வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

9. பிரடைஸ் லாஸ்ட் ( சொர்க்க நீக்கம் )

குடும்பத்தை பற்றி நடக்கும் பட்டி மன்றங்களில் பெரும்பாலிம் ஜான்மில்டனின் பிரடைஸ் லாஸ்ட் மற்றும் பிரடைஸ் ரீகைன் நூல் பெயர் அடிப்படும். ஒரு பட்டி மன்றத்தில் ஆண்களுக்கு ஆதரவாக பேசும் பேச்சாளர் " ஜான் மில்டன் மனைவி கூட வாழும் போது பிரடைஸ் லாஸ்ட் என்னும் உலக காவியத்த எழுதினாரு...அவர் மனைவிய விட்டு போனதும்.... பிரடைஸ் ரீகைன் இன்னொரு காப்பியத்த எழுதியிருக்காரு..." என்று பேசினார். இது போதுவாக நகைச்சுவைக்காக பட்டி மன்றத்தில் பேசுவார்கள். ஜான் மில்டன் அண்ணாதுரை அவர்கள் ஒர் இரவில் 'ஒர் இரவு' நூலை எழுதியது போல் 'பிரடைஸ் லாஸ்ட் ' காப்பியத்தை எழுதவில்லை. மில்டன் பிரடைஸ் லாஸ்ட் நூலை எழுத எத்தனையோ ஆண்டுகளை செலவிட்டார். பல ஆண்டுகள் எழுதி வெளியீட்ட நூலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால்,அதுவுமில்லை. அந்த காப்பியத்தை யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டுமில்லாமல் பலர் அந்த காப்பியத்தை வெளிவரக் கூடாது என்று தான் எதிர்த்தார்கள். மில்டனுக்கு பல மிரட்டல்களை சந்திக்க வேண்டியது இருந்தது.

உலகப் புகழ் பெற்ற 'பிரடைஸ் லாஸ்ட்' வெளிவந்து பதினோரு வருடங்களில் மூவாயிரம் பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டது. ஆனால், அதை பற்றி மில்டன் கவலைப்படவில்லை. எண்ணிக்கை குறைந்த போதிலும் தகுதி படைத்த வாசகர்கள் கிடைத்தை நினைத்து ச்ந்தோஷப்பட்டார். குறைவான பிரதிகள் விற்கப்படுவதை நினைத்து ஒரு நாள் கூட வருத்தப்பட்டதில்லை. வாசகர்களின் எண்ணிக்கைகளை விட அவர்களின் அறிவுத்திறமை தான் விரும்புவார்.

உலகப்புகழ் பெற்ற பிரடைஸ் லாஸ்ட் காவியம் ஏன் அதிகம் விற்கப்பட்டாமல் இருந்தது ? பலரும் எதிர்க்கும் அளவிற்கு அப்படி என்ன 'பிரடைஸ் லாஸ்ட்' காப்பியத்தில் என்ன எழுதினார் ?

'பிரடைஸ் லாஸ்ட்' முன்னுரையாக எழுதப்பட்ட வரிகள் பழைய கவிதை மரபினையை கைவிட்டதை கூறுகிறார். அது மட்டுமில்லாமல் எதுகை மோனையைத் தவிர்த்து செய்யுள் முறையில் இக்காவியத்தை எழுதியுள்ளார். இப்படி மில்டன் செய்திருப்பது ஆங்கில மொழிக்குப் புதியது.செய்யுள் வடிவமாக இருந்தாலும் படிப்பதற்கு எளிமையாக இல்லமல் மிகவும் கடினமாக இருக்கும்.

முதல் பதிப்பில் பத்து நூல்களாக 1667ல் வெளிவந்தது. அதன் பின் இரண்டாவது பதிப்பில் பன்னிரண்டு நூல்களாக 1674ஆம் ஆண்டு வெளிவந்தது.பிரடைஸ் லாஸ்ட் நூலில் முக்கிய கதாப்பாத்திரங்களாக லுசிபையர் என்னும் சாத்தானும், ஆதாம், ஏவாள் மற்றும் கடவுள் வருகிறார்கள்.

பலர் மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்த முக்கிய காரணம் அவர் சாத்தானை மையமாக வைத்து எழுதியிருந்தார். சாத்தானிடம் மனிதன் எப்படி வீழ்ச்சி அடைந்தான் என்பதை பன்னிரண்டு நூல்களாக 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தில் எழுதினார். சாத்தான் வெற்றி பெரும் கதையை யாராலும் எற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதனின் வீழ்ச்சிக்கு காரணமாய் இருந்த சாத்தனிடமிருந்து தன் கதையை தொடங்கிருக்கிறார் மில்டன். சாத்தான் கடவுளை எதிர்த்து புரட்சி செய்த காரணத்திற்காக விண்ணுலகிலிருந்து விரட்டப்படுகிறான். தனக்கு உதவியாய் இருந்த தேவர்களும் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். சாத்தானுக்கு அடுத்தப்படியாக இருக்கும் பெயல்செபு என்பவனுடன் கடவுளை வீழ்த்த சாத்தான் ஆலோசனை நடத்தினான். தன்னுடன் இருக்கும் வீழ்ந்து கிடப்பவர்களிடம் புதிய விண்ணுலகத்தை வெற்றி பெற ஊக்கப்படுத்துகிறான். கடவுளை வெற்றிப் பெற ஆலோசனை நடத்த மண்டபம் கட்டுகிறார்கள். இது எல்லாம் 'பிரடைஸ் லாஸ்ட்' வரும் முதல் நூலின் சுருக்கம்.

இரண்டாவது நூலில் கட்டப்பட்ட மண்டபத்தில் நடந்த ஆலோசனைகளை பற்றி விவரிக்கிறார். அந்த ஆலோசனையில் கடவுளை வெல்ல இன்னொரு யுத்தத்தை பற்றியும், கடவுள் உருவாக்க போகும் இன்னோரு உலகத்தை பற்றியும் பேசினார்கள். புதிய உலகம் கடவுள் உருவாக்கும் செய்தியை உறுதி செய்து கொள்ள சாத்தான் புரப்படுகிறான். அது வரை நரத்தில் இருந்த சாத்தான் வெளியே வந்து புதிய உலகம் பார்க்க வருகிறான். சாத்தானுடன் இருந்த தேவர்களும் அவனை வழி அனுப்பி வைக்கிறார்கள்.

முன்றாவது நூலில் கடவுள் சாத்தான் வருவதை தன் தீர்க்க தரிசனத்தால் தெரிந்து கொள்கிறார். மனிதன் சாத்தானை வெல்ல ஆற்றல் இருந்தும் சாத்தான் மனித குலத்தை வெற்றி கொள்ள போவதை உணர்கிறார். மனிதன் வீழாமல் இருக்க வேண்டும் என்றால், அவன் குற்றம் புரியாமல் இருக்க வேண்டும். மனிதன் குற்றம் புரிந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. ஆதனால், மனிதனுக்கான தண்டனை ஏற்றுக் கொள்ள கடவுள் தேவகுமாரணை அனுப்புகிறார்.

நான்காம் நூலில் சாத்தான் தேவன் உருவத்தில் புதிய உலகத்தை அடைகிறான். அங்கு வசிக்கும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அறிவுக்கனி உண்ண தடையிருப்பதை சாத்தான் தெரிந்து கொள்கிறான். ஏவாள் காதில் தீய உரைகள் நிகழ்த்தும் போது அங்கு இருந்த காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டு, இறுதியில் சாத்தான் அஞ்சி ஒடுவதாக முடிகிறாது.

ஐந்தாவது ஏவாள் தான் கண்ட கெட்ட கனவை ஆதாமிடம் கூறுவதும், அதற்கு ஆதாம் ஆறுதல் கூறுவதாக தொடங்குகிறது. மனிதனின் எதிரி மிக அருகில் தான் இருக்குறான் என்று சில தேவர்கள் ஆதாமுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்து கடவுக்கு எதிராக தன் பக்கம் மனிதனை சேர்த்துக் கொள்ளும் தீய சக்தி பற்றி இங்கு விவரிக்கிறார்.

ஆறாவது நூலில் தேவர்கள் சாத்தானின் புரட்சியை பற்றி விளக்குவதில் தொடங்குகிறார். சாத்தான் எதிர்க்கும் போரில் தேவ குமாரர்கள் வெல்ல வேண்டும் என்று கடவுள் விரும்புவதாக கூறுகிறார். ஏழாவது நூலில் ஆதாமுக்கு உலகத்தை பற்றி தேவர்கள் கூறும் அறிவுரை தொடர்கிறது. ஆதாமுக்கு உலகத்தை பற்றி எழும் சந்தேகங்களை தேவர்கள் நிவர்த்தி செய்வதாக எட்டாவது நூல் அமைகிறது.

இவ்வளவு பெரிய காவியத்தில் திருப்புனையாக இருப்பது ஒன்பதாம் நூலில் அமைகிறது. சாத்தான் பாம்பு வடிவத்தில் ஏவாளுக்காக காத்திருக்கிறான். தோட்ட வேலைக்காக வந்த ஏவாளிடம் அவளை புகழ்ந்து பேசுகிறான். ஒரு பாம்பு பேசுவது ஏவாளுக்கு மிக பெரிய விஷயமாக இருந்தது. பாம்புக்கு எப்படி பேசும் திறன் வந்தது என்று ? ஏவாள் கேட்டாள். அதற்கு பாம்புருவில் இருந்த சாத்தான் தடை செய்யப்பட்ட அறிவுகனியை உண்டதால் பேச முடிந்தது என்று கூறுகிறார். மலைப்படைந்த ஏவாள் அந்த கனியை உண்ண ஆசைப்படுகிறாள். மனதில் இருந்த பயத்தால் அது வரை தொட தங்கிய ஏவாள், சாத்தானின் இனிமையான வார்த்தைகளின் தூண்டுதலில் பேரில் அந்த கனியை உண்டாள். அந்த கனியை உண்ட ஏவாள் ஆதாமுக்கும் கொண்டு செல்கிறாள். ஆதாம் அதிர்ச்சி அடைக்கிறான். எனினும் ஏவாள் மீது உள்ள காதலாலும், அவள் கட்டாய படுத்தியதாலும் ஆதாமும் அந்த கனியை உண்கிறான். அதன் பின் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்கள்.

பத்தாவது நூலில் புதிய உலகிற்கு வந்த தேவர்கள் குற்றம் செய்த ஆதாமையும், ஏவாளையும் தண்டிக்கிறார்கள். இருவரையும் சொர்க்கத்தை விட்டு விரட்டியடிக்க உத்தரவிடுகின்றனர். கருணையை வேண்டி ஆதாமும், ஏவாளும் கடவுளை வேண்டினர். மனிதனை வென்ற சாத்தான் தன் வெற்றியை தன் கூட்டத்தினறிடம் கூறுகிறான். சாத்தான் கூட்டத்தினர் அவனை பாராட்டாமல் சாத்தானை திட்டினர். சற்று நேரத்தில் சாத்தான் உட்பட அந்த கூட்டத்தில் அனைவரும் பாம்பாக மாறினர்.

பதினொன்றாம் நூலில் ஏவா ளும் ஆதாமும் பிராத்தனை செய்ததில் கடவுள் கருணை புரிகிறார். இருவரையும் சொர்க்கத்தில் இருந்து வழி அனுப்ப மைக்கேல் வருகிறார். மைக்கேல் ஆதாமிடம் தேவக்குமாரன் மனிதகுலத்தில் பிறந்து சாத்தானை வென்று மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்பான் என்று மைக்கேலுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இறுதி நூலில் ஆறுதல் அடைந்த ஆதாமும், ஏவாளும் சொர்க்கத்தை விட்டு வெளியெறினர். மைக்கேல் இருவரும் வழி நடத்தி சொர்க்கத்தை விட்டு வெளியே அனுப்பினார். இருவரும் வருகாலத்தை பற்றி கனவு கண்டு சொர்க்கத்தை விட்டு வெளியே வந்தனர்.

இது தான் பன்னிரண்டு நூல்களின் சாரம். இப்பொது புரிந்திருக்கும் ஏன் பலர் 'பிரடஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள் என்று. சாத்தான் மனிதனை வென்ற கதை. குற்றத்திற்கு தண்டனையாக மனிதன் சொர்க்கத்தை விட்டு வெளியேறியது. சாத்தானை நாயகன் அளவிற்கு உயர்த்தி எழுதியது. இப்படி பல காரணங்களால் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தனர்.'பிரடைஸ் லாஸ்ட்' பிறகு மில்டன் எழுதிய நூல்களை யாரும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பட தக்கது.

இக்காலத்தில் 'சாத்தானின் கவிதைகள்' என்று நூலை எழுதிய சல்மான் ருஸ்டி எதிர்ப்புகளை விட மில்டனுக்கு அதிகம். இக்காலத்திற்கே இப்படி என்றால் அக்காலத்தின் மக்களின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஒரு சிலர் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை கூட எறித்தார்கள். அன்று பலரு எதிர்த்த நூல் இன்று ஆங்கிலத்தில் மிக பெரிய இதிகாசமாக கருதப்படுகிறது. நல்ல நூல் காலம் கழிந்து தான் அங்கிகாரம் கிடைக்கும் என்பதற்கு 'பிரடைஸ் லாஸ்ட்' நூல் ஒரு உதாரணம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails