அழகான ஆண்ணுடன் உறவு கொள்கிறாள். இரவு முழுக்க தன் காம பசியை தீரும் அளவிற்கு அவனை அனுபவிக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த ஆண்ணால் முடியாவிட்டாலும் தன் தேவை தீரும் வரை அந்த பெண் விடவில்லை. தன் காமம் தீர்ந்த பிறகு தனக்கு சுகம் கொடுத்த ஆண்ணை கொடூரமாக கொலை செய்கிறாள் அந்த பெண்.
எதோ Basic Instant, Spieces ஆங்கிலப்படத்தின் கதை இல்லை. நிஜவாழ்க்கையில் வாழ்ந்த ஒரு பெண் இப்படி வாழ்ந்திருக்கிறாள். தனக்கு திருப்தி தராத ஆண்ணின் உருப்பை அறுத்திருக்கிறாள். ஆழகான பெண்களை பல விதமான விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் கொலைச் செய்திருக்கிறாள். இவளின் காம பசிக்கு பலியான ஆண்கள் அதிகம். கொடூரமான ஆராய்ச்சிக்கு பலியான பெண்கள் ஏராளம். அவளுக்கு துணையக சில பெண் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு வரும் பெண்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததால் சில ஆண் அதிகாரிகளும் அவளின் புண்ணியகாரித்தை ஆதரித்தார்கள்.
ஒரு பெண் இப்படி செய்திருக்க முடியுமா ? பெண்ணுக்கு என்ன தான் காம பசி இருந்தாலும் ஆண்களை கொலைச்செய்யும் சைகோவாக இருந்திருக்க முடியுமா ? அந்த ஊரில் சட்டமே இல்லையா ? என்ற பல கேள்விகள் நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் அவள் செய்தது சட்டப்படி சரி தான். காரணம், அந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் யூதர்கள். அந்த கொடூர செயலை செய்தவள் நாஜியின் மரண மூகாமான புசென்வல்ட் (Buchenwald) (1937- 1941), மஜ்டானெக் ((Majdanek 1941-1943) தலைமை அதிகாரியான இல்சா கோச்.
பெண் என்றால் பேய் இறங்கும் என்பார்கள். பேயே பயப்படும் அளவிற்கு இல்சா போன்ற பெண்கள் இருப்பதால் தான் இந்த பழமொழி வந்திருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறாள்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு யூதர்கள் எப்படி எல்லாம் கொடுமை செய்யப்பட்டார்கள், நாஜி படையினர் என்ன கொடுமை செய்தனர் என்று பல தகவல்கள் வெளிவந்தன. பல யூதப் பெண்கள் நாஜி படையினரின் காமத்து பலியாகியிருக்கிறார்கள். குழந்தைகளை விஷ வாயுப் போட்டு கொன்றுயிருக்கிறார்கள். முதியவர்கள் மூகாமுக்கு அழைத்து செல்லும் முன் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு அதிகாரியும் நல்லவர் என்று சொல்ல முடியாமல் தங்கள் தகுதிக்கு ஏற்றாற் போல் கொடுமைகள் செய்துள்ளனர். இப்படி, நீண்டுக் கொண்டுயிருக்கும் பட்டியலில் ஆண்களும் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை சொல்லித்தானாக வேண்டும்.
சாதாரன பெக்ட்ரி ஊழியனின் மகளாக பிறந்து, கணக்கு பாடத்தில் ஆர்வம் கொண்டு அதையே பாடமாக ஏற்று படித்தாள் இல்சா கோச். முதல் உலக போரில் ஜெர்மனுக்கு ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலும் அவளுக்கு வேலை இருந்துள்ளது. எல்லோரைப் போலவே சாதாரன பெண்ணாகத் தான் வாழ்ந்திருக்கிறான். 1932ல் நாஜியில் உறுப்பினரானாள். அங்கு ’கரல் ஓட்டோ கோச்’ என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாள். ஹிட்லர் மரண முகாம் அமைக்கும் வரை அவள் சராசரி பெண்ணாகத் தான் பலருக்கு தெரிந்திருக்கிறாள். அவளின் கணவன் கர்ல் ஓட்டோ கோச்சுக்கு Buchenwald முக்கிய தலைமை பொறுப்பு கிடைத்தப் போது அவளும் தன் கணவனோடு மூகாமுக்கு சென்றாள்.
தன் கணவனின் தூண்டுதலில் பெயரில் முதலில் கைதிகளை கொடுமைப்படுத்தினாள். வெட்டவெளியில் ஒரு கைதி இன்னொரு கைதியை பலாத்கார செய்ய வைத்து ரசித்தாள். பெண் கைதிகளை ஆண் இராணுவ அதிகாரிகளுக்கும், அழகான யூத ஆண்களை தனக்கும் என்ற எழுதப்படதா ஒப்பந்தப்படி வன்கொடுமை நடத்தினாள். பல பெண் கைதிகளின் உறுப்பின் மின்சாரம் பாச்சி மகிழ்ந்திருக்கிறாள். ஒவ்வொருவரின் மரணமும் இல்சாவுக்கு கேளிகையானது.
1941ல் அவளின் கணவனுக்கு 'Majdanek' மாற்றாலாகி சென்றபோது கூட கணவன், மனைவி இருவரின் அட்டக்காசம் ஓயவில்லை. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் எஸ்.எஸ். படையினரால் கைதி செய்யப்பட்டனர். யூதர்களை வன்கொடுமை செய்த குற்றதிற்காக அல்ல. எஸ்.எஸ் படை பிரிவினர் பணத்தை தவறாக பயன்ப்படுத்தியதற்காக. எஸ்.எஸ் நீதி மன்றத்தில் ஓட்டோ கோச்சுக்கு மரண தண்டனை வழங்கியது. இல்சா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டாள். இருந்தும் அவள் செய்த பாவம் அவளை விடவில்லை. ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்க அரசு யுத்த குற்றவாளிகளில் அவளை கைது செய்தது.
ஆறு ஆண்டுகள் மரண மூகாமில் அவள் நடத்திய கொடுமை வாழ்நாள் கடைசி வரை அனுபவித்தாள். தன் வாழ்க்கை முழுக்க நீதி மன்றமும், தண்டனையும் மாறி மாறி பார்க்க வேண்டியதாக இருந்து. 1967ல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டாள்.
ஹிட்லர் கொடுமையான செயல்கள் செய்ததால் அவன் கீழ் இருக்கும் அதிகாரிகளும் அப்படி கொடுமை செய்தார்களா ! அல்லது ஹிட்லரின் இராணுவ அதிகாரிகள் பலர் கொடுமை செய்ததால் ஹிட்லருக்கு கெட்ட பெயரா என்ற சந்தேகம் வர தொடங்கியுள்ளது. காரணம், ஹிட்லரை விட அவன் கீழ் இருக்கும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செய்த கொடுமைகள் பல இருக்கிறது.
இன்றும், தலைமையில் இருப்பவர்களை விட அவர்களுக்கு கீழ் இருப்பவர்களின் ஊழலும், அட்டகாசமும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை நாம் அனுபவைத்துக் கொண்டுயிருக்கிறோம்.
தலைமை மட்டுமல்ல அவர்கள் கீழ் வேலை செய்பவர்களும் நல்லவர்களாக இருக்க மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !!
3 comments:
என்ன கொடுமை சார் இது..
இவள் மற்றவர்களுக்கு செய்த சித்திரவதைகளில் ஒன்றை இவளுக்கே திரும்ப செய்திருந்தால் நிச்சயம் திருந்தியிருப்பாள். [உ -ம்: இவள் பெண்ணுறுப்பில் மின்சாரத்தை ஒரு முறை யாரவது பாய்ச்சிக் காடியிருக்கே வேண்டும், நமக்கு மாதிரிதானே மற்றவர்களுக்கும் இருக்கும் என்று அன்றே திருந்தியிருப்பாள்.] தலைமை சரியில்லைஎன்றால் எதுவுமே விளங்காது, தலைமை சரியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சரி செய்துவிட முடியும். உதாரணம், டி.என். சேஷன், இந்தியா மொத்தமும் தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்த அட்டூழியச் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வந்து நேர்மையான தேர்தலை நடத்தி, இம்ரான் கான், "பாகிஸ்தானில் டி.என். சேஷன் இருந்தால் இங்கும் நேர்மையான தேர்தல் நடக்கும் என்று புகழும் அளவுக்கு சிறப்பாக செயல் பட்டவர். தினமும் பாராட்டு விழா நடத்தச் சொல்லி உருப்படாத கவிஞர்களை தன்னைப் போற்றி புளுகலாக கவிதை எழுதச் சொல்லி, பின்னர் நடிகைகள் போடும் குத்தாட்டத்தில் அவர்கள் தொடையழகை ரசித்துக் கொண்டிருக்கும் தலைமை என்றால், மக்கள் எல்லாம் குடிகாரர்களாகவும், சோத்தைப் போட்டு கொஞ்சம் பணத்தைக் கொடுத்தால் கழுதைக்கும் வோட்டு போடுபவர்களாகவும், இரண்டு லட்சம் கோடி ஊழல் நடந்தாலும் மழையில் நனையும் எருமை மாடுகளாகவும் எதையும் தட்டிக் கேட்கத் திராணி இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். [இது மாதிரி தலைவரும் மக்களும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் எங்காவது இருக்கலாம் யார் கண்டது]
Post a Comment