வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, October 15, 2009

வரம்பு மீறிய சாரு நிவேதிதா



கருத்து சண்டை, குத்து சண்டை, கும்மாகுத்து சண்டை என்று பல சண்டை பதிவில் நடந்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், 'சண்டை நாயகன்' சாரு நிவேதிதா அவர்களை நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று தோன்றியது. அதான், அவர் எழுதிய 'வரம் மீறிய பிரதிகள்' புத்தகம் பற்றிய என் பார்வையில் ஒரு பதிவு.

“சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.”

பின் அட்டையில் அச்சான வாசங்கள்.

சாரு மீது பலர் (என்னையும் உட்பட்) பல விதமான விமர்சணங்கள் முன் வைத்தாலும், அவரின் (எழுத்து) தேடலை படித்து பல முறை பிரம்பித்து போயிருக்கிறேன். பொதுவாக ஆறு மாதத்திற்கு படிக்க வேண்டிய நூல்களை வாங்கி மூன்று மாதத்தில் படித்து முடித்து விட வேண்டும் என்று நினைப்பேன். இதில் என் எழுத்துலக நண்பர்கள் எழுதிய சில மொக்கை புத்தகங்கள் அடங்கும். ( கஷ்டப்பட்டு சொந்தமாக புத்தக போட்டவர்களை என்னால் முடிந்த வரை ஒரு பிரதி வாங்கி படித்து தொலைப்பேன்.)

“நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க எனக்கு இரண்டு ஜென்மம் வேண்டும்” என்று பல முறை நினைத்திருக்கிறேன். சாரு தன் வலைத்தளத்தில் "நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க மூன்று ஜென்மம் வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கே மூன்று ஜென்மம் தேவை பட்டால், நான் பத்து ஜென்மம் எடுத்து வந்து தான் அத்தனை புத்தகங்களை படிக்க வேண்டும்.

சாரு எழுதிய இலக்கிய கட்டுரைகள் படித்தால், கண்டிப்பாக ஒரு ஜென்மம் எடுத்து படிக்க வேண்டிய புத்தக பட்டியல் குறையும். இந்த புத்தகம் சாரு ஒரு எழுத்தாளர் என்பதை விட அவர் ‘ஒரு நல்ல வாசகர்’ என்று காட்டுகிறது.

இந்த நூலில் நகுலனை பாராட்டும் சாரு, சுந்தர ராமாசாமி, புதுமைபித்தன் போன்றோரை தன் விமர்சனத்தால் Total damage செய்திருக்கிறார்.

இதில் , சில கட்டுரைகள் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். பல மொழி புத்தகங்களின் சாரத்தையும், ஆழமான சிந்தனையும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதும், அந்த புத்தகங்களை படிக்க தூண்டுவதும் பல கட்டுரைகள் இருக்கின்றன.

என் பார்வையில்… சாரு அவர்கள் எழுதிய நூல்களில் படிக்க வேண்டிய நூல் இது என்று கருதுகிறேன்.



சாரு சொன்ன படிக்க வேண்டிய நூல்கள்

Blood and Guts in high school - Kathy Acker
Main Currents of Marxism - கோலகோவ்ஸ்கி
Fear in Chile - Patricia Politzer
Islo 10 - அயிந்தே
The offical Story –
Funny dirty little war - ஒஸ்வால்தோ ஸொரியானோ
Report to Grew – கஸான்லொகி
Real life of Alejandro Marta - யோசா
One hundred of solititude
El Ilano en ilamas ( எனியும் சமவெளி ) - ருல்போ
Waiting for an angel - Helon Habila
Ship of fools - மார்த்தாத் ராபா
Sexual/Textual politices : A feminist theory - Toril moi
என் கதை - வெ.ராமலிங்கம் பிள்ளை
தமிழவனின் நாவல்கள்
புனர்ஜென்மம் (சிறுகதை) - கு.பா.ரா
மகாகவி பாரதியார் - வ.ரா. - சந்தியா பதிப்பகம்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
வேண்டப்படாதவன் (சிறுகதை) - லா.ச.ரா

கடுமையாக விமர்சித்த நூல்கள்

ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ராமாயணம்


பக்கங்கள்:278
விலை.170
உயிர்மை பதிப்பகம்

3 comments:

ரவி said...

நல்ல அறிமுகம், நன்றி....

butterfly Surya said...

நன்றி குகன்.

ஊடகன் said...

தகவலுக்கு தலைவரே........

LinkWithin

Related Posts with Thumbnails