வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 27, 2009

சுஜாதாவும் மூன்று புத்தகங்களும்

ஒவ்வொரு காலக்கட்டத்தில் எனக்கு ஒருவர் பைத்தியம் பிடிக்கும். இந்த பைத்தியம் தெளிய வேண்டும் என்றால் அவர்கள் எனக்கு தேகட்டும் அளவிற்கு அனுபவித்து விடுவேன். கொஞ்சம் நாள்களில் இந்த பைத்தியம் தெளிந்துவிடம். ஆனால், அந்த பைத்தயம் இன்னொருவர் மீது பாயும்....

ஐயோ...மேலே இருக்கு பத்தி... டபுள் மினிங் மாதிரி தெரியுதா...!

ஓ.கே !

ஒவ்வொரு காலத்தில் ஒரு எழுத்தாளர் மீது பைத்தயமாக இருப்பேன். அந்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்களை தேடி பார்த்து, அளுப்பு தட்டும் வரை படிப்பேன். வைரமுத்து, கண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன்....... என்று நான் பைத்தியமாக திரிந்த எழுத்தாளர் பட்டியல் நீட்டலம். இப்போது எனக்கு பிடித்திருப்பது சுஜாதா பைத்தியம்.... எழுத்தாளர் சுஜாத பைத்தியம்ங்க....

நியாயமாய் பார்த்தால் இவர் எழுதிய புத்தகங்களை நான் முன்பே படித்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு இப்போது தான் இவர் மீது அதிக ஈடுபாடு வந்துள்ளது.

சமிபத்தில் நான் படித்த சுஜாதாவின் மூன்று புத்தகங்கள்

நிர்வாண நகரம்
விசா பப்ளிகேஷன்ஸ், விலை.70, பக்கம் - 136

சென்னை நகரத்தையே பழி வாங்க நினைக்கிறான் சிவராஜ். அதை தொடர்ந்து சென்னையில் நீதிபதி, மருத்துவர், அரசியல்வாதி என்று மூன்று பேர் தொடர்ந்து இறக்கிறார்கள். இதை செய்தது 'நான் தான்' என்று சிவராஜ், 'ஜீவராசி' என்ற பெயரில் போலீஸ்க்கு கடிதம் அனுப்புகிறான். சென்னை பழிவாங்க நினைக்கும் 'ஜீவராசி'யை வழக்கறிஞர் கணேஷ், வசந்த் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பது மீதி கதை.

சுஜாதா நாவலில் எனக்கு அதிகம் பிடித்திருப்பது அவருடைய 'Characterisation'. கதாப்பாத்திரத்தை வாசகர் மனதில் நன்றாக பதியவைத்துவிடுவார். அந்த பாத்திரம் அடுத்து என்ன செய்ய போகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டிவிடுவார். குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்க அதிக கஷ்டமிருக்காது. வாசகரால் யூகிக்க முடியும். ஆனால், அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் புத்திசாலி தனமான பாத்திரங்களை வடித்திருப்பது தான் சுஜாதாவின் ஸ்பேஷலிட்டி.

எழுத்தும் வாழ்க்கையும்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.85, பக்கம் - 168



சுஜாதாவின் வாசகர் அவரின் எழுத்தின் வாழ்க்கையோடு பயண செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. அவரின் நாற்பது வருட எழுத்துல வாழ்க்கையை படிக்க முடியவிட்டாமல், அம்பலத்தில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பை படிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே...!

'மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தையல்ல. கருத்துக்கு கருத்து'

கவிதையின் நோக்கம் உபதேசம் அல்ல. உபதேசம் இருந்தால் அதை ஒலித்து வைக்கப்பட வேண்டும்.

கல்வியும், சம்பாத்தியத் திறமையும் சாதி நீக்கத்துக்கு முக்கியமானகருவி.


இப்படி சுஜாதாவின் பல 'நச்' வரிகள் இது பல உண்டு.

புதிய நீதி கதைகள்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.90, பக்கம் - 156



ஜேம்ஸ் தர்பர், ஆம்ப்ரோஸ் பியர்ஸ் போன்றவர்கள் சொன்ன சில ஈசாப் கதைகளை சுஜாதா தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். சிறு வயதில் நாம் கேட்ட, கேட்காத பல கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. அம்பலம் மின் இதழில் வெளிவந்த இந்த கதைகளை உயிர்மை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.

நாம் கேட்ட கதையை மொழிபெயர்த்து ஏன் சுஜாதா இந்த புத்தகத்தில் தன் நேரத்தை செல்விட்டார் என்று தெரியவில்லை. சுஜாதாவுக்காக இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம்.

சுஜாதாவின் புத்தகங்களை பற்றி இன்னும் சொல்லலாம். நான் சொன்னது மிகவும் குறைவு. நீங்கள் படித்து அனுபவித்து பாருங்கள்.

4 comments:

கும்மாச்சி said...

நான் ஒரு சுஜாதா வெறிபிடித்த வாசகன், என்னிடம் அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களும் உள்ளன, திரும்ப திரும்ப படிப்பேன், அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள், கொலையுதிர்காலம் எல்லாம் படியுங்கள்.

குகன் said...

// கும்மாச்சி said...
நான் ஒரு சுஜாதா வெறிபிடித்த வாசகன், என்னிடம் அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களும் உள்ளன, திரும்ப திரும்ப படிப்பேன், அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள், கொலையுதிர்காலம் எல்லாம் படியுங்கள்.
//

வாங்க கும்மாச்சி.

இப்போது தான் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' படிக்க தொடங்கியிருக்கிறேன்.

'கொலையுதிர்காலம்' தொலைக்காட்சி தொடராக பார்த்ததால் படிக்க தோன்றவில்லை.

Jawahar said...

நிர்வாண நகரம் தவிர்த்து மற்ற ரெண்டும் எனக்கு புதுசு. நன்றி, அடுத்த சான்ஸ் வர்றப்போ வாங்கணும்...

http://kgjawarlal.wordpress.com

குகன் said...

// Jawarlal said...
நிர்வாண நகரம் தவிர்த்து மற்ற ரெண்டும் எனக்கு புதுசு. நன்றி, அடுத்த சான்ஸ் வர்றப்போ வாங்கணும்...
//

நல்ல புத்தகம்... கண்டிப்பாக வாங்கி படிங்க...!

LinkWithin

Related Posts with Thumbnails