இப்போதெல்லாம் அரசியல், சினிமா இரண்டு தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. ஒன்று சினிமாவை வைத்து அரசியல் நடக்கிறது. இல்லை என்றால் சினிக்காரர்கள் அரசியல் செய்கிறார்கள். அதனால், இரண்டும் சேர்ந்து காக்டைல் நகைச்சுவை.
இந்த வருடம் சிறந்த அரசியல்வாதி ?
ஆ.ராசா
(அறுபது வருட இந்திய அரசியல் நடந்த எல்லா ஊழலை தன் ஒரே ஊழலில் முந்தி சென்றுள்ளார். )
இந்த வருடம் அரசியல் புது வரவு ?
'இளைய தளபதி' விஜய்.
(ரஜினி மாதிரி வருவேன்...வருவேன்... சொல்லிக்கிட்டே இருக்காம நிஜமாவே வந்திருவாரோ நினைக்க வச்சிட்டாரு)
குஷ்பு ( ஒரு வழியா எல்லா கேஸ்ல இருந்து வெளியே வந்தாச்சு )
இந்த வருடம் சிறந்த கட்சி ?
காங்கிரஸ்
( ஒருவர் தி.மு.கவுக்கு எதிராக பேசுவார்.
இன்னொருவர் தி.மு.கவோடு தொழமையாக இருப்பார்.)
அடுத்த வருடம் யார் யாரோட கூட்டனி ?
அந்த முடிவு எடுக்க தெரியாம தானே எல்லா கட்சியும் தவிச்சிக்கிட்டு இருக்கு.(அதுவரைக்கும் பத்திரிகை நல்ல விற்பனையாகும்)
2011ல்ல யாரு ??
ஜெயலலிதா : தி.மு.க தவிர எல்லா கட்சிகளும் அ.தி.மு.கவுடன் கூட்டனி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். 2011ல் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.
விஜய்காந்த் : என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டனி வைத்துக் கொள்ள தயார்.
ராமதாஸ் : தமிழ் நாட்டில் மூன்றாவது அணி அமைந்து, அவர்கள் ஆட்சி அமைய வேண்டும்.
சரத்குமார் : எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை. எந்த கட்சியும் எங்களை பார்த்து பயப்பட வேண்டாம்.
கலைஞர் : தமிழக மக்கள் எங்கள் ஆட்சியை விரும்பவதால் அடுத்த வருடம் தேர்தலே இல்லை.
இந்த வருடம் நடந்த சிறந்த கூட்டம் ?
சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களை திட்டியக் கூட்டம் தான்.
(குடும்ப பெண்களை (!) தவறாக எழுதியதை கண்டித்து பத்திரிகை குடும்ப பெண்களை திட்டியது)
இந்த சிறந்த தண்டனை ?
முதல்வர் முன் உண்மையை மேடையில் சொன்னதற்காக அஜீத் முதல்வர் பேரன் படத்தில் நடிப்பது.
இந்த வருடம் டாப் 5 படங்கள்
சன் டி.வி :-
1.எந்திரன்
2.சிங்கம்
3.தில்லாலங்கடி
4.சுறா
5.ஆடுக்களம் ( படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியேவா !!!)
கலைஞர் டி.வி :-
1.பெண் சிங்கம்
1.மதராசபட்டினம்
2.தமிழ்படம்
2.பையா
3.விண்ணை தாண்டி வருவாயா
3.மைனா
4.நான் மகான் அல்ல
4.பாஸ் (எ) பாஸ்கரன்
5.வ - குவாட்டர் கட்டிங்
5.இரத்த சரித்திரம்
( 18 எம்.பி வச்சிக்கிட்டு 8 மந்திரி சீட் கேட்டவராச்சே !)
ஜெயா டி.வி :-
எல்லா படங்களை கலைஞர் வாரிசுகள் வாங்கிவிட்டதால், இந்த நிகழ்ச்சி ஜெயா டி.வியில் ரத்து செய்யப்படுகிறது.
மக்கள் டி.வி :-
இந்த வருடம் தமிழ் படமே வரவில்லை.
இந்த வருடம் சிறந்த நடிகர் ?
விஜய் தான். ( அரசியலில் நிஜமா நடிக்க தெரியனும். சினிமாவிலே சுமாரா நடிக்கிறாரு. எப்படி சமாளிக்க போறாரோ !!)
இந்த வருடம் சிறந்த நடிகை ?
தமனா ( சன் டி.வி. சிபாரிசு) மற்றும் நமீதா (கலைஞர் டி.வி சிபாரிசு )
எந்த வருடமும் சிறந்த தயாரிப்பாளர் ?
சன் குழுமம்
1 comment:
விருதுகள் செலக்சன் சூப்பர்.சில வருடங்களுக்கு முன்பு சுஜாதா விருதுகளை எதிர் நோக்கியிருப்போம். இனி 2011 முதல் குகன் விருதுகளை எதிர் நோக்குவோம்.
Post a Comment