
குரு என்பவருக்கு வயது 55. ஈரோட்டில் அலுவலக வேலை செய்யும் போது மயங்கி விழுந்து விட்டார். அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுத்தார்கள். துரதிஷ்டவசமாக அவரது குடும்பம் சென்னையில் இருந்தார்கள். மகன் அப்போது தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. லீவ் கூட எடுக்க முடியவில்லை. கண்களில் நீருடன் அம்மாவை மட்டும் ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தான்.
ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு குரு தன் மனைவியுடன் சென்னைக்கு வந்தார். இரண்டு மாதம் கலித்து மீண்டும் ஒரு மயக்கம். இந்த முறை அவர் மூளையில் ஒரு சிறு கட்டி இருப்பதை கண்டு பிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் எடுக்க வேண்டும் என்று கூறினர். மூன்று லட்சம் வரை செலவாகும் என்றனர். புது வேலையில் சேர்ந்த குருவில் மகனால் பத்தாயிரம் வரை தான் புரட்ட முடிந்தது. அம்மாவின் நகையை வைத்து அப்பா குருவை காப்பாற்றிவிட்டான் அந்த மகன்.
இந்த சம்பவம் நடந்தது 2005ல். அந்த மகன் நான் தான். இப்போது என் தந்தை ஆரோக்கியமாக இருக்கிறார். 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' பற்றிய முக்கியத்துவத்தை அன்று தான் உணர்ந்தேன்.
மனிதர்கள் தான் முக்கியம் என்று சொல்பவர்கள் கூட உடல் ஆரோக்கியம் கெடும் போது பணம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அந்த சமயத்தில் உதவிக்கு நண்பன், உறவனினர் என்று உதவ ஒரு சிலர் தான் முன் வருவார்கள். அவர்களை போல் நமக்கு உதவும் இன்னொரு நண்பன் தான் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்'. அந்த இக்கட்டான சமயத்தில் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' நம்பர் சொன்னால் போதும். மற்றதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
என் நண்பரின் இரண்டு வயது மகளுக்கு இரண்டு நாட்களாக பேதியானது. அவளை மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் கொடுக்க வேண்டிய நிலை. அந்த சிறு குழந்தை படுக்கை இரண்டு நாளாக படுக்க வேண்டும். என் நண்பர் தன் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' நம்பரை அந்த மருத்துஅவமனையில் கொடுத்தார். இரண்டு மணி நேரத்தில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கம்பேனியில் இருந்து தொலைப்பேசி அழைப்பு. " செலவபத்தி கவலப்படாதிங்க. நாங்க பாத்துக்கிறோம். குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்க" என்று ஆறுதல் கூறினர். அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை விபரம், இதுவரை கொடுத்த சிகிச்சை விபரம் போன்ற தகவலை இன்ஷூரன்ஸ் கம்பேனிக்கு மருத்துவமனை கொடுக்கும். இதை சரிபார்த்து அந்த பணத்தை இன்ஷூரன்ஸ் கம்பேனி நேரடியாக மருத்துவனைக்கு பணத்தை கொடுப்பார்கள். அந்த குழந்தை மருத்துவ செலவு இருபதாயிரம் வரையானது. அந்த செலவு முழுக்க மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கம்பேனி ஏற்றுக் கொண்டது.
மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களும் எங்காவது ஒரு இடத்தில் நடந்திருக்கும். யார் மூலமாவது நாம் கேள்வியாவது பட்டிருப்போம். இருந்தும், நம் குடும்பத்திற்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி பலருக்கு இருப்பது இல்லை.
ஏன்... ? எதற்காக.... ?
அடுத்த பதிவில்..........
***
இந்த பதிவை எழுத தூண்டிய தோழி வித்யா அவர்களுக்கு நன்றி.
3 comments:
என் கோரிக்கையை மதித்து பதிவிட்டதற்கு நன்றி.
இது நிச்சயம் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். அப்படியே, முடிந்தால் நிறுவனங்கள் பெயரையும், middle class குடும்பத்தினர் எவ்வளவு ப்ரீமியம் கட்டினால் manage செய்ய முடியும் என்பதெல்லாமும் குறிப்பிடுங்கள்.
-வித்யா
வாங்க வித்யா. எந்த நிறுவனத்தையும் நான் சிபாரிசு செய்ய விரும்பவில்லை. 'Middle Class' குடும்பத்தினருக்கு தேவையான ப்ரீமியம் பற்றிய தகவலை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
ரொம்ப நன்றிங்க! பயனுள்ள பதிவு.. தொடர்ந்து இதைப்பற்றி எழுதி அதிக தகவல்களையும், விழிப்புணர்வையும் தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்!!
Post a Comment