வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, August 21, 2009

கந்தசாமி - திரைவிமர்சணம்லஞ்சம் வாங்கும் அதிகாரி/அரசியல்வாதி ஒவ்வொராக கொல்லப்படுகிறார்கள் அல்லது அவர்களிடம் இருந்து பொருள் கொள்ளையடிக்கிறார்கள். அதன் பின்னால் இயங்கும் நெட்வோர்க். அந்த கொலை அல்லது கொள்ளைக்கு நியாயமான காரணம். இடைவேளைக்கு பிறகு ஒரு பிளாஷ்பேக். இறுதியில் கோர்ட் காட்சி. கதாநாயகன் விடுதலை.... இப்படி பழக்கப்பட்ட அதே கதை தான். சற்று விருவிருப்பாகவும், திருப்பங்களோடும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.

கஷ்டப்படும் ஏழை பெண் தன் குடும்ப கஷ்டத்தை கந்தசாமி கோயில் மரத்தில் எழுதி கட்டி வைக்கிறாள். அடுத்த நாள் அவள் வீட்டில் கருப்பு பையில் பணம். தனக்கு உதவி செய்தது கடவுள் என்று நம்புகிறாள். இது ஊர் முழுக்க பரவ, கந்தசாமி கோயில் முழுக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்கள் கஷ்டமும் தீர்கிறது. இதை எல்லாம் செய்வது ஒரு ஆசாமி என்று சந்தேகப்படுகிறார் 'சி.பி.சி.ஐ.டி' பிரபு.

இன்னொரு பக்கம், ஒவ்வொரு பணக்காரர்கள் வீட்டில் 'சி.பி.ஐ.' விக்ரம் ரைட் நடத்துகிறார். அப்படி ஒரு முறை ஆசிஷ் வித்யார்த்தி வீட்டில் ரைட் செய்து பல கோடிக்கணக்கில் பத்திரத்தை கைப்பற்ற, அவர் பக்கவாதம் வந்தது போல் நடித்து தப்பிக்கிறார். அவர் மகள் ஸ்ரேயா தன் தந்தையைக்கு நிஜமான பக்கவாதம் வந்ததாக நம்பி விக்ரமை பழிவாங்க முயற்சி செய்கிறார்.

ரைட்டில் கைப்பற்றிய பணத்தை எல்லாம் எழை மக்களுக்கு உதவியது கந்தசாமி என்று பிரபு கண்டுபிடிக்கிறார். ஏழை மக்களுக்கு உதவும் விக்ரம் லட்சியம் நிரை வேறியதா ? பிரபு அவரை கைது செய்தாரா ? ஸ்ரேயா விக்ரமை பழி வாங்கினாரா ? என்பது மீதி கதை.நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விக்ரம்' படம். அவரை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மனுஷன் சும்மா கலக்கியிருக்கிறார். சேவல் மாதிரி நடப்பதும், பெண் வேடத்தில் நடனமாடுவதும், கண்ணை கட்டியப்படி சண்டை போடுவதும் என்று ஆள் மிரட்டியிருக்கிறார். பாடியும் இருக்கிறார்.

முதல் பாதியில் வில்லியாக, இரண்டாவது பாதியில் விக்ரமை காதலிக்கு வேஷம் ஸ்ரேயாவுக்கு. இருப்பை மட்டுமே அட்டுவதோடு இல்லாமல் கொஞ்சம் நடித்திருக்கிறார். விக்ரமை ஏமாற்றும் போதும் சரி, அவரால் ஏமாற்றப்படும் போதும் சரி.. ஸ்ரேயா கண்கள் பேசுகிறது. கொடுத்த காசுக்கு...ஒரே இடுப்பசைவை எல்லா பாட்டுக்கு ஆடியிருக்கிறார், பெரும்பாலும் காட்டிவிட்டார்.

பிரபுவுக்கு கச்சிதமான பாத்திரம். சீனியர் ஆபிஸர் கிருஷ்ணா தெலுங்கு பதிப்புக்கு உதவியாக இருப்பார். மற்றபடி சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

விருவிருப்பாக செல்லும் படத்தில் அதிகம் எரிச்சலுட்டுவது வடிவேலுவின் நகைச்சுவை. விவேக்க்கு வேலை வைக்காமல், 'கந்தசாமி' கேட்டப்பில் ஒரு மொக்கையை போடுகிறார். பிரபு அவரை விசாரிக்கும் காட்சி மட்டும் ரசிக்க முடிகிறது. மற்ற நகைச்சுவை எல்லாம் போர் தான்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த வருட மிக சிறந்த பாடல்களில் 'கந்தசாமி' பாடல் இருக்கும்.

இது போன்ற படத்தில் லாஜிக் இருப்பதில்லை. 'கந்தசாமி' படம் மட்டும் விதிவிளக்கல்ல. கோவில் சீட்டு எழுதி வைக்க மக்கள் வெள்ளமாக வருவதை சந்தேகப்பட்டு பிரபு விசாரிக்கிறார். இப்படி விசாரிக்க போனால் எத்தனை கோவிலை விசாரிக்க வேண்டியது இருக்கும். பணம் பரிகொடுத்தை பற்றி யாரும் 'கம்ப்ளைன்ட்' கொடுக்காமல் எப்படி பணத்தை பற்றி விசாரணை நடத்துகிறார் என்று லாஜிக் புரியவில்லை.

ஷங்கரை தேடும் தயாரிப்பாளர்கள், இனி சுசி கணேசனை தேடுவார்கள் என்று நினைக்கிறேன். (சங்கர் மட்டும் இந்த கதையை எடுத்திருந்தால் கண்டிப்பாக நூறு கோடியாவது இந்த படத்துக்கு செலவு செய்திருப்பார்.) தேவையான இடத்தில் மட்டுமே பிரமாண்டத்தை காட்டியிருக்கிறார். தன் முழு கவனத்தை கதையை நகர்த்துவதில் செலுத்தியிருக்கிறார். 'சி.பி.ஐ' ஆபிஸ், 'அலேக்ரா' பாடல் காட்சி மிகவும் அருமை. பெரிய ப்ளாஷ்பேக் வைக்காமல் இருந்ததுக்காகவே அவரை பாராட்டலாம்.

கந்தசாமி - துன்பத்தில் இருந்து காப்பாற்றும் ஆசாமி !!


கருத்து கந்தசாமி : படத்தில் சொல்லவந்த தகவல் நல்ல தான் இருக்கு. 'அலெக்ரா' பாட்டும், மெக்ஸிகோ காட்சி, சி.பி.ஐ ஆபிஸ் ஆடம்பரம் என்று கொஞ்சம் பணத்தை குறைத்திருந்தால் நூறு ஏழை மக்களுக்கு ஒரு மாதம் சாப்பாடு போட்டியிருக்கலாம்.
.

8 comments:

Vijay said...

10% அந்நியன், 7.5% இந்தியன், 12.5% சிவாஜி
ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பு பராவாயில்லை.மன்சூர் அலிகானை இன்னமும் உபயோகித்திருக்கலாம். கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்
என்னைப் பொறுத்தவரை படம் மொக்கைதான்.
குகன்,ஷங்கர் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும்.

முகில் said...

ரொம்ப நல்லவரு நீங்க!

தமிழினி said...

அடுத்த வார "கிரீடம் " பெறும் பதிவராக நீங்களும் தேர்வாகலாம் உடனே தமிழ்10 தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் .எங்கள் மின் அஞ்சல் tamil10@ymail.com

குகன் said...

// Vijay said...
10% அந்நியன், 7.5% இந்தியன், 12.5% சிவாஜி
ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பு பராவாயில்லை.மன்சூர் அலிகானை இன்னமும் உபயோகித்திருக்கலாம். கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்
என்னைப் பொறுத்தவரை படம் மொக்கைதான்.
குகன்,ஷங்கர் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும்//

சுவாரசியமாக இருக்கலாம். தயாரிப்பாளர் தாணு இருப்பாரா என்று சொல்ல முடியாது :-)

குகன் said...

// முகில் said...
ரொம்ப நல்லவரு நீங்க!
//

:-)

"ராஜா" from புலியூரான் said...

போகதீங்க... போகதீங்க....
ஐயோ போய்டானே.... இனி ஒரு வாரம் அவன் தூங்க மாட்டானேயா....

smart said...

periya ethir parpoda vantha nan kadavul.. etho safe.. atha vida ethir parpoda vantha kanthasamy.. safe aguma…? kastamtham… padam fulla neraya sothappalkal.. padam entha edathula nalla irrukunu theda vendi irruku.. vikram, shreya everyone fit in the character. except vadivel.. susiganesan aniyayama vikramoda 3 varusatha waste pannitapla… meena kumari song nalla irruku but dance nallavea illa.. vijay tvla intha pattuku boys vs girlsla aduna misha dancea nalla irruku… intha padam edukathan 3 varusama…?

saravana said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

LinkWithin

Related Posts with Thumbnails