பொதுவாக கதை எழுதியவரே திரைக்கதை அமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது. ‘ஒன்பது ரூபா நோட்டு’ நாவலை எழுதிய தங்கர்பச்சன் போல் எழுதியவரே படம் இயக்கினால் மட்டுமே முடியும். கேபிள் சங்கர் எழுதிய ‘ லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ சிறுகதை தொகுப்பில் இருந்து ‘போஸ்டர்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டது. இதில், சுவையான தகவல் என்றால் கதை எழுதியவரே திரைக்கதை அமைத்திருப்பது தான். எதோ நானே எழுதிய சிறுகதை படமாக பார்த்ததுப் போல் உணர்வு. நாகரத்னா பதிப்பக வெளியீடு புத்தகத்தில் இருந்து குறும்படம் வந்திருக்கிறது என்றால் பெருமை தானே !!!
வாசித்த கதை திரையில் பார்க்கும் போல் வாசகன் கற்பனையில் இருக்கும் காட்சிகள் மாறுப்படும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியது. வாசகன் இடத்தில் இருந்து பார்வையாளன் வட்டத்தில் இருப்பவர்களுக்கு திருப்பி படுத்த சில காம்பிரமைஸ் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால், இந்த கதையில் எழுதிய 90% சதவீத கதையை காட்சியாக ரவிகுமார் கொண்டு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
கோடிக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய படத்தை தியேட்டரில் ஓட வில்லை என்றாலும், இரண்டு மாதமாவது சன் டி.வி, கலைஞ்ர் டி.வியில் விளம்பரம் ஓடும். வருட முடிவில் ‘டாப் 10’ அந்த மொக்கை படங்கள் இடம் பெறும். தான் எழுதிய சிறுகதை குறும்படமாக வந்திருக்கிறது. எந்த ஒரு ரியாக்ஷன் இல்லாமல் தன் பதிவில் ஒரு பெட்டி செய்திப் போல் கேபிள் சங்கர் போட்டிருப்பது எனக்கு வருத்தம் தான். ( Widget விளம்பரப்படுத்தி படத்தை ஓட்ட வேண்டாமா !! )
அண்ணே ! ‘சினிமா வியாபாரம் - 2’ இதை எல்லாம் சேர்த்துக்கொங்க !!
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்க.... இங்கே
படம் பார்க்க...
No comments:
Post a Comment