வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 10, 2009

சாமியாரின் மூக்குடைத்த நடிகர் !

பிரபல நடிகர் ஒருவர் சாமியாரை பார்க்க சென்றிருந்தார். பேச்சு வழக்கில் அந்த சாமியார், "விபச்சாரம் செய்த பணத்தை புண்ணியம் பெற செலவழிப்பது போன்ற தான், சினிமாகாரன் செய்யும் இந்த தர்ம காரியங்கள்" என்று நடிகனை பார்த்து சொன்னார்.

ரொம்பவும் அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகள் அந்த நடிகனுக்கு பிய்த்துக் கொண்டு வந்தன.

" ஐயா ! இவ்வளவு தூரம் ஒட்டு மொத்தமாகச் சினிமாக்காரனை நீங்கள் கேவலப்படுத்திய பிறகு ஒன்றைச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். துறவியாக வாழும் உங்களைவிட நடிகன் மேலானவன். குடும்பஸ்தனாக வாழ்ந்து, சிற்றின்ப சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து ஒய்ந்து முடியாத வயதில் நீங்கள் துறவியாகியுள்ளீர்கள் ! பிள்ளைகள் பெற்றிருக்கிறீர்கள். பேரக் குழந்தைகள் உள்ளனர்."

" ஊரைவிட்டு ஒதுங்கி அசிரமம் போட்டு அமர்ந்து சலங்களுக்கும் அவலங்களுக்கும் இடம் கொடாத சூழ்நிலையில் வாழ்கிறீர்கள். இந்த வயதில் இந்த சுழ்நிலையில் துறவறத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு பெரிய காரியமாக படவில்லை."

"நான் சினிமாக்காரன்...! கூத்தாடி தான். எதையும் அனுபவிக்க ஆசைப்படும் வயது, வசதி வனப்பு எனக்கு இருக்கிறது...! 25 வயதாக இருந்தபோதும் 15 வயது பெண் கதாநாயகி, 40 வயதாகும் போதும் 15 வயதில் புதுப்பெண் கதாநாயகி...! பொழுது கிளம்பி விழும்வரை விதி விதமாக பெண்களோடு, விரும்பாவிட்டாலும் நான் நடித்தாக வேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும் ! உருள வேண்டும்."

" மனிதன் அனுபவிக்க ஆசைப்படும் அனைத்து இன்பங்களும் போகங்களும் என்னை சுற்றி நர்த்தனம் புரிகின்றன. நான் ஸ்ரீ ராம பிரானுமல்ல, புத்தனுமல்ல. ஒரு சராசரி மனிதன். சினிமா எனக்குத் தொழில். என்னை சுற்றி இருப்பவை எல்லாம் காட்சிப் பொருட்கள். அவை அனுபவிக்க அல்ல." என்ற மனப்போக்கை வளர்த்துக் கொண்டு போர்க்களத்தின் நடுவே புத்த பிட்சுவாக வாழ்ந்து கொண்டுவரும் நான், உங்களை விட மேலானவன் தான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு வேகமாக வந்துவிட்டார் அந்த நடிகர்.

அந்த நடிகர் சிவகுமார்.

தகவல் : "இது ராஜப்பாட்டை அல்ல" புத்தகம்

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சினி துறையில் இவர் ஒரு மாறுபட்ட மனிதர்
அருமையான பதிவு .........

Jawahar said...

ஒரு பெண்ணைக் கட்டிப் பிடிப்பேன், மேலே உருளுவேன் ஆனாலும் எனக்கு தப்பான உணர்வு வராது என்று எந்த ஆணாவது சொன்னால் மருத்துவ ரீதியாக அவருக்கு எதோ டிபிஷியன்சி இருக்கிறது என்று பொருள். வரும் ஆனால் அடக்கிக் கொள்வேன் என்றால் பொய் என்று அர்த்தம். ஆரம்பத்திலே எல்லாம் இருந்தது, இப்பெல்லாம் மரத்துப் போச்சு என்றால் நிஜம்.

http://kgjawarlal.wordpress.com

Indy said...

Please read this also.


http://velichathil.wordpress.com/2009/08/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5/

LinkWithin

Related Posts with Thumbnails