வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 9, 2013

அப்பா !

அந்த பிஞ்சு மனதில் இத்தனை பெரிய ஏமாற்றத்தை ராஜா எப்படி விதைத்தான் ? வாங்கும் சம்பளத்தில் இப்போது அவனால் வாங்கி தர முடியாதவனில்லை. ‘இது தேவையில்லை’ என்று நினைத்த எண்ணம் தான் அவன் மகன் அவன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.

ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் முதல் கதாநாயகன். முதல் வில்லன். ஆனால், ஏனோ ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு வில்லனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போது அவன் மீது அவனுக்கே கோபமாக இருந்தது.

 “அப்பா ! வாங்கி தரமாட்டார்” என்ற எண்ணம்.



மகனிடம் ‘முடியும்’ என்று சொல்ல முடிந்த விஷயத்தை ‘முடியாது’ என்று சொல்லுவது அப்பாவுக்கு மட்டுமே தெரியும் அவனுடைய வலி. ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இயலாமையை மகன் மீது கோபமாக காட்டியிருக்கிறான். ‘பணம் இல்லை’ என்று சொல்ல தைரியமில்லாமல் அடித்திருக்கிறான். ஒரு வேலை தன் மகனுக்கு வாங்கி தராமல் இருக்க பலகிவிட்டேனோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது.

உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியில் எதிரிப் போல் பழகுவது அப்பா – மகன் உறவில் தான். தருணுக்கு எட்டு வயது தான் ஆகிறது. அவன் கேட்பது எல்லாம் தந்து விட வேண்டும் என்றே ஆசை. ஆனால், தன் சம்பளத்தில் ஒரு பங்கை அம்மா, அப்பாவுக்கும், இன்னொரு பங்கை தன் குடும்ப செலவுக்கும் சரியாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்ததால் சொந்த வீட்டிலே தனிக்குடித்தனம். அப்பா, அம்மா மாடியில், ராஜாவின் குடும்பம் கீழ் வீட்டில்.

அம்மா தனது மகனை தட்டி பறித்த எண்ணத்தில் ராஜாவின் மனைவியிடம் பேசமாட்டாள். அப்பா ராஜாவுக்கு சாதகமாக பேசவும் மாட்டார். எதிர்க்கவும் மாட்டார். சொந்த வீட்டில் அப்பா அம்மாவுடனே மூன்றாவது மனிதன் போல் வாழ்க்கிறான். அவர்களுக்கும் பணம் கொடுத்து, தங்களுக்கும் பணம் செலவு செய்து மீதி பணம் சேர்த்து வைப்பது என்பது மன்மோகன் இரண்டு மணி நேரம் பேச சொல்வதற்கு சமம். இப்படி, இருக்கும் நிலையில் மகன் கேட்பதெல்லாம் ராஜாவால் எப்படி வாங்கி தர முடியும்.

ஓடி ஆடி விளையாடும் வயதில் மடியில் கணிணியை வைத்து விளையாடுகிறார்கள். ஆனால், தருண் கேட்டது சைக்கிள்.

ஒரு முறை மனைவியுடன் வெளியே செல்லும் போது தருணை அழைத்து சென்று இருந்தான். அப்போது ஒரு கடையில் சைக்கிளை ஆசையாக தடவிப்பார்த்துக் கொண்டு இருந்தான். மனைவி "சைக்கிள் வேண்டுமா ?" என்று கேட்டதற்கு, "அப்பா வாங்கி தரமாட்டார்" என்று அவன் சொன்ன பதில் அவனை மிகவும் பாதித்தது.

மற்ற வீட்டில், எழு எட்டு வயது குழந்தைகள் ஒரு பொருளை எப்படியாவது அடம் பிடித்து வாங்கிவிடுவார்கள். ஆனால், தருண் தன்னிடம் ஆசையாய் சாக்கலெட் கூட கேட்டதில்லை. அவன் கேட்ட பொருளெல்லாம் மறுத்ததற்கு, அவனிடம் இருந்து அவன் எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறான் என்று புரிந்திருந்தது.

இதுவரை கடன் அட்டை வேண்டாம் என்று இருந்த அவன், தன் மகனுக்காக கடன் அட்டை வாங்கினான். மகளிடம் / மகனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலும் அப்பாக்கள் கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது.

தன் நண்பன் ஒருவன் சைக்கிள் ஹோல்சேல் கடைக்கு 'சைக்கிள் விலை குறைவாக இருக்கும் என்று அழைத்து சென்றான். தருண் ஆசையாய் தடவிப் பார்த்த சைக்கிளை விட விலை உயர்ந்த, அழகான சைக்கிள் அங்கு இருந்தது.
 முதல் முதலாக வாங்கிய கடன் அட்டையில், தருணுக்காக சைக்கிள் வாங்கினான்.

கடன் அட்டை தேய்க்கும் போது கொஞ்சம் உருத்தலாக இருந்தாலும், தருணின் சந்தோஷத்திற்கும் எதுவும் பெரிதாக தெரியவில்லை. வாங்கிய புது சைக்கிலை என் நண்பன் வண்டி பின் அமர்ந்து எடுத்து வந்தேன்.

கடைசி தேர்வு முடித்து வீட்டுக்கு வந்த தருணின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க மிகந்த ஆசையாக இருந்தது.

புது சைக்கிளைப் பார்த்ததும் அப்பா "என்னடா ! தருணுக்கா சைக்கிள்"

“இந்த சைக்கிள் ஓட்டுறதுக்கு வீட்டுல வேற பசங்க இருக்காங்களா....” என்றான் ராஜா.

 “நல்ல இருக்குடா.. !”

அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என் மனைவி கீழ வர "என்னங்க புது சைக்கிள் வாங்குனீங்களா ?"

ஆமாம் என்பது போல் தலையாட்டினான். "நேத்து வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் போது இல்ல சொன்னீங்க.. இப்போ எப்படி ? "

"கிரடிட் கார்ட் வச்சி வாங்கினேன்".

"எதுக்கு கடன் வாங்கி சைக்கிள் வாங்குன... என் கிட்ட கேட்டுருந்தா நா தந்திருக்க மாட்டேன்" என்று ராஜாவின் அப்பா பாசமாய் கூற, “நீயா..! உன்னால எனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. நீ எனக்கு பணம் தரப் போறீயா ? " என்று அப்பாவை ஏளனமாகப் பார்த்துவிட்டு தருணின் பள்ளியில் இருந்து வருவதற்காக காத்திருந்தான்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கடைசியில் ராஜாவும் தருண் போல பேசி விட்டாரே...! அவரின் அப்பாவும் அப்படித் தானோ...? இது ஒரு தொடர்கதை...?!

LinkWithin

Related Posts with Thumbnails