வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 25, 2009

கலைஞரின் பள்ளி நினைவுகள்



1.

ஒரு முறை 'கடவுள்' என்ற தலைப்பில் கலைஞரின் பள்ளியில் ஒரு பேச்சு போட்டி நடந்தது. அதில் கலைஞர் அவர்கள் மிக பிரமாதமாக பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அவருக்கு போட்டியாக கலந்து கொண்ட மாணவருக்கு நடுக்கமாக இருந்தது. பேசாமல் ஒடிவிடலாம் என்று கூட நினைத்தான். எப்படியோ தைரியம் வர வழைத்துக் கொண்டு அந்த மாணவன் மேடை ஏறினான். அந்த மாணவன் தன் பேச்சை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். இறுதியாக, "இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்" கூறுவதற்கு பதிலாக - "இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்" என்றானாம். அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்தது. அந்த மாணவன் தன் தவறை உணர்ந்த சொன்ன போது, எல்லோரும் சிரித்தனர்.

***

2.

கலைஞர் அவர்கள் இளம் வயதில் சிறு சிறு கூட்டங்களில் பேசி பழகி இருந்தாலும் பெரிய கூட்டங்களை காணும் போது ஆரம்ப காலத்தில் சிறிது நேரம் நடுங்வாராம். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 'நட்பு' என்ற தலைப்பில் முதல் மேடை பேச்சை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு கிடைத்த சந்தோஷம் மனதில் இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் நடுங்கினார். அப்போது அவரது தமிழாசிரியர்களில் ஒருவரும், மகாவித்துவானாக விளங்கக் கூடியவருமான தண்டபாணி தேசிகர் அவர்கள் கலைஞருக்கு தேவையான குறிப்புகளை வழங்கினார். அந்த குறிப்புகள் பெற, திருவாரூரில் இருக்கும் அவரது வீட்டை தேடி நாலைந்து முறை சென்று வந்திருக்கிறார். அவர் தந்து உதவிய குறிப்புகளை அப்படியே எழுதி கோவையாக மனபாடம் செய்தார். இரண்டு மூன்று நாட்களாக எழுதிய குறிப்புகளை வீட்டின் முன் இருக்கும் தூண்கள், சுவர்கள் முன் நின்று எல்லாம் பேசி பழகினார். தன் வீட்டார் அனைவரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தினார்.

இப்படி பல கடுமையான பயிற்சிக்கு பிறகு அவர் பள்ளியில் 'நட்பு' தலைப்பில் பேசிய போது மிக பெரிய பாராட்டு பெற்றது. அவரது முதல் மேடை பேச்சிலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

5 comments:

Nathanjagk said...

:) கலைஞர் (அதாவது மு.கருணாநிதி) வாழ்வில் இது ​போல ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு! ஏதாவது புத்தகமா கிடைத்தால் நன்றாயிருக்கும்.

குகன் said...

//
ஜெகநாதன் said...

:) கலைஞர் (அதாவது மு.கருணாநிதி) வாழ்வில் இது ​போல ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு! ஏதாவது புத்தகமா கிடைத்தால் நன்றாயிருக்கும்.

//

வருகைக்கு நன்றி ஜெகநாதன் :-)

இது போன்ற நிகழ்ச்சிகளை புத்தகமாக தொகுக்க... சிறு முயற்சி தான் இந்த பதிவு...!

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

அஹோரி said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப முக்கியம்.

குகன் said...

// அஹோரி said...
ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப முக்கியம்//

:-)

LinkWithin

Related Posts with Thumbnails