வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 17, 2009

தேர்தல் 2009 : காங்கிரஸ் நகைச்சுவை

காங்கிரஸ் : என்ன நடந்தாலும் சரி... இந்த தேர்தல்ல நாம தோக்க கூடாது... என்ன பண்ணலாம்.

ஆலோசகர் : நாம தேர்தல்ல கலந்துக்காம... புரக்கனிக்கனும்.

****

தொண்டர் : 1..2..3

காங்கிரஸ் : அணு ஒப்பந்தம் போட்டாச்சே.. பின்ன என்ன..123 சொல்லுற..

தொண்டர் : இந்த தேர்தல்ல நாம ஜெய்க்க போற சீட்ட சொன்னேன்.

****

சோனியா : அடுத்த தடவ ஆட்சிக்கு வந்தா 'ஈழம்' உருவாக உதவனும்

காங்கிரஸ் பிரமுகர் : என்ன திடீர் இந்த முடிவு.?

சோனியா : நேரு 'இந்தியாவிலிருந்து பாகிஸ்தான பிரிச்சாரு...
இந்திரா காந்தி 'பாகிஸ்தான்ல இருந்து பங்கலாதேஷ் பிரிச்சாங்க...
நான் எதையும் பிரிக்காம இருந்தா... நாளைய சரித்திரம் பிரிக்க தெரியாத நேரு குடும்பத்து மருமகள்னு தப்பா சொல்லுவாங்க.. அதான் இந்த முடிவு..

****

சிதம்பரம் : எங்க ஆட்சியில தான் பங்குசந்தை 21000 புள்ளிகள் வரைக்கும் போச்சு.

பத்திரிக்கையாளர் : ஆனா...இப்போ வீழ்ச்சி அடைஞ்சு 8000 புள்ளிகள் தான் இருக்கு...

சிதம்பரம் : எங்க ஆட்சி முடிஞ்சி தேர்தல் வரதினால இந்த வீழ்ச்சி. மீண்டும் எங்க ஆட்சி மக்கள் ஆதரவு கொடுத்தா பங்குசந்தை 40000 புள்ளிகள் வரைக்கும் போகும்.

****

ஜி.கே.வாசன் : இந்த தேர்தல்ல தோனி தலைமையில பிரச்சாரம் பண்ண வேண்டியது தான்.

தொண்டர் : அவரு இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆச்சே...

ஜி.கே.வாசன் : அவர் தலைமையில 'இந்திய கிரிக்கெட் அணி' ஜெய்க்கும் போது 'இந்திய காங்கிரஸ்' ஜெய்க்காதா...??

தொண்டர் :$%#%

ஒவ்வொரு கட்சியின் பற்றிய தேர்தல் நகைச்சுவைகள் தொடரும்....

3 comments:

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))))))

Bleachingpowder said...

//தேர்தல் 2009 : காங்கிரஸ் நகைச்சுவை//

தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் என்று எழுதினாலே போதும் பக்கத்தில் நகைச்சுவைன்னு தனியா ஒன்னும் குறிப்பிட்ட வேண்டாம்

குகன் said...

// Bleachingpowder said...
//தேர்தல் 2009 : காங்கிரஸ் நகைச்சுவை//

தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் என்று எழுதினாலே போதும் பக்கத்தில் நகைச்சுவைன்னு தனியா ஒன்னும் குறிப்பிட்ட வேண்டாம் //

எல்லா அரசியல் கட்சிகளும் இப்படி தான் இருக்கு... என்ன பண்ணுறது... :)))))

LinkWithin

Related Posts with Thumbnails