மில்டனின் பள்ளியின் நேருங்கிய என்று சார்லஸ் டியோடடி தான் சொல்ல வேண்டும். சார்லஸ் டியோடடி லண்டனின் உள்ள மருத்துவரின் மகன்.டியோடடியிடம் பல விஷ்யங்களை மில்டன் பகிர்ந்துள்ளார். உதாரணத்திற்கு, ஒரு சுவையான விஷயம். மில்டன் பள்ளி பருவத்தில் எமிலி என்ற பெண்ணை காதலித்தார். எல்லோருக்கும் பள்ளி பருவத்தில் வரும் அதே ஈர்ப்பு தான் எமிலி அழகின் மீது மில்டனுக்கும் வந்தது. எமிலி அழகை பற்றி கவிதைகளும் எழுதியிருக்கிறார். தன் காதல் அனுபவங்களை டியோடடியிடம் சொல்லுவார். எமிலி பற்றிய போதிய விபரங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் டியோடடியிடம் எந்த அளவில் நெருங்கி பழகிருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம்.
மில்டன் பிலாரன்ஸ் பயணத்தில் ஒரு சென்ற போது அதிர்ச்சியான செய்தி வந்தது. சார்லஸ் டியோடடியின் மரணம் தன் அந்த செய்தி. முதல் காதலும், முதல் நட்பும் நெஞ்சில் பசுமையான நினைவுகளாக இருக்கும். சார்லஸ் டியோடடியும் மில்டன் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருந்தார்.
மில்டனுக்கு நண்பர்கள் என்று எடுத்துக் கொண்டால் விரலை விட்டு எண்ணி விடலாம். படிப்பு, எழுத்து என்று கவனம் செலுத்திய மில்டன் நேரத்தை செலவு செய்ய விரும்பவதில்லை. பள்ளியில் டியோட்டி எப்படி மில்டனுக்கு நண்பரோ கல்லூரியில் மில்டனுக்கு எட்வர்ட் கிங் என்பவர் நண்பராக இருந்தார்.
மில்டன் எளிதில் ஒருவருடன் பழகி விட மாட்டார். அப்படி பழகிவிட்டால் அவரை சுலபமாக மறந்து விட மாட்டார். நாம் முன்பே பார்த்தது போல் தாமஸ் யங் மறக்காமல் தனது “Of Reformation” படைப்பை சமர்பித்தார்.
எட்வர்ட் கிங்கும் ஒரு கவிஞர் தான். மில்டனை விட இரண்டு வயது முத்தவர். இந்த வயது வித்தியாசங்கள் இவர்களின் நட்புக்கு தடையாக இல்லை. இருவரும் பல மணி நேரம் கவிதை, பாடல் பற்றி எல்லாம் பேசுவார்கள். எட்வர்ட் கிங்யிடம் பழகும் போது புத்தகத்தை படிப்பது போல் உணர்வு மில்டனுக்கு ஏற்ப்படும்.
1637ல் தன் குடும்பத்துடன் சுற்றுலா பயணத்திற்காக கப்பலில் சென்றுக் கொண்டு போது எட்வர்ட் கிங் பயணம் செய்த கப்பல் பாறையில் மோதியது. அதில் பயணம் செய்த எட்வர்ட் கிங் இறந்தார்.மில்டனின் அம்மா இறந்த அதே ஆண்டு ! தன்னை நேசித்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவதில் மிகுந்த மன வேதனையில் இருந்தார். 1638ல், தனது 'லிசிடஸ்' படைப்பை எட்வர்ட் கிங்க்கு சமர்பித்தார். எட்வர்ட் கிங் மரணத்தின் போது அவர் மனம் பட்ட வேதனையை எல்லாம் அந்த நூலில் சொல்லிருப்பார்.
மில்டன் வாழ்க்கையில் எந்த உறவுமே அதிகமாக நிலைத்ததில்லை. அவராக தேடிக் கொண்ட நண்பர்களும் மரணம் பிரித்துக் கொண்டு இருந்தது.
No comments:
Post a Comment