வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 3, 2009

பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் !

‘Rabbit Proof Fence’ என்ற உலகம் படம் காட்ட போகும் என் நண்பர் பைத்தியக்காரனுக்கு நன்றி... !! அவசியம் வந்து கலந்துக் கொள்கிறேன்.

"சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்" என்ற பதிவில் சாருவை வன்மத்தில் உச்சில் சென்று திட்டியதை படித்தேன். அதை கண்டிக்கவோ, அறிவுரை கூறவோ விரும்பவில்லை இல்லை.

சாரு நாகார்ஜுனன் மீது வைத்தது இரண்டு குற்றச்சாட்டுகள்.

முதல் குற்றம்

“அன்றைக்கு என்னுடன் முதல் தொகுதி மட்டுமே வெளியிட்டிருந்தவர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ், கோணங்கி, சாருநிவேதிதா போன்ற பலரும் இன்று பல நாவல்களின் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள். இன்று புதியதாக நிறைய எழுத்தாளர்கள் எழுத வந்திருக்கிறார்கள். இந்தப் பத்து வருடங்களில் என்ன ஆகி இருக்கிறது என்று பார்த்தோமேயானால் பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்று நாகார்ஜுனன் பேட்டியளித்திருக்கிறார்

இதை படித்தது சாதான வாசகனுக்கே கோபம் வரும். சாருக்கு கோபம் வருவது தவறொன்றுமில்லை.

எழுத்தாளர்கள் மனித உணர்ச்சிக்களை பதிவு செய்கிறார்கள். உலகத்தை அறிமுகம் செய்பவர்கள். சிந்தனையை தூண்டிவிடுபவர்கள். எந்த பலனும் எதிர்பார்க்காமல் எழுதுபவர்கள். அவர்களை பார்த்து “பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்றால் யாருக்கு தான் கோபம் வராது. ‘எழுத்து’ ஒன்று சினிமா இல்லை. ஒருவன் 'காதல்' படம் எடுத்தால் அதே ட்ரெண்ட்டில் நாலு பேர் படம் எடுத்து கல்லா நிரப்பிவதற்கு.... ! ‘தவம்’ போல் ஒரு சிலர் எழுதி வருகிறார்கள். அவர்கள் எதுவும் யாரிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை. எழுத்தை ‘பணம்’ என்று நினைப்பவர்கள் தான் ‘Trend’ பற்றி யோசித்து ‘கல்லா’ நிரப்ப வேண்டும்.

நாகார்ஜுனன் ‘ஸீரோ டிகிரி’ பற்றி சொல்லாததால் தான் சாரு "Mummy Returns!” " என்ற பதிவு எழுதியதாக குற்றம் சுமத்துவது அபத்தம். எப்போதும் தன் எழுத்தை பற்றியும், தன் புத்தகத்தை பற்றியும் மற்றவர்கள் பேச வேண்டும் என்று நினைப்பதற்கு....சாரு ஒன்று அரசியல்வாதியல்ல... எழுத்தாளர். அவருக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவர் குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்தாமலாவது இருங்கள்.

இரண்டாவது குற்றம்.

என்னை அதிகம் கோபப்படுத்தியது " எஸ்.ராமகிருஷ்ணன் பாபா படத்திற்கு வசனம் எழுதியதாக” நாகார்ஜுனன் சொன்னது தான். உங்கள் தவறை மின்னஞ்சலில் சொல்லாமல் தனி பதிவு மூலம் சொல்லுவதற்கு காரணம் இது தான்.

சுஜாதாவிற்கு பிறகு எந்த வம்புக்கும் போகாதவர் எஸ்.ராமகிருஷ்ணன் தான். அதிக வாசகர்களை கவர்ந்து வருபவரும் ராமகிருஷ்ணன் தான். தமிழக அரசு விருது பெற்ற 'நெடுங்குருதி', பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட 'உப பாண்டவம்', 'துணையெழுத்து' போன்ற புத்தகங்களை பத்தாண்டுகளில் நாகார்ஜுனன் வாசித்திருக்க நியாயமில்லை. ( நாகார்ஜுனன் ஒருவர் இருப்பதே அறிமுகம் செய்தது எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு தான்.)

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தை யாராலும் உதாசினம் செய்ய முடியாது. நம் மனதின் ஏக்கம். உள்ளூர நாம் பல நாள் குமுறியது. பல நாள் ஒலித்து வைத்து வேதனை. எல்லாம் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து மூலம் உணர்ந்திருக்கிறேன். அவர் எழுத்தை வாசித்தவர்களின் அனுபவமும் இதுவாக தான் இருக்கும். அவரை பாமரன் போல் 'பாபா படத்துக்கு வசனம் எழுதியதாக' சொல்லுவது....சிறுபுள்ள தனம்.

இந்த இரண்டு குற்றத்திற்கும் நீங்கள் பதில் சொல்லாமல் சாருவை தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்தையும் சேர்த்து எழுதியது மிகவும் அநாகரிகமானது. நாகார்ஜுனன் ஆதரவாளர் என்ற முறையில் அவர் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை சொல்லலாம். கருத்து சண்டை இருக்கலாம். தனிப்பட்ட முறையில் குடும்பத்தை பற்றி பேசுவது, எழுதுவது.... தேவையில்லாதது. தேவையற்றது.

சாருவின் எழுத்துக்கள் சமிபக்காலமாக வம்பு சண்டையாக இருப்பது உண்மை. 'சாரு' - எப்போது பழையப்படி எழுத போகிறார் என்று ஏங்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சாரு அவர்கள் 'வம்பு சண்டை' பதிவுக்கு நேரத்தை விரணயம் செய்வதற்கு, 'தப்புத்தாளங்கள்', 'ஸீரோ டிகிரி' போன்ற புத்தகங்களுக்கு இரண்டாம் பாகம் எழுதினால் வாசகர்களான நாங்கள் சந்தோஷப்படுவோம்.

இதை எல்லாம் சொல்வதால் 'நான் - சாரு ஆதரவாளர்' என்று நினைக்க வேண்டாம். நான் 'எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிர வாசகன்' என்ற முறையில் தான் இந்த பதிவை எழுதினேன்.

‘No tension’- பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ்.....!!

டிஸ்கி : சாருவை பற்றி தப்பா எழுதினால் 'நூறு ஹிட்' விழும் தெரியும். ஆனா... 'நூறு பின்னூட்டம்' வரும்னு பைத்தியக்காரன் பதிவில் இருந்து தெரியுது...!! எத்தன பேரு தான் அவர திட்டுறது. அவரும் வழிக்காத மாதிரி இருக்குறது...!!

6 comments:

Anonymous said...

ennathu?

கே.என்.சிவராமன் said...

பதிவுக்கு நன்றி குகன். அவசியம் பாடம் பார்க்க வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குகன் said...

// பைத்தியக்காரன் said...
பதிவுக்கு நன்றி குகன். அவசியம் படம் பார்க்க வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம் :-) //

வருகைக்கு நன்றி. அவசியம் வருகிறேன் பைத்தியக்காரன் :)

குகன் said...

// pukalini said...
ennathu?
//

:-)

கிருஷ்ண மூர்த்தி S said...

எரிந்த கட்சி-எரியாத கட்சி மாதிரி சாரு நிவேதிதா எவரையாவது பார்த்து வயிறெரிந்து எழுதுவதும், அதைத் தொடர்ந்து 'எரியாத' கட்சியினராகத் திருப்பி வசைபாடுவதும் பார்க்கப் பார்க்க மிக அருவருப்பாக இருக்கிறது. பதிவர் திரு குகன் , சாருவைத் திட்டினால் நூறு பின்னூட்டம் வரும் என்று
எழுதியிருக்கிறீர்கள், உங்களுக்கும் வரும் என்ற நம்பிக்கையா, இல்லை நப்பாசையா?

இந்த "இருவர்" (சாரு-ஜெமோ)பிரச்சினை தவிர வலைப்பதிவில் வேறு விஷயங்களே இல்லாமல் போய்விட்டதா என்ன:-))

குகன் said...

// கிருஷ்ணமூர்த்தி said...
பதிவர் திரு குகன் , சாருவைத் திட்டினால் நூறு பின்னூட்டம் வரும் என்று
எழுதியிருக்கிறீர்கள், உங்களுக்கும் வரும் என்ற நம்பிக்கையா, இல்லை நப்பாசையா.... //

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி :)

நான் இந்த பதிவில் சாருவை போற்றவோ, ஆதரிக்கவோ இல்லை. சக பதிவர் பைத்தியக்காரன் தவறை சுட்டிக்காட்ட பதிவு எழுதினேன். இதை நான் மின்னஞ்சல் மூலம் செய்திருக்கலாம். நாகார்ஜூனன் "எஸ்.ராமகிருஷ்ணன் பாபா படத்துக்கு வசனம் எழுதியவர் என்று கூறியதாலே... தனியாக பதிவு மூலம் தெரிவிக்கிறேன்.

ஹிட்டுக்காக நான் சாருவை எழுதுவதாக இருந்தால்... நானும் மற்றவர்களை போல் சாருவை திட்டி எழுத முடியும். அது எனக்கு அவசியம் இல்லை. தேவையுமில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails