வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 20, 2013

இரண்டு நூல் விமர்சனம்

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத் 

சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிப்பதற்கு சரியான நேரம் வேண்டும், அதற்கான மனநிலையில் படிக்க வேண்டும் என்று சமீபத்திய கடலூர் பயணம் உணர்த்தியது. கடலூருக்கு சென்று ஒரு நாள் வீணாக்கிவிட்டோமோ என்ற மனநிலையில் தான் “ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” படித்தேன்.

இந்த உலகம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நாம் தான் எவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து ஸ்வாரஸ்யமாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனை பிடித்திருந்தது. குறிப்பாக, கோபியின் நண்பர் தாமஸ் “தினமும் செல்லும் பாதை இருந்து வேறு பாதையில் அலுவலகத்துக்கு சென்று பாருங்கள்” என்று சொல்லும் போது… சின்ன சின்ன விஷயங்கள் நம்மை ஸ்வாரய்மாக்க காத்துக் கொண்டு இருக்கிறது. பிறகு, ஏன் ஸ்வாரஸ்யம் இல்லை என்று வருந்த வேண்டும்.

“ஒன்றுமே செய்யாமல் ஒரு நாள் வீணாக்கி விட்டோமே!” என்று வருந்திய நேரத்தில் உருப்படியாக செய்தது இந்த புத்தகத்தை வாசித்தது தான். 

வாங்க.... 

 ***

அபிதா – 
லா.ச.ரா 

 தனது பழைய காதலி சகுந்தலை அழகை உரித்து வைத்தது போலவே அவளது மகள் ‘அபிதா’ இருக்கிறாள். மகள் வயதில் இருக்கும். ஆனால், மகளாக நினைக்க தோன்றவில்லை. காதலியின் மகளாக இருந்தாலும், அவளைப் போலவே இருப்பவளை எப்படி மகளாக பார்க்க முடியும் ?. காதலா ? காமமா ? என்று ஒன்றும் புரியாத உறவின் வெளிப்பாடு. காதலியிடம் பேச முடியாத வார்த்தைகளை அவள் மகள் உருவத்தில் இருப்பவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை.

இப்படி விபரித ஆசைகளுடன் வீட்டுக்கு விருந்தினராக வந்தவனை வெகுளிதனமாக உபசரிக்கிறாள் அபிதா. ஒரு கட்டத்தில் தான் காதலித்தது சகுந்தலையா ? அவளது மகள் அபிதாவா ? என்ற சந்தேகிறது மனம்.

தமிழில் வாசிக்க வேண்டிய நாவல் வரிசையில் ‘அபிதா’ வுக்கு மிக முக்கிய இடம் உண்டு. இலக்கிய ஆர்வமுடையவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.

வாங்க....

2 comments:

கார்த்திக் சரவணன் said...

தினம் செல்லும் பாதையை விட புதிய பாதையில் செல்லும்போது சுவாரஸ்யம் உண்டு என்பது உண்மைதான்...

அந்நாளில் பேச விட்டுப்போனதையெல்லாம் பேசிவிடலாம் என்று நினைத்து விட்டாரோ என்னவோ...

திண்டுக்கல் தனபாலன் said...

அபிதா நாவலை வாசிக்க வேண்டும்... நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails