்றைய வெற்றி
திராவிடத்தின் பெருமையை உணர்த்தியது !
உம் தற்காலிக தோல்வி
ஆரியத்தின் ஆதிக்க வெறியை காட்டுகிறது !

தமிழகத்தின் முதல் துணை முதல்வரே !
பல வெற்றிகள் கண்ட உமக்கு
கட்சியின் தோல்வி தற்காலிகமே !
எதிரியிடம் பதவியிருப்பது
பல சமயம் உமக்கு பலமே !
சுதந்திரமாய் செயல்பட
பதவி ஒரு முள்கீரிடமே !

ஆட்சிப் பொருப்பில் இருக்கும் போது
கட்சியில் சேர்த்த இளைஞர்களை விட
எதிர்வரிசையில் இருக்கும் போது
சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம் !
அதை மீண்டும் உணர்த்த போவது
உம் 60வது பிறந்தநாளே !!!!

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!

1 comment:

கோவை நேரம் said...

ஸ்டாலின்..... வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails