வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 8, 2009

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் !

“வயதும் ஆசையும் வளர, வளர கால்கள் வீட்டில் இருப்புக்கொள்ள மறுக்கின்றன.”- இது ஒரு உண்மையான ‘தேசாந்திரி’யின் வார்த்தை.

‘அறை எண்.305ல் கடவுள்’ படத்தில் ஒரு வசனம் வரும். பிரகாஷ் ராஜ் 'டெல்லி' கணேஷ்யிடம் " பரிசல்காரனுக்கு பணம் கொடுத்து நடு கடல் வரைக்கும் போய் இருக்கீங்களா..! என்னைக்காவது நாலும் பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிங்களா..!!" என்று கேட்பார். இத்தனை நாள் வாழ்க்கை ரசிக்கிறோம் என்ற பெயரில் எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு குத்தும். அந்த குற்றவுணர்வு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது.

இவர் இதில் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்துவிட வேண்டும் ஆசை. தொடர்ந்து இரண்டு நாள் லீவ் கேட்டாலே பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். லீவ் போட்டாலும் குடும்பத்தை விட்டு எஸ்.ராமகிருஷ்ணன் போல் தனியாக சுற்றிப்பார்க்கவும் முடியாது. இப்படி பல வேலை நிமத்தங்களில் முடிக்கிடக்கும் என் கண்களை அவ்வபோது எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் தான் திறக்கிறது.



சீங்கப்பூர் பற்றிய பயணக்கட்டுரை, அமெரிக்கா போகலாமா என்ற தலைப்பில் புத்தகங்களில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், குறிப்புகள் இருக்கும். அந்த புத்தங்களும் விற்றுப்போகும். ஆனால், 'இந்தியாவை' பற்றிய பயணக்கட்டுரை நாம் பெரும்பாலும் படிக்க நினைப்பதில்லை. படிப்பதை விட பார்ப்பதே சிறந்தது என்று முக்கியமான இடங்களை நேரில் பார்க்க செல்கிறோம். நாம் பார்க்க நினைக்காத இடங்களையும், சரித்திரம் மறந்து போன இடங்கள் பற்றியும் எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய 'தேசாந்திரி' நூலில் படித்தேன். ஒரு எழுத்தாளர் பார்க்க நினைக்கும் இடத்திற்கும், சராரி மனிதன் ஒரு இடத்தை பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று அந்த புத்தகம் படித்து முடித்த பிறகு உணர முடிந்தது.

நம் பாடப்புத்தங்களில் ஒரு வரி செய்தியாக, தகவலாக வந்த இடங்களை பற்றி குறிப்பிட்டு அந்த இடத்தில் மகத்துவத்தை சொல்கிறார். வரலாறு இடங்களை மறப்பதாலும், அழிப்பதாலும் வருங்கால சங்கதியர்களுக்கு நாம் எப்பேர்ப்பட்ட தீங்கு செய்கிறோம் என்று இதில் உணர முடிகிறது.

1.சாராநாத்தின் புத்தசிலை
2.நல்லதங்காள் விழுந்த கிணறு
3.மணியாச்சி ரயில் நிலையம் ( கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட இடம்)
4.புனித தாமஸ் மலை
5.அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம்
6.கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் விழா
7.கன்னியாகுமரி மாவட்டத்தின் கிரிப்பாறை மலைப்பகுதியில், வெள்ளாம்பி என்ற இடத்தில் இருக்கும் ஆதிவாசிகள்.
8.கடலில் முழ்கிய தணுஷ்கோடி
9.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளிய மரம்
10.பழநி இருக்கும் குதிரை வண்டி
11.கொச்சியில் உள்ள ஒடேசா என்ற மக்கள் சினிமா இயக்கம்
12.கடற்கரை மணல்
13.கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு
14.அடையாறு ஆலமரம்.

மேல் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் நாம் அன்றாடம் சென்னையில் பார்த்து வரும் இடங்கள் தான். அந்த இடத்தை பற்றி தெரிந்திருந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போல் ரசிக்க முடியுமா என்று தோன்றவில்லை.

“சாராநாத்தில் ஒரு நாள்” கட்டுரையில் " இதுவும் புத்தர் சிலை தான். ஆனால், இன்னமும் இது சிற்பமாகவில்லை” என்ற வரி வரும். இந்த வரியை உள்வாங்கி நான் எழுதியது.

“மனிதன் - இயங்கிக் கொண்டு இருக்கும் இயந்திரம்
இயந்திரம் - இயங்காமல் இருக்கும் மனிதன்”


இயந்திரம் செய்யும் சில வேலைகளை கூட நாம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்ட இந்த வரிகள்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் ! அவர் எழுத்து என்னையும் எழுத வைத்துவிடும்.

13 comments:

தென்றல் said...

நல்லா இருக்கு!

Vidhoosh said...

நானும் படித்துள்ளேன்.
இயங்கினால் அதுவே மனிதம் என்ற உயரிய சிந்தனை அவரது, சாதாரணம் அல்ல.. அதைப் படிக்கும் நம் கண்கள் வழியே அச்சிந்தனை நேராக நம் மூளைக்கு சென்று, இதயம் பேசும். அத்தனை தாக்கம் அந்த எழுத்துக்களில்.
பகிர்வுக்கு நன்றி.
:)

ரெட்மகி said...

உண்மைதான் அவர் எழுத்தின் தாக்கம் சில நேரங்களில் உறக்கமே வருவதில்லை

குகன் said...

// தென்றல் said...
நல்லா இருக்கு!
//

நன்றி தென்றல் :)

குகன் said...

வருகைக்கு நன்றி Vidhoosh :)

// படிக்கும் நம் கண்கள் வழியே அச்சிந்தனை நேராக நம் மூளைக்கு சென்று, இதயம் பேசும். அத்தனை தாக்கம் அந்த எழுத்துக்களில்.
//

முற்றிலும் உண்மை

குகன் said...

// ரெட்மகி said...
உண்மைதான் அவர் எழுத்தின் தாக்கம் சில நேரங்களில் உறக்கமே வருவதில்லை
//

சில சமயம் உறக்கம் ஒன்று இருப்பதை கூட மறக்கடித்துவிடுகிறது. :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உண்மைதான். அவரது எழுத்து நம் மனதை ஏதோ செய்வது போல தோன்றும்.

கட்டபொம்மன் said...

சில இடங்களுக்க நானும் போக வேண்டும்,


கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com/

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நானும் அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள் என்றாலே இரவில்தான் வாசிப்பேன். இரவில் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்.

SUBBU said...

//எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது//

எனக்கும்ந்தான் :((((((((((((

குகன் said...

ச.செந்தில்வேலன், கட்டபொம்மன் ... உங்கள் பகிர்வுக்கு நன்றி :)

குகன் said...

// மதுவதனன் மௌ. said...
நானும் அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள் என்றாலே இரவில்தான் வாசிப்பேன். இரவில் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்.
//

முற்றிலும் உண்மை மதுவதனன் மௌ.

குகன் said...

// SUBBU said...
//எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது//

எனக்கும்ந்தான் :((((((((((((
//

நமக்கு மட்டுமல்ல... எஸ்.ராமகிருஷ்ணனை வாசிக்கும் எல்லா வாசகர்களுக்கும் இதே நிலை தான்.

LinkWithin

Related Posts with Thumbnails