
"'சுந்தர ராமசாமி' அவர்கள் இறந்த போது வெகுஜனப் பத்திரிகைகள் சுரா பற்றி ஒரு பாராவிலிருந்து ஒரு பக்கம் வரை குறிப்பிட்டு 'யாருய்யா இந்தாளு ?' எல்லாரும் எழுதியிருக்காங்களே !' என்று விசாரித்தனர். ஒரு பெரிய மனிதர் இறந்து போனதும் இந்த விளைவு, மாநிலம் அல்லது நாடு தழுவிய குற்ற உணர்வாக வெளிப்படுவது வழக்கமே ! அவரை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற சங்கடம் எழும்" என்று சுராவை பற்றி சுஜாதா இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுயிருக்கிறார். எனக்கும் இதே குற்ற உணர்வு இருக்கிறது. சுஜாதா உயிருடன் இருக்கும் வரை என் கண்களுக்கு ஒரு சினிமா எழுத்தாளராக தான் தெரிந்தார். அவர் மரணத்திற்கு பிறகு தான் அவர் எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன்.
சுஜாதவின் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' நிகரான இன்னொரு படைப்பு 'இன்னும் சில சிந்தனைகள்'. பல பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பு நூல்.
"கருத்துகளுக்கு இருக்கும் மவுசு" என்ற கட்டுரை படிக்கும் போது, " ஒருவரை மூலையில் மடக்கி பிடித்து, இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீகள் ? " என்று அறியக்கேட்டு, பெரும்பாலான் சமயங்களில் ஒத்துப் போவதையே விரும்புகிறார்கள். உலகில் எந்த விதமான கிறுக்குத்தனமான கருத்தாக இருந்தாலும், அதற்கு ஒன்றிரண்டு ஆதரவாளர் தேவைப்படுகிறார்கள்." சுஜாதா குறிப்பிட்டிருந்தார். இவர் எப்போது நம் பதிவுக்கு வந்தார். நம் கிறுக்குத்தனத்தை எல்லாம் படித்து இருப்பாரா...? என்று ஒவ்வொரு பதிவர்களின் மனதில் எழும்.
'அந்நியன் அனுபவங்கள்' பற்றி சொல்லும் போது மற்ற நாட்டில் இருக்கும் மரண புத்தங்கள் ' Egyptian Book of the Dead, Tibetian Book of the Dead பற்றி அறிமுகப்படுத்துகிறார். கிரேக்கப்புராணத்தில் 'ஸ்டைக்ஸ்' என்ற நதி போல, நமக்கு வைதரணி நதியிருப்பதை அழகாக விளக்குகிறார்.
ஒரு எழுத்தாளராக அவருக்கு இருக்கும் ஏக்கமும் சில இடத்தில் பலிச்சிட செய்கிறது.
"மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.
" இங்க யாராவது போலிசை அனுப்புங்க !" என்று ஒருவர் சத்தம் போட்டார். யாராவது செய்யக் கூடாதா ! இந்திய நாட்டின் தேசிய கேள்வி"
"உண்மை ஒவ்வொரு முறை சொல்லப்படும் போது கொஞ்சம் பொய் கலக்கப்படுகிறது. இறுதியில் பெருபாலும் பொய் மட்டும் பாக்கியிருந்து உண்மை நீர்த்துப்போகிறது.
"இளங்கோவடிகளை துறவி என்று சொல்வது கொஞ்சம் சிரம்மாக இருக்கிறது. தான் துறவி பூண்டதாக அவரே 'வரந்தரு காதை'யில் தேவந்தி மேல் கண்ணகி ஆவேசமாக வந்து சொல்வது கற்பிதம்" என்று வையாபுரிப்பிள்ளை சொல்வதை சுஜாதா அவர்கள் குறிப்பிடுகிறார்.
இனி புத்தகம் வாங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளேன். அடுத்த புத்தகம் வாங்கும் வரை.
அவரின் நகைச்சுவை...
" ஹ்யூமர் கிளப் பிரசிடெண்டாக, வருஷக்கணக்காக தமிழர்களைச் சிரிக்க வைக்க முயற்சித்த முகத்தில் கவலை ரேகை தெரிந்தது" என்று ஹ்யூமர் க்ளப் தலைவரை சொல்கிறார்.
நடசத்திர உலகத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்த போது, தங்குபவர்களை விட, பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
திரைக்கதையும் சிறுகதையும்' கட்டுரை நிஜமாகவே நல்ல பயிற்சி கட்டுரை தான். இரண்டுக்கு உள்ள வேறுப்பாட்டையும், விளக்கத்தையும் சொல்லி புரிய வைப்பதற்கு சுஜாதா அவர்கள் தான் சரியான ஆள்.
நூறு புத்தங்கள் படிப்பதும் ஒன்று தான். சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை தெரிந்துக் கொள்வதும் ஒன்று தான். அந்த வகையில் 'சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை' முழுமையாக தெரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த புத்தகத்தில் ஒரளவு தெரிந்துக் கொள்ள முடிகிறது.
விலை.85
பக்கங்கள்.144
உயிர்மை பதிப்பகம்
3 comments:
சுஜாதா ஒரு பொக்கிஷம்
சுஜாதா இறந்த போது ஒரு நெருக்கமான நண்பனின் மரணாத்தைத் தான் உணர்ந்தேன்.
அவர் பற்றி நான் எழுதியது
http://solvathellamunmai.blogspot.com/2008/05/blog-post.html
வருகைக்கு நன்றி ரெட்மகி, அருண்மொழிவர்மன் :)
Post a Comment