வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 27, 2009

யாரோ ஒருத்தி



சிறுவயதில் இருந்து விரல் சப்பி பழக்கப்பட்ட எனக்கு, சிகரெட் தான் சரியான ஆல்டர்னெடாக இருந்தது. இருபது வயதானவன் விரல் சப்பினால் எவ்வளவு கேவலமாக இருக்கும் ? வயதானாலும், உதடு சுவைத்துக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. தற்சமயம் அந்த எதோ ஒரு தேவை.... சிகரேட் தான். நண்பனை கிங்ஸ் வாங்க அனுப்பி விட்டு, சாலையில் செல்லும் வாங்கனங்களையும், சிகனலையும் பார்த்துக் கொண்ட்டு இருந்தேன்.

பச்சை.... மஞ்சல்....சிவப்பு.... சிவப்பு.. பச்சை.. மஞ்சல்.

பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்னல் எவ்வளவு கொடுமையானவை. மனிதன் வசதிகாக கண்டு பிடித்தது எல்லாம் மனிதனுக்கு எதிரியாக இருப்பது வியப்போன்றுமில்லை. அதில் சிக்னல் தவிர்க்க முடியாத ஒன்று.

எதிர் சாலையில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மார்டன் ட்ரெஸ் போட்ட பெண் சாலையை கடந்து நான் நிற்கும் பஸ் நிற்கும் பஸ் பயணிகள் குடைக்குள் வந்தாள். நெற்றியில் சிவப்பு பொட்டு, ஸ்லீவ் லெஸ் பச்சை டி ஷர்ட், ஜீன்ஸ் என்று அணிந்திருந்தாள். ஸ்லீவ் லெஸ் டி ஷர்ட் போடும் பெண்களை ஒரு ஆண் எதை பார்த்து ரசிப்பானோ அதையே தான் நான் பார்த்து ரசித்தேன்.

ஒரு நிமிடம் சிக்னலையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்தேன். மஞ்சல் நிறத்தை அவள் உடம்பில் எங்காவது மறைத்து வைத்திருப்பாளா ?? ச்சே... அவள் நிறமே மஞ்சலாக இருக்கும் போது இன்னொரு மிஞ்சல் எதற்கு ? அவள் நடமாடும் சிக்னலாக தெரிந்தாள். திரும்பி என் நண்பனை பார்த்தேன். அவன் கடைக்காரனிடம் சில்லரை பற்றி பேசிக் கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அவன் வராமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது எனக்கு சிகரெட்டை விட அந்த பெண் அழகு தான் முக்கியமாக இருந்தது.

நாள் அவளை பார்ப்பதை தெரிந்து விட்டது போல் என்னை திரும்பி பார்த்தாள். ஓட்டு போட்ட மக்களை கண்டுக் கொள்ளாத அரசியல்வாதி போல் நான் என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் அவளை பார்ப்பதை உள்ளூர ரசிக்கிறாள். அல்லது ரசிப்பது போல் பாவனை செய்கிறாள்.

தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசினாள். அவள் பேசி முடித்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டு பேர் வந்து அவளிடம் பேசினர்.குறிப்பாக செல்போன் வைத்திருப்பவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அவள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது. இரண்டு பேரில் ஒருவன் அவளிடம் கை நீட்டி பேசினான். இன்னொருவன் அவனை அழைத்து சென்று சமாதானப்படுத்தினான். அந்த பெண் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. காதல் சண்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அந்த பெண் திரும்பி பார்த்து, என்னை நோக்கி வந்தாள். அப்போது பஸ் நின்று இருந்ததாள், அதுக்காக வருகிறாளோ என்று யோசிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை.

அவள் என்னிடம், "டி.நகருக்கு என்ன பஸ் போகும் ?" என்றாள்.

இவ்வளவு நேரம் பார்த்து ரசித்த பெண்ணிடம் இருந்து எதிர்பாராத அறிமுகம்.

தட்டு தடுமாறி '27C' என்றேன். அவள் அந்த இடத்தை விட்டு நகர விரும்பவில்லை. என்னுடன் பேச்சை தொடர விரும்புவது போல் இருந்தது. எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இருப்பது போல் என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொண்டேன். ஆனால், உண்மை அது தான்.

" இங்க கீரின் போர்ட், யெல்லோ போர்ட் பஸ் நிக்குமா ?" என்றாள்.

"ம்..." என்று தலை அசைத்தேன்.

அவளிடம் கோபப்பட்டவம் எங்களை முறைத்தவாரு இருந்தான். கண்டிப்பாக அவன் அவள் காதலானாக தான் இருக்க வேண்டும். அவனை பொறாமைப்பட வைக்க அந்த பெண் என்னிடம் வந்து பேசுகிறாள் என்று யூகிக்க முடிந்தது.

அவள் காதலனுடன் வந்தவன் அந்த பெண்ணை ஒரு நிமிடம் அழைத்தான். அந்த பெண் போகமாட்டாள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அவனிடம் பேச சென்றாள். சற்று ஏமாற்றத்தோடு அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். ஆனால், அவர்கள் காதலில் என்னால் வீண் பிரச்சனை வரும். வந்தாள்... பேசினாள்... சென்றாள். அவ்வளவு தான்.

ரசித்த சந்தோஷத்தோடு... பேசிவிட்டு சென்று இருக்கிறாள். இது வரை நான் சைட் அடிக்கும் பெண்களிடம் பேசியதில்லை. இது தான் முதல் தடவை. ஒவ்வொரு முறை பெண்களிடம் பேசும் போது இப்படி தான் நினைத்துக் கொள்வேன்.

அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அந்த பெண் தன் காதனுடன் கை குழுக்கிக் கொண்டாள். தன் காதலனின் நண்பனுடன் ஒரு காரில் ஏறி சென்றாள். அவர்கள் சமரசமாகி விட்டார்கள் என்று அவர்களின் புன்னகையில் தெரிந்தது. எதோ என்னை அறியாமல் ஒரு காதலுக்கு உதவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் உருப்படியாக செய்த முதல் காரியம் இது தான்.

நான் அந்த பெண் செல்வதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது என் தோள் மீது யாரோ கை போட்டனர். என் நண்பன் தான். இரண்டு சிகரெட்டை வாங்கி இப்போது தான் வந்தான். அந்த பெண்ணை நினைத்து ஏக்க பெரு மூச்சு விட கண்டிப்பாக எனக்கு சிகரெட் தேவை. சிகரெட்டை வாங்கி ஆறாவது விரலாக சொருகிக் கொண்டு பற்ற வைத்தேன்.

" என்ன... மாமா..." என்று என் நண்பன் சிரித்தப்படி கேட்டான்.

எப்போது 'மாப்பிள்ள' என்று அழைப்பவன். வழக்கத்துக்கு மாறாக என்னை 'மாமா' என்று அழைத்தான்.

"என்னடா...புதுசா...." என்றேன்.

"உன்ன வச்சு அந்த பொண்ணு ரேட்ட ஏத்திட்டா...." என்றான்.

"என்ன சொல்லுற..."

" டேய்... அந்த பொண்ணு இரண்டு பேருக்கு இரண்டாயிரம் கேட்டா... வந்த பசங்க ஆயிரம் தான் தருவேன்னு கராரா இருந்தான். உன் கூட வந்து பேசுனதும்.... எங்க நீ தள்ளிட்டு போய்டுவியோ பயந்து இரண்டாயிரத்துக்கு ஒத்துக்கிட்டாங்க...."

"அட...ச்சே... சும்மா பொய் சொல்லாத... நான் அந்த பொண்ணு கிட்ட பேசுனத இவ்வளவு பொறாமையா பார்த்தான்..."

"டேய்...அது ஐடம்டா ! அந்த இரண்டு பேரும் சிகரெட் வாங்குன கடை பக்கத்துல நின்னு எனக்கு கேக்குற மாதிரி தான் பேசுனாங்க. அந்த பையன் தான் கஷ்ட பட்டு போன் பண்ணி அந்த பொண்ண வர சொன்னா... நீ தள்ளிட்டு போற மாதிரி இருந்தா கோபம் வராதா..." என்று சொல்லி என்னை ஏளனமாக சிரித்தான்.

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் அந்த மாதிரி பெண்ணா இருப்பாளோ என்று சந்தேகம் வர தொடங்கியது.

ச்சே... இவ்வளவு நேரம் அந்த மாதிரி கேவலமான பெண்ணிடமா பேசிக் கொண்டு இருந்தேன். அவளின் காதலனாக நினைத்த நான், அவளை பொறாமையில் பார்த்தான். தான் படுக்க வேண்டும் என்றால், விபச்சாரியிடம் கூட கற்பை எதிர்பார்க்கும் ஆளாக இருப்பான் போலிருக்கு. கடைசியில் என் மரியாதையை நானே கெடுத்துக் கொண்டேன். இனிமேல் எந்த பெண்ணும் வழிய வந்து பேசினால் நான் பேச கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருக்கும் சிகரெட்டை அனைத்தேன்.

" இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவ போன் நம்பர் வாங்கி இருந்திருக்கலாம் " என்று மனதில் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

4 comments:

"உழவன்" "Uzhavan" said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Unknown said...

கதை நல்லா இருக்கு. ஆக்‌ஷுவலா இதுல ரெண்டு திருப்பம்.

வாழ்த்துக்கள்!

Prasanna said...

கடைசி வரியில் தோலுரித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் :)

Swami said...

நல்ல முயற்சி

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

LinkWithin

Related Posts with Thumbnails