வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

10. மில்டன் ஒரு நாத்திகனா ?

நாம் முன்பே பார்த்தது போல் புராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோல்க் கிறித்துவ மதத்திற்கு மாற ம றுத்தவர்களை ப டுகொலை செய்ததை மில்டன் எதிர்த்தார். அதனால், மில்டன் மன்னராட்சியை எதிர்த்தும், கத்தோலிக் மத குருக்களை எதிர்த்தும் எழுதினார். அ தனால், பலர் மில்டன் கடவுள் நம்பிக்கையற்ற பழுத்த நாத்திகவாதி என்றே கருதினர்.

மில்டன் நாத்திகன் என்று உறுதி செய்தும் வகையில் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலும் அமைந்தது. சாத்தான் மனிதனை வெல்வதும், சாத்தான் கடவுளை எதிர்த்து புடட்சி செய்வதும் போன்ற நூலில் வரும் கட்டங்கள் மில்டன் ஒரு நாத்திகன் என்ற வாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இருந்தது.

பொய்யான குருமார்க்கர்களை தன் எழுத்து மூலம் மிகவும் சாட்டியவர் மில்டன். பொய்யான குருமார்க்கர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்வார்கள் என்று உணர்ந்தவர். தங்கள் நலனுக்காக யார் காலிலும் விழ வருத்தப்பட மாட்டார்கள், அதே சமயம் யார் காலையும் வார அஞ்ச மாட்டார்கள் என்று மில்டன் கூறுவார். பொய்யான குருமார்க்கர்களை பலர் ஏமாற்றி ஆலத்திற்குள் நுழைந்தவர் என்று சாட்டினார். மில்டனின் ஆரம்ப காலப்பாடல்களில் பொய்யான குருமார்கர்களை சாட்டி பல பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படி சமய சீர்த்திருத்தம் செய்த மில்டன் பலர் நாத்திகன் என்று முத்திரை குத்தி அவரின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள். ஆனால், உண்மையில் மில்டன் நாத்திகன் இல்லை என்பது தான் உண்மை.

மில்டன் ஆரம்ப காலத்தில் ஆலய பாதரியாராக வர தான் விருப்பபட்டார். அதன் போக்கை வேறுத்து தன் கவனத்தை இலக்கியத்தில் திசை திருப்பினார். அது மட்டுமில்லாமல், இறுதிகாலத்தில் அவர் எழுதிய பாடல்கள் இறை நம்பிக்கை அடிப்படையாக கொண்டது.

எதற்கு எடுத்துக்காட்டாக மில்டன் எழுதிய 'கோமஸ்'(1634) என்ற நாடக நூலை சொல்லலாம். கோமஸ் என்ற மந்திரவாதி காட்டில் ஒரு பெண்ணின் பாடல் ஒலி கேட்டு அவளை மனைவியாக அடைய விரும்புகிறான். அதனால் அவளை கவர்ந்து செல்கிறான். அந்த பெண்ணை தேடி போகும் சகோதரர்கள் களைத்து போகிறார்கள். அப்பொது ஒரு தேவதை அந்த பெண்ணின் சகோதரர்கள் முன் தோன்றி அந்த மந்திரவாதியை எந்த ஆயுதங்களாலும் கொல்ல இயலாது என்கிறாள். அந்த மந்திரவாதி கயில் இருக்கும் மது கிண்ணத்தை உடைக்க வேண்டும் என்ற யோசனையை சொல்கிறாள். அந்த சகோதரர்களும் மந்திரகிண்ணத்தை உடைக்கிறார்கள். கோமஸ் பயந்து தப்பி ஓடுகிறான். ஆனால், மந்திரவலை பிணைந்து இருக்கும் சகோதரியை மீட்க முடியவில்லை. மீண்டும் அந்த தேவதை அவர்கள் முன் தோன்றி அந்த பெண்ணை மந்திர வலையில் இருந்து அவிழ்த்து விடுகிறாள். இது மில்டனின் இசை நாடக கதை. இந்த கதையில் மில்டன் கோமஸ் என்ற மந்திரவாதியை புனித ஆவியாக கருதப்படும் தேவதை வீழ்த்த உதவுவதை சொல்கிறார். இந்த நூலை படிப்பவர்கள் மில்டன் கடவுள் நம்பிக்கை உடையவர் என்று தான் சொல்வார்கள்.

'பிரடைஸ்ட் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தவர்கள் மில்டனின் 'பிரடைஸ்ட் ரீகைன்' வர வேற்றனர்.'பிரடைஸ்ட் ரீகைன்' காவியத்தில் மனித இனம் எப்படி சாத்தானை வென்று சொர்க்கத்திற்கு மீண்டும் செல்கிறது என்பதை விழக்குகிறார். 'பிரடைஸ்ட் ரீகைன்' காவியம் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' அளவிற்கு பெரிய நூல் இல்லை என்றாலும் 'பிரடைஸ்ட் ரீகைன்'மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலுக்கு இரண்டாம் பாகமாக இருந்தது.

ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய பாடல்களை நியாயம் படுத்துவது போல் இறுதிகாலத்தில் இறைப்பாடல்களை எழுதியுள்ளார் என்று பலர் கூறுவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மில்டன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. தனது லட்சியமான பாதரியார் ஆவதை துரந்தவர். ஆலய குருமார்க்கர்கள் மன்னருக்கு துணையாக இருந்தது மில்டனுக்கு பிடிக்கவில்லை.

மில்டன் ஆலய மூடநமிக்கைகளை எதிர்த்து பல பாடல்கள் எழுதினார். ஆனால், மதவெறியர்கள் மில்டனை நாத்திகராக பிரதிபலித்து அவர் எழுதிய பாடல்களை புறக்கணித்தனர்.

மில்டன் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' நூலில் எழுதிய பின்னனியை பலரும் சிந்திப்பதில்லை. அந்த நூலில் சாத்தான் கடவுளை பழிவாங்கும் வகையில் புரட்சி வேளை செய்வதாக ஜான் மில்டன் கூறியுள்ளார். கடவுளுக்கு பதிலாக சார்லஸ் மன்னரையும், சாத்தான் பதிலாக மக்களையும் மனதில் வைத்து தான் எழுதினார். இதை தெரிந்தும் இன்னும் சில பேர் மில்டன் ஒரு நாத்திகர் என்று தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளை எதிர்த்து பல பாகங்களாக எழுதி விட்டு 'பிரடைஸ் ரீகைன்' காவியம் மூலம் சரி செய்ய பார்க்கிறார் என்று ஒரு சிலர் கூறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மில்டன் பொய்யான குருமார்க்கர்களை எதிர்த்தார். மதங்களை எதிர்க்கவில்லை.குருட்டு தனமாக மதத்தை பின்பற்றுபவர்களை எதிர்த்தார். தெய்வத்தை பழித்து ஒரு போதும் எழுதவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails