இணையத்தில் தொடராய் வந்து விரைவில் புத்தகமாய் வருவிருக்கு கேபிள் சங்கர் எழுதிய 'மீண்டும் ஒரு காதல் கதை' நெடுங்கதை பற்றிய என் பார்வை. புத்தகம் வரும் முன்பே முதல் விமர்சனம் என்னுடையதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம் தொலைப்பேசியில் பேசுகிறாள். அந்த பெண்ணில் குரல் கேட்டதும் அவன் தன் பழைய காதலி 'ஷ்ரத்தா' என்று புரிந்துக் கொள்கிறான். அவனை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறாள். சங்கர் சம்மதம் சொல்லி போனை துண்டிக்க, அவனது நினைவலைகள் ஐந்து வருடம் பின்னோக்கி செல்கிறது. சங்கர், ஷ்ரத்தா ஐந்து வருடம் முன்பு எப்படி சந்தித்தார்கள், எந்த சூழ்நிலையில் காதலர்களானார்கள், ஏன் பிரிந்தார்கள் என்று கதை நகர்கிறது.
சங்கரின் பார்வையில் ஷ்ரத்தா கதாபாத்திரம் விளக்கப்படுவதால் அந்த பெண்ணின் கதாபாத்திரம் அதிகம் மனதில் நிற்கிறது. ஆரம்பத்தில் ஹோட்டலில் சாப்பிடும் போதும் சங்கருக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதில் தொடங்கி அவன் வாழ்க்கையில் அவள் எடுக்கும் முடிவு வரை நன்றாகவே கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் கேபிள். ஒன்பதாவது பகுதி வரை கர்வமானா ஷ்ரத்தாவை வாசகர்களே காதலிக்கும் அளிவிற்று உணர்வு புர்வமாகவே கட்டமைத்திருந்தார்.
கேபிள் சங்கரின் நாயகிகள் பெரும்பாலும் செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள். காதலனுடன் உறவு வைத்துக் கொண்டாலும் சரி, கணவனுக்கு துரோகம் செய்தவர்களானாலும் சரி அதை பற்றின குற்ற உணர்வு இல்லாதவர்கள். தங்கள் தவறுகளுக்கு நியாயமான காரணங்களை கொடுப்பவர்கள். இதில் வரும் 'ஷ்ரத்தா' பாத்திரப் படைப்பும் அப்படி தான். இப்படி கட்டமைத்த நாயகியை தமிழ் சினிமாப் போல் ஐந்து வருட காதலனை நினைத்துக் கொண்டு இருப்பது போல் சொல்வது சுத்த அபத்தமாக உள்ளது.
க்ளைமாக்ஸ் பகுதியில், கர்வமும், எள்ளி நகையாடும் குணமும் காட்டும் இடத்தில், ஷ்ரத்தா உடல் உறவு வைத்துக் கொள்ள நினைப்பது இதுவரை வடித்த பாத்திரத்துக்கு முரணாக காட்டுகிறார். மிக எளிமையாக சொல்லுவதென்றால், ஓப்பனிங்கில் பாலசந்தர் நாயகி போல் வந்து இறுதியில் பாரதிராஜா நாயகி போல் முடிக்கிறார்.
லட்சியமே கனவாய் கொண்ட ஒரு ஆணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வரும் போது, கர்வம், திமிர், செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அலட்சியம் கொண்ட பெண்ணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வராதா ?? இந்த கதையின் முடிவு - ஆண் ஆதிக்கம் தனம்.
இரண்டும், மூன்று நாட்களாக என்ன முடிவு வைத்திருக்கிறோ என்று அவர் பதிவை மோப்பமிட்ட என்னை ஒரு சினிமா தனமான முடிவை கொடுத்து கேபிள் என்னை ஏமாற்றிவிட்டார்.
கடைசி பகுதியையும், முதல் பகுதியில் பத்து வரிகளையும் நீக்கிவிட்டு படித்தால் நல்ல காதல் (திரை) கதை படித்த அனுபவம் தருகிறது.
ஏழாவது பகுதிக்காக மறுபடியும் வாசிக்கலாம்.
9 comments:
மிக்க நன்றி குகன். உங்கள் விமர்சனத்துக்கு..
ஒரு கதை விவாதத்துக்கு உள்ளாவது என்னை போன்ற வளரும் ஆளுக்கு சந்தோஷமான விஷயமே.. இதை நான் வரவேற்கிறேன். குகன்.
ஆஹா உடனடியான, அதுவும் புத்தகம் வெளிவரும் முன்னர், விமர்சனம் நன்றாகத்தான் இருக்கிறது. கேபிள் சங்கர் திரைப்பட இயக்குநராகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
\\தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம்\\
பெண் சங்கருக்கும் ஆண் சங்கருக்கும் என்ன வித்தியாசம்?!
நல்ல விமர்சனம்.
நான் சின்ன வயசுலேர்ந்தே moral stories / நன்னெறிக் கதைகள் என்று ஏதேனும் கருத்து வைக்கும் கதைகளைப் படித்தோ கேட்டோ வந்ததால், வாசிக்க ஆரம்பித்ததும் இப்படிப்பட்ட அதிர்ச்சி வந்ததுதான். அதுவும் முக்கியமா தி.ஜா.வின் கதைகளை வாசித்தது. :)
கதையை ஏன் ஒரு நிகழ்வாகவும் பார்க்கக் கூடாது?
இதில் போய் எதுக்கு சார் 'ஆதிக்கம்' 'இசம்' எல்லாம் .. a rose is a rose is a rose - அவ்ளோதானே. கேபிளின் 75% கதைகள் எல்லாமே படித்து விட்டு மூடிவைத்து விடலாம். அவ்ளோ லைட்டான கதைகள்தான் - and he has chosen to write like that.
என் கருத்து இது அவ்ளோதான். மற்றபடி, அந்தக் கதையில் கொஞ்சம் முரண்கள் இருக்கிறது என்றாலும், அங்கிங்கு இது போன்று இருக்கத்தான் செய்கிறார்கள்.
டக்லஸ் ராஜு... he rocks :))
கதையின் சில பகுதிகளை படிக்கவில்லையே என்று நினைத்திருந்தேன். அது ஓரளவு தீர்ந்தது. விமர்சனதில் கதையை பற்றி குறைகள் சொல்லியிருந்தாளும், இந்த கதையை ஒருமுறை படித்துவிட வேண்டும் என்ற ஆவளை தூண்டியுள்ள குகனை பாராட்டலாம்.
CAble anna innum valarum aal enraal ...... naangellaam ??????????????
Hi Cablesankar
உங்கள் கதை நன்றாக இருந்தது. Sharadha மேல் விருப்பமே இல்லாமல் இருக்கும் நம்ம Hero எதற்கு அந்த பெண் ஐ போய் பார்க்கணும். சினிமா தான் பெருசுன்னு காதல் ஐ தியாகம் பண்ணுவதை "முகவரி" ல பார்த்தது போல இருக்கு. ஆனா story narration ரொம்ப நல்லா இருக்கு. ரெண்டு தடவை படிச்சுட்டேன். இன்னும் பல Love Story ஐ குடுங்க. காத்துகிட்டு இருக்கோம்.
Post a Comment