தினமும் தீபாவளி வெடி போல் இலங்கையில் ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துக் கொண்டு இருக்கிறது. பல அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். நம் அரசியல்வாதிகளும் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். உண்ணாவிரதம், போராட்டம் என்று பல நாடகங்கள் சமிபத்தில் நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. அவர்களுகாக....
இன்று இலங்கை வரலாறு பற்றி கேட்டால் இரத்தத்தால் எழுதப்பட்டது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !! அதற்கு முன் அமைதி, இயற்கை அழகு, வணிகம், விளையாட்டு என்று எல்லா நாடுகளை போல தான் இலங்கையும் இருந்தது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கயில் குடியேற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு இலங்கையின் இயற்கை அழகு கண்ணை உருத்தாமல் இல்லை. அன்றைய இலங்கையை சிலோன் என்று தான் அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் சிலோனின் தேயிலை, காபி தோட்டத்தில் வேலை செய்ய சிங்களர்களை அழைத்த போது யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. ஆனால், அதை பற்றி ஆங்கிலேயர்கள் கவலைப்படாமல் மலிவான வேலைக்காரர்களான தமிழர்களை அழைத்து வந்து வேலை வாங்கினர். பஞ்சத்தில் இருந்த தமிழர்களுக்கும் மிகுந்த சந்தோஷம். எங்கோ சென்று வேலை செய்வதை விட தமிழ் நாட்டில் அருகில் இருக்கும் சிலோனில் சென்று வேலை செய்வது பாக்கியமாக கருதினார்கள். அவர்களுக்கு சிலோன் ‘இன்னொரு தமிழ் நாடாக’ தான் தெரிந்தது.
1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக அறிவித்தனர். அதை சிங்களர்கள் எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் அரசு பதவியில் வேலைக் கொடுத்த போது சிங்களர்களை விட தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மாற்றங்களுக்கு தமிழர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமிழர்களின் வேலை திறமையை பார்த்த பிரிட்டன் அரசு 1931 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அரசாங்க பதவியில் உயர் பதவியும் அளித்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழர்களை பார்த்து சிங்களர்கள் மனதில் வெடித்துக் கொண்டு இருந்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போராடும் தைரியம் அவர்களுக்கு இல்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிக தீவிரமாக சுதந்திர போர் இலங்கையில் நடக்கவில்லை. வெள்ளையர்களுக்கு அடங்கி தான் இருந்தார்கள். அதனால் தானோ இலங்கை இலங்கையாகவே இருந்தது.
பிரிட்டன் இந்தியாவுக்கு விடுதலை அளித்த கையோடு இலங்கைக்கும் பிப்ரவரி 4,1948 அன்று சுதந்திரத்தை அளித்தது. சுதந்திர இலங்கைக்கு முதல் பிரதமராக டான் ஸ்டிபன் செனனாயகே (Don Stepen Senanayake) இருந்தார். அந்த சமயத்தில் பல துறையில் தமிழர்கள் முன்னேறி இருந்தார்கள். சிங்களர்களால் தமிழர்களுடன் போட்டி போட முடியவில்லை. வெள்ளையர்கள் இலங்கையை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் உண்மையான உருவம் தெரிய தொடங்கியது.
விடுதலைக்கு பிறகு தமிழர்கள் மீது சிங்களர்களுக்கு கோபம் அதிகமானது. நாளடைவில் அந்த கோபம் வெறியாக மாறியது. சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டு முடிவதற்குள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குரிமையை பறித்தது. 1956 ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட சாலமன் பண்டரநாயகா சிங்கள மொழியை அரசாங்க மொழியாக சட்டபூர்வமாக அங்கிகரித்து அறிவித்தார். தமிழர்கள் இதை எதிர்த்து போராடினர். விளைவு.... தமிழர் - சிங்களர் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. சிறுபான்மை தமிழர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அதிபர் சாலம் பண்டரநாயகா புத்த பிக்குவால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் பின் இலங்கையில் நடந்த எல்லா சம்பவங்களும் இரத்தத்தால் எழுதப்பட்டவை. மருந்துக்கு கூட “அமைதி” என்ற வார்த்தை அங்கு நிலவியதில்லை.
8 comments:
/இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை/
ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வக்குடிகள்
அவர்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை
தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம்
நன்றி
//எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. //
மற்றவர்களுக்கு தெரியுதோ இல்லையோ முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் தெரிகிறது.
எத்தனை நாட்களுக்கு தான் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் தான் இலங்கை தமிழர் என்று
சொல்லப்போகிறீர்களோ?
இலங்கையின் மத்திய பகுதியில் வசிப்பவர்களே(மலையக தமிழர்) இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
வட பகுதியில் வாழ்பவர்கள் (ஈழத்தமிழர்கள்) இலங்கையின் பூர்விக திராவிட இனம்.
தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்.
//இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !!//
இவ்வளவு வரலாறு எழுதும் உங்களுக்கு கி.மு 200 அளவில் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன்
துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த யுத்தம் பற்றி ஏன் தெரியாமல் போனது.
இலங்கை வரலாறு தொடக்கம் முதலே யுத்தம் தான்.
ராஜேந்திர சோழன் இலங்கையை வெற்றி கொண்டு ஆண்ட காலத்தில் இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டது.
அதன் பின்னரே ஆங்கிலேயர் சிலோன் ஆக்கினார்கள்.
மன கவலையுடனேயே எழுதினேன்.
நன்றி.
தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க வேண்டாம். தெரியாவிட்டால் மூடிட்டு அமைதியாய் இருக்கவும்.
///இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை/
ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வக்குடிகள்
அவர்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை
தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம் //
பல நூற்றாண்டு முன் குடி புகுந்த வைத்து இந்த வரிகள் எழுதினேன். ஒரு வரி என் கட்டுரையின் எண்ணத்தையே மாற்றிவிட்டது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
அந்த வரியை நீக்கி விடுகிறேன்.
// இவ்வளவு வரலாறு எழுதும் உங்களுக்கு கி.மு 200 அளவில் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன்
துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த யுத்தம் பற்றி ஏன் தெரியாமல் போனது.
இலங்கை வரலாறு தொடக்கம் முதலே யுத்தம் தான்.//
தங்கள் தகவலுக்கு நன்றி இனியவன் :)
// angusam said...
தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க வேண்டாம். தெரியாவிட்டால் மூடிட்டு அமைதியாய் இருக்கவும். //
வருகைக்கு நன்றி angusam.
மாயவன், இனியவன் பின்னூட்டம் மூலம் என் தவறை என்ன என்று புரிந்துக் கொண்டேன். மாற்றிக் கொண்டேன். மூடிட்டு இருந்தால் தவறுகள் தெரியாது.
தன் தவறை உணர்த்திய இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுயிருக்கிறேன்.உங்கள் பின்னூட்டத்தின் நோக்கம் என்னெவன்று தான் புரியவில்லை.
/பல நூற்றாண்டு முன் குடி புகுந்த வைத்து இந்த வரிகள் எழுதினேன். ஒரு வரி என் கட்டுரையின் எண்ணத்தையே மாற்றிவிட்டது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது./
உங்கள் நோக்கம் வரவேற்கத்தக்கது....!!!
ஈழத்தமிழர்கள் ஈழத்தில் குடிபுகவில்லை..
அவர்கள் ஈழத்துடன் இரண்டறக் கலந்தவர்கள்...
நீங்கள் ஈழத்தின் வரலாற்றை அறியவேண்டும் என்றால், முதலில் குமரிக்கண்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்...
நாங்கள் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவது,அனைவருக்கும் ஈழத்தின் வரலாறு பற்றி சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக...
நன்றி
// Maayavan said...
நீங்கள் ஈழத்தின் வரலாற்றை அறியவேண்டும் என்றால், முதலில் குமரிக்கண்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்...
நாங்கள் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவது,அனைவருக்கும் ஈழத்தின் வரலாறு பற்றி சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக...
//
நன்றி மாயவன் :)
Post a Comment