வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 28, 2013

RAW – உருவானக் கதை

“அப்பா காலம் வேறு. என் காலம் வேறு”

“அப்போது இருந்த இந்தியாவா இப்போது இருக்கிறது ?”

“வெள்ளையர் காலத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள், இப்போது பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு இரண்டு போர் (1947, 1965) தாக்குதல் நடத்திவிட்டார்கள். கம்யூனிஸ்ட் நமது நண்பர் என்று அப்பாவின் நம்பிக்கையை சீனாவின் போர் தாக்குதல் பொய்துவிட்டது.”

பகைவர்கள் படையெடுத்த பிறகு போர் நடவடிக்கை எடுப்பதை விட, பகைவர்களை கண்காணித்து போர் வரும் முன் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் இந்திரா காந்தி நினைத்தார்.

“ இந்தியாவில் பிறந்த சாணக்கியர் தான் உலகத்திற்கு “அர்த்த சாஸ்திரம்” என்ற நூலே கொடுத்தார். அந்த காலத்திலேயே அந்நிய மன்னர்களின் படையெடுப்பை எப்படி முன் கூட்டியே தெரிந்துக் கொள்வது, உள் நாட்டில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிற சக்திகளைப் பற்றி தகவல் திரட்டுகிறவதை எல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த புக்குல….”

“வரலாறு, அர்த்தசாஸ்திரம், சாணக்கியர் பற்றி எனக்கும் தெரியும். அதைப்பற்றி கேட்க எனக்கு இப்போது நேரமில்லை. அண்டை நாடுகளை கண்காணிக்க, அவர்கள் செயல்பாட்டை தெரிந்துக் கொள்ள ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ?”

 “புது உளவு நிறுவனம் தேவை” என்றார் தளபதி ஜென்ரல் சவுத்ரி.

“ஏற்கனவே, ஐ.பி ( Intelligence Bureau) என்ற உளவு நிறுவனம் அந்த வேலையை செய்கிறதே !”

“அது போதுமனதாக இல்லை. அந்நிய நாடுகளை கண்காணிப்பதற்கே தனி உளவுத்துறை இருந்தால் நல்லது” என்றார்.

“ஐ.பிக்கு என்ன தான் குறை ?”

“ 1962ல் இந்தோ – சீனா யுத்தத்தில் இந்தியாவுக்கு நேர்ந்த பின்னடைவுக்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம். 1965ல் நடந்த இந்தோ – பாகிஸ்தான் யுத்தத்தில் உளவு நிறுவனம் சரியாக செயல்படவில்லை. ஐ.பி. உள்நாட்டு, வெளிநாடு என்று இரண்டு குதிரை மேல் சவாரி செய்கிறது” என்றார்.

தளபதி ஜென்ரல் சவுத்ரி சொன்னது சரி தான். விடுதலை அடைந்து இருபது வருடத்தில் இரண்டு பெரிய யுத்தங்களை சந்தித்த பிறகு, அண்டை நாடுகளை வேவுப் பார்ப்பதற்கு ஒரு தனி உளவு நிறுவனம் வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்தார்.1968 அந்நியர்களை கண்காணிக்க ஒரு புது உளவு நிறுவனம் உருவாக்கினார். ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு என்று அந்த உளவு நிறுவனத்துக்கு பெயர் வைத்தனர். சுத்தமான ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Research & Analysis Wing. சுருக்கமாக R&AW. அதன் முதல் இயக்குனராக R.N.Kao என்பவரை நியமித்தார் பிரதமர்.

‘ரா’ என்ற உளவு நிறுவனத்துக்கு முழு வடிவம் கொடுத்தவர் ‘பிரதமர் இந்திரா காந்தி’ என்று சரித்திரத்தில் பொன்னான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails