வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 3, 2010

வினோத் காம்லி

அலுவலகத்தில் நுழைந்ததுமே காலை வெட்டிப்பேச்சாக கிரிக்கெட்டை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். நேற்று நியூசிலாந்து எதிரான ஒரு நாள் ஆட்டத்தில், விராத் கோலி சதம் அடித்தது தான் பேரிய பேச்சாக இருந்தது.

" என்ன பேட்டிங்... கவர் டிரைவ், பிலிக் ஷாட் என்னாவா ஆடுறான் " வியாந்தான் சுந்தர்.

" போன மேட்ச் தான் ஆஸ்திரேலியா கிட்ட 100 போட்டான். அடுத்த மேட்சல நூறு.... நீ பாரு அடுத்த சச்சினா வருவான் " என்று ரிசப்ஷனிஸ்ட் கமலி சொன்னாள்.

மூன்று ஆட்டங்களில் நன்றாக ஆடினால் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதும், முக்கியமான ஆட்டத்தில் சரியாக விளையாடத போது ஊழல் செய்த அரசியல்வாதியைப் போல் உருவப்படத்தை எரிப்பதும் சகஜமாகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பழகிவிட்டது.

என்னைப் பொறுத்தவரையில் விராத் கோலி இரண்டு வருடத்திற்கு இந்திய அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டான். மூன்று விக்கெட் விழுந்தால் விக்கெட் விழுவதை நிறுத்தி விளையாடும் பொறுமையான ஆட்டக்காரர் இல்லை. ஒரு நாள், 20-20 ஓவர் ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரெத்தேகிய ஆட்டக்காரன். டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி நிறுபிக்கும் வரை ஒருவனின் உண்மையான ஆட்டத்தை தீர்மானிக்க முடியாது என்பது என் கருத்து.

" என்ன ராம் ! எதுவுமே பேசாம இருக்க.. ?" என்றாள் அக்கவுன்டட் ரமா. என்னிடம் எதிரான கருத்து இருக்கும் என்பதை அவளுக்கு நன்றாக தெரியும். வெட்டிப் பேச்சை சூடான விவாதமாக்க அவளின் நோக்கம் புரிந்தது.

" விராத் கோலி கேம் பெரிய விஷயமா தெரியில்ல. அவன் இல்லனா ரெய்னா, யுவராஜ் அடிச்சிருப்பாங்க..." என்றேன்.

" இவ எப்போதுமே இப்படி தான். யாரையும் என்கரேஜ் பண்ணவே மாட்டான்" என்று என் மேல் இருந்த தனிப்பட்ட கருத்தை சொன்னான் சுந்தர். இரண்டு பெண்கள் முன் என் காலை வாரிவிட நல்ல சந்தரப்பம் அவனுக்கு கிடையாது.


" ஒருத்தனோட உண்மையான விளையாட்ட பத்தி தெரிஞ்சிக்கனும்னா டெஸ்ட் மெட்ச் தான் பெஸ்ட். அதுல அவன் நல்ல விளையாடட்டடும். அவன அடுத்த சச்சின் சொல்லுறேன். அதுவரைக்கும் கோலி இன்னொரு யுவராஜ் சிங் தான்" என்றேன்.

என் கருத்தில் நான் தீவிரமாக இருந்தது சுந்தருக்கு பிடிக்கவில்லை. கமலி, ரமாவும் எங்கள் வாதத்தை ஆர்வமாக கேட்டார்கள். காலை அலுவலகத்தில் இதை விட நல்ல பொழுபோக்கு அவருகளுக்கு கிடைக்கவில்லை.

" அப்போ டிராவிட், லக்ஷ்மண் தான் நல்ல ப்ளேயர் சொல்லுவ..."

"கண்டிப்பா ! எத்தனையோ மெட்சில வேகமா மூனு விக்கெட் விழுந்தா இவங்க இரண்டு பேரும் பொறுமையா நின்னு ஜெய்க்க வெச்சிருக்காங்க. குறைஞ்சது நல்ல ஸ்கோர் எடுப்பாங்க. விராத் கோலி, யுவராஜ் இருக்குற சில மெட்சில இந்தியா நூறுக் கூட தாண்டினதில்ல." என்றேன்.

" ஒன்டே மெட்சில டெஸ்ட் மெட்ச் மாதிரி ஆடுனா அவ்வளவு தான். ஆட்டம் காலி. ஆட்டத்துக்கு தகுந்த மாதிரி விளையாட சச்சினால தான் முடியும்" என்றான்.

இந்த கருத்தும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சச்சினை விட சிறந்த ஆட்டக்காரன் அவனின் பள்ளி நண்பன் வினோத் காம்லி தான். ஒரு பள்ளி விளையாட்டில் சச்சினும், காம்லியும் சேர்ந்து 700 ரன் மேல் குவித்துள்ளனர். இருவரும் ஒரே ஆட்டத்தில் தலா 400 ரன் மேல் அடித்திருக்கிறார்கள். ஆனால், இன்று சச்சின் புகழில் உச்சியில், வினோத் காம்லி இருக்கும் இடம்க் கூட தெரியவில்லை.தொடர்ந்து இரண்டு டெஸ்ட் மெட்சில் இரட்டை சதம் அடித்தவன். தொடர்ந்து மூன்று ஆட்டத்தில் சதம் அடித்தவன். கங்குலி, டிராவிட் வரும் முன்பு நெ.4 சிறந்த இடம் வினோத் காம்லிக்கு தான் பொருந்தும். என் பள்ளி நாட்களில் வினோத் காம்லி தான் என் ஹீரோ என்று சொன்னால் சுந்தரோடு ரமா, கமலி கண்டிப்பாக சிரிப்பார்கள்.

" என்ன ராம் ! ஒரு பதிலுமே காணோம் " என்றான் சுந்தர்.

என் நல்ல நேரம் மேனேஜர் கார் நுழைவதை கமலி கவனித்தாள். எல்லோரும் அவரவர் இடத்துக்கு சென்று காலை வேலை செய்ய தொடங்கினர் அல்லது செய்வது போல் பாவனை செய்தனர். ஆனால், என்னால் மட்டும் வேலை செய்ய முடியவில்லை. பள்ளியில் படிக்கும் போது நான் ரசித்த வினோத் காம்லி நினைவுக்கு வந்தான்.

1996ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் எட்டு விக்கெட்டை இழந்து இந்தியா 120 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இருந்தும், வினோத் காம்லி தன் ஆட்டத்தை இழக்கவில்லை. நம்பிக்கையும் இழக்கவில்லை. கோல்கட்டா ரசிகர்கள் செய்த பிரச்சனையால் இலங்கை வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர். பள்ளியில் படித்த என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டிலில் விழுந்து அழுதேன். அன்று இரவு கூட சாப்பிடவில்லை. நம்பிக்கையுடன் இருந்த வினோத் காம்லிக்கு எப்படி இருந்திருக்கும். அழுதுக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியே வந்தான். ரசிகனின் கண்ணிரை ஒரு விளையாட்டு வீரரின் கண்ணிர் எவ்வளவு விலை மதிப்பற்றது என்று விளையாடுபவர்களுக்கு தான் தெரியும்.அன்றைய மீடியாக்கள், காம்லியை மெச்சூரிட்டி இல்லாதவன் என்றே வர்ணித்தது. அழுவதுக்கு பதிலாக நன்றாக விளையாடி இருக்கலாம் என்று பல பத்திரிகை எழுதியது. முக்கியமான ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு தன் கடமை முடிந்தது என்று சச்சின் பெவுலியன் திரும்பினான். வெற்றிப் பெற காம்லியை பலர் விமர்சணம் செய்தனர். அதன் பிறகு இந்திய அணியில் காம்லிக்கு இடம் மறுக்கப்படது. கங்குலி, டிராவிட் வந்த பிறகு முன்னனி ஆட்டக்காரனாக இருந்த காம்லி வாய்ப்புக்காக ஏங்கும் சராசரி ஆட்டக்காரனாக நடத்தப்பட்டான்.

உப்பு சப்பில்லாத ஆட்டத்தில் தான் காம்லிக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதில் கூட 30,40 என்று ரன் எடுத்தான். தன் உண்மையான ஆட்டத்தை காட்ட டெஸ்ட்ப் போட்டியில் காம்லிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கங்குலி, டிராவிட் தங்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

எல்லோர் மனதிலும் கோபம், அழுகை, வருத்தம் என்று இருக்கும். வெளியே காட்டுவது தான் மனித குணம். இதில் பெரிய தவறு இருபதாக தெரியவில்லை. எவ்வளவு திறமை இருந்தும், தன் உணர்வை கட்டுப்படுத்த தெரியாதவன் வெற்றிப்பெற்றாலும் நீடிக்க முடியாது என்பதற்கு காம்லி முன் உதாரணமாக இருந்தது கவலையான விஷயம் தான். இன்று குரங்கு சொன்ன ஹர்பஜன், கத்தியே விக்கெட் எடுக்கும் ஸ்ரீஷாந் போன்றவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புக் கூட வினோத் காம்லிக்கு கிடைக்கவில்லை.

அலுவலகம் நேரம் முடிந்தும் வினோத் காம்லி பற்றிய நினைவு என்னால் அகற்ற முடியவில்லை. வண்டி ஓட்டும் போதுக் கூட "இவன் எல்லாம் விளையாடுறான். காம்லிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க கூடாத " என்ற ஆதங்கம் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்ததும் என் வண்டி வைக்க முடியாத அளவிற்கு கார், டூ விலர் எல்லாம் என் வீட்டின் முன் நின்றுக் கொண்டு இருந்தது. இன்று, அப்பாவுக்கு ரிடையராகிறார் அப்போது தான் என் வீட்டு ஞாபகம் வந்தது. அம்மா வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு காபி, ஸ்வீட் ஒவ்வொன்றாக கொடுத்தார். சம்பிரதாயத்துக்கு அப்பாவின் அலுவக நண்பர்களை பார்த்து சிரித்தேன்.

" மிஸ்டர் மாகாலிங்கம் ! இனிமே ஆபிஸ் டென்ஷன் கிடையாது. ஜாலியா லைப் எஞாய் பண்ணுங்க..." என்றார் அப்பாவின் சக நண்பர்.

"வேலை செய்றவனுக்கு ஓய்வு என்னைக்குமே சங்கடம் தான். அதுவும் சாதரன மேனேஜரா தான் ரிடையராகியிருக்கேன். பணம்னு பெருசா சேர்த்து வைக்கல " என்று தன் கவலையும், பயத்தையும் அப்பா காட்டினார்.

" நீங்க பெரிய மேனேஜர்ஸ் கிட்ட கொஞ்சம் பொறுமையா நடந்திருந்தா ஹெட் ஆபிஸ்ல உங்க பேர ரெகமென்ட் பண்ணியிருப்பாங்க. எல்லாகிட்டையும் கோபமா நடந்துக்கிட்டா " என்று அப்பாவின் கீழ் வேலை செய்பவர் சொன்னார். இனி அப்பா அவருக்கு மேனேஜர் இல்லை என்ற தைரியம் அவர் பேச்சில் தெரிந்தது.

"தப்பு பண்ணும் போது மேனேஜரா இருந்தா என்ன ? ப்யூனா இருந்தா என்ன ? தைரியமா கேக்கனும். அவன் தான் மனுஷன்." என்று கோபமாக அந்த நபரிடம் பேசினார். அந்த நபர் மேலும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார். அப்பா ரிட்டையர்ராகவிட்டால் அவர் அப்பா திட்டுவதை வாங்கி பொறுமையாக இருந்திருப்பார். அப்பா இனி தனக்கு மேலாளர் இல்லை என்பதால் அவனால் தன் உணர்வை தைரியமாக அப்பா முன் காட்ட முடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் ‘வினோத் காம்லி’ இருக்கத் தான் செய்கிறார்கள் என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

3 comments:

Gnana Prakash said...

உண்மை நண்பரே..

தங்கம்பழனி said...

//1996ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் எட்டு விக்கெட்டை இழந்து இந்தியா 120 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இருந்தும், வினோத் காம்லி தன் ஆட்டத்தை இழக்கவில்லை. நம்பிக்கையும் இழக்கவில்லை. கோல்கட்டா ரசிகர்கள் செய்த பிரச்சனையால் இலங்கை வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர். பள்ளியில் படித்த என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டிலில் விழுந்து அழுதேன். அன்று இரவு கூட சாப்பிடவில்லை. நம்பிக்கையுடன் இருந்த வினோத் காம்லிக்கு எப்படி இருந்திருக்கும்.//

இவ்வரிகள் எனை மிகவும் கவந்தது.. நானும் அத்தருணம் பள்ளி பருவம்தான்..பாதிப்பு இன்னும் நினைவலைகளில்..! மீண்டும் தீண்டி சென்றது இவ்வரிகள்...இடுகையில் ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்..

காம்ப்ளி பற்றிய பதிவு உணர்வுப்பூர்வம்!

நன்றி! வாழ்த்துக்கள்..!

www.thangampalani.blogspot.com

karthikeyan pandian said...

உண்மை தான் ஆனால் செமி பைனல்லில் சச்சின் 65 எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம் .

LinkWithin

Related Posts with Thumbnails