காலம் யாரையும் விட்டு வைத்ததில்லை. மில்டன் மட்டும் இதில் விதி விளக்காக எப்படி இருப்பார். இங்கிலாந்து மக்களுக்காக புரட்சி கவிதைகளை எழுதியவர். வாழ்க்கையை ஒரு போராட்டமாக வாழ்ந்தவர். அனைத்தும் முற்றுப்புளி போல் அவர் மரணம் வந்தது. நவம்பர் 8, 1674 அன்று தன்னுடிய அறுபத்தியைந்தாவது வயதில் லண்டனில் இறந்தார்.
சேக்ஸ்பியர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மில்டன் தன் எழுத்துக்களாலும் பலரை கவர்ந்திருக்கிறார். மில்டனின் எழுத்துக்கள் பல கவிஞர்கள் உருவாக காரணமாக இருந்தது என்று கூட சொல்லலாம். அலெக்ஸாண்டர் போப், வில்லயம் பிலேக், வில்லியம் வொட்ஸ்வொர்த், ஜெப்ரி ஹில், ஜான் கீட்ஸ் இப்படி பல வரலாறு புகழ் பெற்ற கவிஞர்களுக்கு மில்டன் ஒரு வழி காட்டியாகவே திகழ்ந்தார்.
உடல் ஊனமுற்றவர்களுக்கும் மில்டன் என்று உத்வேகமாக இருந்திருக்கிறார். 1928ஆம் ஆண்டு மில்டன் பெயரில் கண், காது இல்லாதவர்களுக்காக் ஜான் மில்டன் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. அதை தொடங்கியர் யார் தெரியுமா... ஹெல்லன் கெல்லர் !! ஆம். அவரை கூட நாம் பாட புத்தகத்தில் படித்திருப்போம். பிறவியில் கண் இல்லாமல், காது கேட்காமல் பிறந்தவர். அதனால், வாய் பேசாமல் கூட முடியாமல் ஊமையானார். ஹெல்லன் கெல்லருக்கும் உத்வேகமாய் இருந்தவர் ஜான் மில்டன் தான் !!
இன்று, பலர் சாத்தானை பற்றியும், சாத்தானை அழிப்பது பற்றியும் மாயா ஜால கதைகள் வந்துக் கொண்டு இருக்கிறாது. ‘Lord of the Rings’, ‘Harry Potter’ போன்ற கதைகளுக்கு 'Paradise Lost' நூல் மூலம் பிள்ளையார் சுழி போட்டவரும் நமது ஜான் மில்டன் தான்.
இன்று எல்லா ஆங்கில பாட புத்தங்களிலும் மில்டன் பாடல் இல்லாமல் இல்லை. 'On his blindness' பாடலை படிக்காத மாணவன் இருக்க முடியாது. அவரின் சோனட் (Sonnet) கவிதைகள் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புத்தகத்திலும் இருக்கும். இன்றும் மேல்நிலைப்பட்டங்களுக்காக பலர் மில்டனின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் மில்டன் பெருமையுடன் நினைத்து பார்க்கும் வேளையிலும் மில்டன் கவிதைகளை கடும் விமர்சனம் செய்யும் செய்திகளும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. யார் என்ன சொன்னாலும் இந்த கவிதை உலகில் மில்டன் என்றுமே ஒரு மைக்கல். அதை யாராலும் மறுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.
No comments:
Post a Comment