வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

8. மில்டனின் எழுத்து

ஒருவன் எப்படி கவிஞனாகினான் என்று யாராலும் கூற முடியாது. படித்தால் எந்த துறையில் வேண்டுமென்றாலும் நுழைந்து விடலாம். கவிஞனாகுவது படிப்பு, பட்டம் என்று எதுவும் தேவையில்லை. ஏழாவது படித்த முத்தையா ஒரு கண்ணதாசனாக மாறியது போல் உலகத்தில் இருக்கும் அனைத்தையும் ரசிக்க தெரிந்தவன் தான் சிறந்த கவிஞனாகுகிறான்.

மில்டன் ஒரு புரட்சிகரமான எழுத்டாளர் தான். மீண்டும் மன்னராட்சி மலர்ந்த பிறகு அரசசியலில் இருந்து விளகி கொண்டார். பிறகு மில்டன் காதல், ஆன்மீகம் பற்றி பாடல் எழுதினார். பார்வை இழந்த மில்டனுக்கு இறுகாலத்தில் காதல் பற்றி எழுத உத்வேகமாய் இருந்தவர் அவரின் மூன்றவ்து மனைவி தான்.

மில்டனின் கவிதை திறமை உலகிற்கு காட்டிய 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் சாத்தானின் நிலையினை மிக அழகாக கூறுப்பிடுகிறார். தன்னுடன் வீழ்ந்து கிடக்கும் தேவர்களை எழுப்ப முனையும் போது தன்னையும் மீறி கலங்கி போய் விடுகிறான். இந்த கட்டத்தில் சாத்தானை நாயகன் அளவிற்கு உயர்த்தி எழுதியிருப்பார்.

ஆங்கிலத்தில் உவமைகளை அதிக பயன்படுத்தியவர் மில்டன் தான். தான் கூற வருவதை அதற்கு நிகரான பொருட்களுடன் ஒப்பிட்டு மிக எளிதாக படிப்பவர்களுக்கு புரிய வைப்பார். மில்டனின் கவிதையில் காணப் பெறும் கவர்ச்சியே அவருடைய உவமைத்திறனாக தான் இருக்கும். சில உவமைகளை விளக்கும் போது உவமானத்தை பற்றிய வர்ணனை, படிக்கும் உவமேயத்தை மறக்கும் அளவிற்கு இருக்கும். இன்னொரு இடத்தில் சாத்தானுக்கும், மைக்கேலுக்கும் நடக்கும் போரில் இரண்டு கிரகங்கள் ஒன்றோடோன்று மோதிக் கொள்வது போல் இருந்தது என்று மில்டன் வர்ணிக்கிறார்.

ஒரு சிலர் மில்டனின் உவமை திறனை கடுமையாக விமர்சித்து வந்தனர். மில்டனுடைய உவமையில் எடுத்துக் கொண்டு பொருளை விட்டு விலகி செல்வது போல் உள்ளது என்று குறைக் கூறுவாரகள். சில இடங்களில் அப்படி தெரிந்தாலும் சரியான நேரத்தில் மில்டன் உரிய பொருளை நம் முன் கொண்டு வந்து நிருத்தி விடுவார். இன்று யாராவது ஆங்கிலத்தில் உவமைகள் கவிதை எழுதினால் மில்டன் நடை என்று சொல்லும் அளவிற்கு மில்டனின் உவமைகள் இருக்கும்.

'பிரடைஸ் லாஸ்ட்' நூல் சாத்தானின் கேடயத்தை நிலவுடன் ஒப்பிட்டுகிறார். ஜூபிட்டர் என்னும் கடவுளுடன் சாத்தான் போரிடும் போது சாத்தானை கடல் வாழ் மிருகத்துடன் ஒப்பிட்டுகிறார். இந்த இடத்தில் சாத்தானை மறந்து விட்டு கடல் வாழ் மிருகத்தை பற்றி விவரமாக கூற ஆரம்பிக்கிறார் மில்டன். எட்டு வரிகளில் அந்த மிருகத்தை விளக்கிய பிறகு மீண்டும் சாத்தானை நினைவு கூர்ந்து சாத்தானை பற்றி விவரிக்கிறார். 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் சாத்தானுக்கு ஒவ்வொரு உவமைகளையும் மில்டன் நன்கு யோசித்து எழுதியிருக்கிறார். ஆனால், மில்டன் இந்த உவமைத்திறனை அவருக்கு எதிரியாக இருந்தது. மில்டன் சாத்தானுக்கு பல உவமைகள் எழுதியதால் பலர் 'தமது அறிவுத் திறமையை தேவையற்ற முறையில் வெளிக்காடி இருக்கிறார்' என்று மில்டனை குற்றம் சாட்டினர்.

மற்றவர்கள் வேண்டுமால் இரவில் பேய் வரும் என்று பயம் வரலாம். ஆனால், கவிஞனுக்கு இரவில் தானே கற்பனை திறன் அதிகமாகும். மில்டன் எழுத முடிவு செய்துவிட்டால் இரவில் விழித்தாவது எழுதி விடுவார்.

மில்டன் எப்பொதும் கவிதையை முன்பே யோசனைசெய்தோ அல்லது திட்டமிட்டோ எழுதியதில்லை. உள்ளத்தில் வெளிப்பாடு கவிதை என்று நன்கு உணர்ந்தவர் மில்டன். ‘தானாய் வந்தால் தான் கவிதை, நாமாக வர வழைத்தால் கட்டுரை’ என்பார். 'முன் கூட்டியே ஆழ்ந்து எண்ணிப் படப்பதை விட மனதில் நொடிப் பொழுதில் வரும் சிந்தனையை கவிதையாக எழுத வேண்டும்' என்று மில்டன் அடிக்கடி கூறுவார். அப்படிப்பட்ட கவிதைகள் தான் மனதை தொடும் என்பார். எழுத வேண்டுமே என்பதற்காக ஒரு பொதும் மில்டன் எழுகியதில்லை.

மில்டனின் உள்ளத்தில் வெளிப்பாட்டாக இந்த வரிகளை உதாரணத்திற்கு சொல்லலாம்.

".... Thus with the year
Seasons return, but not to me returns
day or the sweet approach of Evin or Mor
or sight of vernal bloom or summer's rose;
or flocks or herds or human face divine
But cloud instead and even during dark
surround me........"

'பருவங்கள் மாறி வரும் கால ஒட்டத்தில் எனக்கு பகலோ, காலையோ அல்லது இனிமையான மாலை வேளையின் வரவோ தெரிவதில்லை. கோடையில் மலரும் ரோஜா, வசந்தகாலத்தின் மொட்டு, மனிதனின் தெய்வீக முகம் எதுவுமே என் கண்ணுக்கு தெரிவதில்லை. என்னை சுற்றி இருள் மட்டுமே உள்ளது' என்று 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் மறைமுகமாக தன் குருட்டு தன்மை நினைத்து வருந்துகிறார். கலைஞனும், கவிஞனும் சோகத்தில் இருக்கும் போது தான் அவர்களின் உண்மையான திறமஒ வெளிப்படும் என்று சொல்வார்கள். மில்டன் வருத்ததில் பல கவிதை எழுதியதால் அவர் இயற்றிய கவிதை சோகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

இக்காலத்தில் மட்டுமல்ல அ க்காலத்தில் கதாநாயகனின் வீரத்தையும், பலத்தையும் பற்றி தான் பலர் பாடி வந்தனர். அப்பொது கதாநாயகனின் யுத்தங்களையும், சாகசங்களையும், புத்தி கூர்மையும் பற்றி எழுதினர். இப்பொது கதாநாயகனின் சண்டை 'சாங்காக'(SONG) எழுதுகிறார்கள். ஆனால், மில்டன் தன் படைப்புகளை வீரகாவியமாக கருதினாலும் நாயகனின் உடல் பலத்தையோ அல்லது வீரத்தையோ அதிகம் புகழவில்லை. நல்ல குணமும், வெற்றியும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே ! பல இடங்கலில் நாயகர்களின் துக்கம், சோகம் சூழ்ந்து கொண்டு இருபதை போல் எழுதியிருப்பார்.

மில்டன் எழுதுவதற்கு உத்வேகமாக இருந்தவர் ஷேக்ஸ்பியர். அவர் பற்றி மில்டன் தன் எழுத்துக்களில் சொல்லாமலில்லை. 1632ல் ‘On Shaekspeare’ என்ற படைப்பை எழுதினார். மில்டன் தன்னுடைய அலெக்ரோ என்னும் பாடலில் 'இனிமையான ஷேக்ஸ்பியர்!' என்று அழைக்கிறார். ஷேக்ஸ்பியர் மரணத்தின் போது 'ஷேக்ஸ்பியருக்கு நினைவு சின்னம் எதற்கு' என்று கேள்வி எழுப்புகிறார். 'ஷேக்ஸ்பியர் எலும்புகளின் மேல் அடுக்கப்பட்ட கோபுரம் எதற்கு ? அவரது தேவீக அஸ்தியில் நடசத்திரத்தின் கீழ் பிரமிடு வடிவ கோபுரம் எதற்கு ? நினைவுகளுக்கெல்லாம் வழித் தோன்றல் ஷேக்ஸ்பியர் ! பெரும் புகழுக்கு வாரிசு ஷேக்ஸ்பியர் ! நம் எல்லோருடைய வியப்பிலும் நிலைத்திருக்கக் கூடிய நினைவு சின்னம் ஒன்று ஷேக்ஸ்பியர். நம் எண்ண ஒட்டங்களில் அவர் எப்போது உஇருடன் இருப்பார்" என்று ஷேக்ஸ்பியரின் மரணத்திற்கு பாடினார் மில்டன்.
மில்டனின் எழுத்துக்களை பற்றி சொல்லும் போது அவருடைய சோனட் (Sonnet) கவிதை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. சோனட் கவிதை... எங்கோ கேள்வி பட்டது போல் உள்ளதா...!! ஆங்கில பாடங்கலில் சோனட் கவிதை படிக்காமல் யாராலும் அடுத்த வகுப்புக்கு போக முடியாது. பதினான்கு வரிகள் கொண்ட கவிதை. பெரும் பாலான தன் சோகங்களை அழகாக சோனட் கவிதையில் சொல்லியிருப்பார். சோனட் கவிதை எழுதுயவர்களின் கவிஞர் பட்டியலில் எடுத்து பார்த்தால் மில்டனுக்கு தனியிடம் உண்டு.
கண்ணில்லாத மில்டன் உலகத்தை எப்படி ரசித்திருப்பார் என்ற சந்தேகம் எழக்கூடும் ? அவரால் ரசிக்க முடியாவிட்டாலும் உணர்வுகளை புரிந்துக் கொள்ள கூடியவர். அதனால் தான் அவரின் எழுத்துகளில் ஜீவன் இருக்கும்.மில்டன் படைப்புகளில் போதுவாக சோகம், விரக்தி எப்பொதும் சூழ்ந்து இருக்கும் என்பது பறுக்க முடியாத உண்மை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails