நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இது வரை வந்த நூல்களின் விமர்சணமும், கருத்துகளும் இன்னும் மேலும் பல ஆண்டுகள் பயணம் செய்ய உதவியாக இருந்தது.
விழா நிகழ்வில் நடந்த சில குறிப்புகள்.
பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ பற்றி ‘கல்வெட்டு’ சொர்ணபாரதி
சிறுகதை என்பதை விட சின்ன கதை என்று சொல்லி புத்தகத்தை பற்றி தொடங்கினார். பெரும்பாலான கதைகள் ஜனரக பத்திரிக்கைகளுக்கு எழுதப்பட்ட கதைகளாக தான் இருக்கிறது. மனதை வருடும் படியான கதை இல்லை என்பதை கூறினார்.
BUTTERFLY EFFECT, இருளின் நிறம், டைரி குறிப்பும் காதல் மறுப்பும் கதைகளை மேற்கோள் காட்டி பேசினார். பரிசல் தனது ஒவ்வொரு கதையிலும் இறுதியில் திரைப்படத்திற்கு தேவையான ட்விஸ்ட் வைத்திருப்பதை கூறினார்.
குகன் எழுதிய என்னை எழுதிய தேவதைக்கு பற்றி மணிஜீ
'என்னை எழுதிய தேவதைக்கு' தலைப்புக்கு பதிலாக 'என்னை எழுதிய தேவதைகளுக்கு' என்று பன்மையில் தலைப்பு வைத்திருக்கலாம் என்று சொல்லி தொடங்கினார்.
எனக்கும், அவருக்கும் நட்பு தொடர வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை விமர்சணம் செய்யாமல் இருப்பது நல்லது என்று கூறினார். (இதுக்கு நாலு வார்த்தை என்னை திட்டியிருக்கலாம்.)
தனிப்பட்ட முறையில் அவருக்கு புத்தகம் பிடிக்காததால் பெரிதாக விமர்சணத்தை முன் வைக்கவில்லை. ஆனால், தன் மனைவிக்கு இந்த புத்தகம் பிடித்திருப்பதாக சொன்னார். ( முன்பே தெரிந்திருந்தால் அவரை விமர்சணம் செய்ய அழைத்திருக்கலாம்)
கேபிள் சங்கர் எழுதிய 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' பற்றி அமிர்தம் சூர்யா
தனக்கும், சங்கருக்கும் ஆரம்பித்த நட்பின் கதையை சொல்லிவிட்டு புத்தக விமர்சணத்திற்கு வந்தார். நிகழ்ந்த மூன்று நூல் விமரசணங்களில் சூர்யாவின் விமர்சணம் தான் நிறைவாக இருந்தது.
தனது விமர்சணத்தில் அவர் சொல்ல வந்த முக்கிய கருத்து. சங்கர் தன்னோடு பாதையை முன்பே தெளிவாக தீர்மானித்து விட்டதால் அவர் காமம் கலந்த கதையை எழுதுவார். அவரால், வேறு சமூக கருத்துள்ள கதை எழுதத் தெரிந்தவர் என்றாலும் தன் பாதையில் கவனமாக இருப்பதை கூறினார்.
4:45க்கு வருவதாக சொன்ன சீமான் அவர்கள் 6:20 மணிக்கு வந்தார். நூல் வெளியிடுபவர் தாமதமாக வந்தால் நூல் விற்பனை எப்படி பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். ஒரு சிலர் உயிர்மை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். இருந்தும், சீமான் வந்த போது கூட்டம் நிறைவாக இருந்தது.
நீங்க தான் சாவி பற்றி சீமான்
புத்தகத்தை பற்றி சொல்லும் போது முகப்பு அட்டைப்படத்தை மிகவும் பாராட்டினார்.
மனிதன் பென்சிலாக இருக்க வேண்டும் என்று குரிப்பிட்டு இருக்கும் 'பென்சில் வாழ்க்கை' கட்டுரையை சிலாகித்து பேசினார். 'தட்டிக் கேளுங்கள்' என்ற கட்டுரையை நாட்டில் நடக்கும் பிரச்சனையை குறித்து பேசப்படும் கட்டுரையை மேற்க் கோள் காட்டியிருக்கிறார்.
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
இந்த நூலை அவர் படிக்கவில்லை. நமது வாழ்க்கைக்கு வழி நம் கையில் தான் இருக்கிறது. குரங்குக் கூட கை ரேகை இருக்கிறது. அது ஜோசியனிடம் கை காட்டுவதில்லை. ஆனால், மனிதன் தான் தன் கையை நம்பாமல் ரேகையை நம்புவதாக கூறினார்.
பதினைந்து நிமிடம் வரை பேசிய அவர் துளிக் கூட அரசியல் கலக்காமல் பேசியது ஆறுதலாக இருந்தது. விழா நிகழ்ச்சிக்கு சால்வை போடுவதிற்கு பதிலாக புத்தகம் கொடுக்க வேண்டும் என்பதை கூறினார். ( பதிப்பகம் தொடங்கி சிறப்பு விருந்தனர்களுக்கு நினைவு பரிசாக புத்தகம் கொடுப்பதால் தப்பித்தேன்.)
இந்த விழாவில் சில நல்ல பாடங்களை கற்றுக் கொண்டேன்.அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
மேல் குறிப்பிட்டுள்ள அத்தனை புத்தகங்களும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
1 comment:
தயவு செய்து "விமர்சனம்" என்று மாற்றுங்கள்.
Post a Comment