சிறுகதை, நாவல், கட்டுரை என்று வாசிக்க தொடங்கிய பிறகு கவிதை புத்தக வாசிப்பு மிக அறிதாக விட்டது. நண்பர்கள் கட்டாயப்படுத்தி தினித்தால் ஒழிய கவிதை புத்தகங்கள் சமிபத்தில் வாசிக்கவில்லை.
நேற்று (5.12.10) நடந்த ‘ஹைக்கூ திருவிழா’ நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கழித்து ‘நாகரத்னா பதிப்பக’ சார்பாக புத்தக சந்தை நடத்தினேன். நிகழ்ச்சி நடக்கும் போது மு.முருகேஷ் எழுதிய ‘உயிர்க் கவிதைகள்’ படிக்க வாய்ப்பு கிடைத்தது.
மு.முருகேஷ் அவர்கள் வந்தவாசி இருந்து வந்தவர் மட்டுமல்ல ஹக்கூ கவிதைகளை அதிகம் தந்தவாசியும் கூட. ஹைக்கூ எழுத்தாளர்களில் முக்கிய கருதப்படுபவர். ஹைக்கூ எழுத பல எழுத்தாளர்களை ஊக்கவிப்பவர். இப்படி இவரைப் பற்றி கேள்வி எனக்கு, நேற்று தான் முதல் முறை சந்தித்தேன். (ஆனால் அவரிடம் பேசவில்லை) முதல் முறையாக அவரின் புத்தகத்தை வாசித்தேன்.
புத்தகத்தில் இடம் பெற்ற எல்லா ஹைக்கூ கவிதைகளும் குழந்தைகளை மையமாக கொண்டது. ஒவ்வொரு கவிதைக்கு பொருத்தமான புகைப்படங்கள். புகைப்படத்தோடு அவரின் ஹைக்கூவை வாசிக்கும் போது படத்தில் குழந்தையின் உணர்வுகள் நம்மை பற்றிக் கொள்கிறது.
அதில் ஒரு சில ஹக்கூ என்னால் வாசித்தும் மறக்க முடியவில்லை.
சிரித்துத்தான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !
**
கொஞ்சமாய் உணவு
சண்டையில்லாமல் பகிர்ந்துண்ணும்
நாயும் குழந்தையும் !
**
அம்மா அப்பா எப்ப வருவாங்க ?
பார்வையால் கேட்கும்
சுனாமியில் தப்பிய குழந்தைகள்
**
இருட்டில் தான் படிக்கிறான்
வெளிச்சமாகும்
நாளைய வாழ்க்கை !
**
கிழிசலைத் தைக்கும் தாய்
விளையாட்டால் கிழிக்கும்
குழந்தை.
ஒவ்வொரு ஹக்கூவிலும் குழந்தைகளிடம் ஒலிந்திருக்கும் சோகத்தை சொல்லுகிறார். கவிதைக்கு பொருத்தமான தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மிகவும் கச்சிதம். பொதுவாக புகைப்படங்கள் கொண்ட கவிதை தொகுப்பு காதலை சுமந்து தான் வரும். முதல் முறையாக குழந்தையின் உணர்வுகளை சுமந்து வருவதை பார்க்கிறேன்.
குழந்தைகளுக்கான ஒரு உலகம் இருப்பது எல்லோருக்கு தெரியும். எல்லோரும் குழந்தைப் பருவத்தை தாண்டி தான் வந்திருக்கிறோம். வளர்ந்த பிறகு மறந்து விடுகிறோம். குறைந்த பட்சம் மற்ற குழந்தையின் உலகத்தை கெடுக்காமல் இருக்க நம்முடைய குழந்தைப் பருவ உலகத்தை மறக்காமல் இருக்க வேண்டியதாக உள்ளது.
பக்: 48. விலை ரூ.30
அகநி வெளியீடு
வந்தவாசி – 604 408
பேசி: 94443 60421
No comments:
Post a Comment