வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 14, 2010

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம்

அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிகழ்ச்சி கண்டிப்பா இருக்கும்.எந்த கக்ஷ்டமான கேள்விக்கும் அப்பவே ஐயா அருமையான பதில் சொல்வாரு.

அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக்கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயும் அது மாதிரி கேள்வித்தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சுக்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்துட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக்லே அந்தக் கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார் .ஆனா அன்னைக்கு அந்த தாளை படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார்.அண்ணா படிச்சு பார்த்த்தும் லேசா சிரிச்சுட்டே மைக்குக்கு வந்து பொது மக்களை பார்த்து

இங்கே யாரோ ஒரு தாள்லே தன்னோட பெயரை மட்டும் எழுதிட்டு கேள்வியை எழுத மறந்திட்டாரு.ஆகையினால் அந்த தாளை நம்ம இராம.சுப்பையாவிடம் கொடுக்கிறேன், அவர் அதை உங்களிடம் கொண்டு வருவார்.அது யாரோட பேரோ அவங்க மேடைக்கு வந்து மீண்டும் தங்கள் கேள்விகளை கொடுக்கலாம்னு சொல்லிவிட்டு அதை எங்கிட்ட தந்தார்.அந்த தாள்லே “நான் ஒரு முட்டாள்னு” எழுதியிருந்தது.

இதை கேள்வினு நினைச்சுக்கிட்டு பெரியார் மைக்கிலே படிப்பார்ங்கிற நோக்கத்திலே யார் அதை கொண்டு வந்து கொடுத்தானோ அவனே அன்னைக்கு பெரிய முட்டாள் ஆயிட்டான். அண்ணாவோட குறும்பும் புத்திசாலிதனமும் ஐயாவையே ஆச்சிர்யப்பட வைச்சுடுச்சு. இப்படி அனுபவத்தை சொல்கிறார் இராம.சுப்பையா

**



பெரியாரின் பன்பு

இடுக்காட்டில் இராஜாஜியின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் வி.வி.கிரி வந்தருந்தார். சுடுகாட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். பெரியார் அவர்கல் அருகில் ஒரு சக்கர-நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தார். அந்த நிலையிலும், பெரியார் என்னையும் விடுதலை சம்பந்தத்தையும் அருகில் அழைத்து “என்னை இறக்கி கீழே உட்காரவையுங்கள், கிரியை இந்த வண்டியில் உட்கார சொல்லுங்கள்.அவர் குடியரசு தலைவர்.அவர் நிற்கும் போது நாம் அமர்ந்திருப்பது மரியாதையாக இல்லை,என்றார்.

ஜனாதிபதி கிரியிடம் இதை தெரிவித்தபோது பெரியாரின் பண்பைக்கண்டு பெரிதும் வியந்து போனார். என்கிறார் முன்னால் அமைச்சர் ராசாராம்.

எழுந்து நிற்கமுடியாத அந்த தள்ளாத வயதிலும் குடியரசு தலைவரின் பதவிக்கு மரியாதை கொடுத்த பெரியாரின் இந்த பண்பு .ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசிய பெரியவாள் சின்னவாள்களுக்குத் தெரியுமா?

**

1929 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு சொற்பொழிவுக்காக நானும் பெரியாரும் சென்றிருந்தோம்.எதிர்ப்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக எதிர்ப்பு நோட்டீசுகள் சில போட்டிருந்தார்கள்.அதில் ”பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர்.நாத்திகர்.அவரை இன்று பேசவிடக்கூடாது“ என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு.ஆனால் 6.30 ஆகியும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும் எங்களை அழைத்தவர்களும் வரவில்லை.”பேசாமல் திரும்பி போய்விடுவது நல்லது”என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்க்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார்.
வண்டியில் அமர்ந்ததும் பெரியார் வண்டிகாரணிடம் கூட்டம் நடக்கும் இட்த்தின் வழியாக இரயிலடிக்கு போகும் படி சொன்னார். அந்த இடம் வந்த்தும் பெரியார் பார்த்தார்.சுமார் 500 பேர்கள் அங்கு கூடியிருந்தனர்.மேடையில் நாற்காலி எதுவுமில்லை. எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை.

உடனே பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்லி தனியாகவே போய் மேடையில் ஏறினார்.
“பொது மக்களேநான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை.ஒரு உண்மையைச் சொல்லி போகவே வந்தேன்.

புராணங்களை போய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள்.அது நான் சொல்லவில்லை. சைவ புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களையெல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக புராணங்களை போய் என்று சொன்னவர்கள் சைவ-வைணவப் பண்டிதர்கள்தான் இதை சொல்லி போக தான் வந்தேன். என் மேல்பழி போடாதீர்கள்.” என்று பெரியார் சொன்னதும் ஓயாமல் கை தட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அங்கு தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

சொன்னவர் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

**
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1970ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரைவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர் சந்திர சேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுபாடு சம்பந்தமான ஆராய்ச்சியாளர் அவர்.

வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர்.அவர் பெரியாரை சந்தித்து மக்கள் தொகையை கட்டுபடுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?”என்றார்.

“பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள். சரியாகிவிடும்” என்றார் பெரியார்.

கேட்டவருக்கு புரியவில்லை .பெரியார் விளக்கி சொன்னார்.

”உன் மனைவிக்கும் வேலை உன் மகளுக்கும் வேலை,அவர்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிடமாட்டார்.ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்து போய்விடும்” என்றார் பெரியார்.

ஆச்சிர்யப்பச்சு போனார் அந்த அறிஞர்.

“உலகத்தில் வேறு யாரும் சொல்லாத உங்களின் ஒரிஜினல் ஆலோசனை இது” என்று கூறினார் அந்த அறிஙர்.எனவே அவரை (பெரியாரை)ப் பிற்போக்குவாதி என்பதும். அவருடைய கருத்துக்களால் வீழ்ச்சியடைந்தோம் இன்பதும் நேர்மையான குற்றச்சாட்டாக தெரியவில்லை.”

என்கிறார் சிந்தனையாளன் ஆசிரியர் தோழர் வே. ஆனைமுத்து.

தககல் :
பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள்
தொகுப்பு:சபிதா ஜோசப்
நக்கீரன் வெளியீடு

2 comments:

Jayadev Das said...

பெரியார் எத்தனையோ நல்லவைகளை சமூகத்துக்குச் செய்துள்ளார். இருப்பினும் மூட நம்பிக்கை என்று எதைச் சாடினார்களோ அதையே அவரும், அவரது கட்சியினரும் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சில இறை நம்பிக்கையாளர்கள் ஆதாரத்துடன் சொல்கிறார்கள். முடிந்தால் பாருங்கள். பதில் தேடுங்கள். [பார்க்கப் பார்க்க சுவராஸ்யமான விடியோக்கள் இவை. பெரியார் கட்சியினர் கேட்க்கும் கேவில்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிடு தின்னுகிறார்கள். ] நான் இது எப்படி இருக்குமோ என்று அரை மனதோடுதான் பார்க்க ஆரம்பித்தேன், ஆனால் இவற்றின் சுவராஸ்யம் என்னை அத்தனை விடியோக்களையும் பார்க்கவைத்துவிட்டது. நீங்களும் பார்த்துவிட்டு பதில் போடுங்கள்.

http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E

Jayadev Das said...

Correction :
கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பெரியார் கட்சியினர் தவிடு தின்னுகிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails