வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 19, 2009

நிர்வாணம் - சிறுகதை

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் மூலம் கேள்வி பட்டு அவளை வர சொன்னேன்.

வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.

கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை. அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யம் அது தான்.பீரோவை திறந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

ஆடைகள் எல்லாம் கலைத்து விட்டு நகையை மட்டும் அணிந்து வர சொன்னேன். அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்தவன், நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்தவன், ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

நான் சொன்னதிற்காக தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நின்றாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவி, தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். அதன் பின் வரைந்த அவள் உருவத்திற்கு வண்ணங்கள் பூசினேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை ஆடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

அருகே வந்து நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வாணமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வாணமாக வரைந்து மரம், கடல், மலை போன்ற இயற்கையோடு சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க...?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்” என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

பணத்தை வாங்காமல் தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன். கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. அதே மாதிரி , காமம் இருக்கும் நேரத்தில கலை வராது. நா எப்போதும் கலையையும், காமத்தையும் சேர்த்து வச்சி பார்க்குறதில்ல " என்றேன்.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறியதை கேட்டேன்.

***********
தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

9 comments:

கவிதை காதலன் said...

ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்

ஷோபிகண்ணு said...

//ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" //

சராசரி மனிதன்.(நூறில் தொன்னூற்றியெட்டு பேர் நாங்கள்தான்.) மீதம் ஒரு கலைஞனும் ஒரு இரசிகனும்.

ஷோபிகண்ணு said...

நிர்வாணம் விரசமாயில்லை வித்தியாசமாயிருக்கிறது. வாழ்த்துகள்

குகன் said...

// கவிதை காதலன் said...
ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்
//

நன்றி கவிதை காதலன் :)

குகன் said...

// ஷோபிகண்ணு said...

சராசரி மனிதன்.(நூறில் தொன்னூற்றியெட்டு பேர் நாங்கள்தான்.) மீதம் ஒரு கலைஞனும் ஒரு இரசிகனும். //

தொன்னூற்றியெட்டு பேரும் ரசிகர்களாக இருப்பார்கள் என்ற கற்பனையில் தான் கலைஞர்கள் இது போன்ற படைப்புகளை படைக்கின்றனர்.

// நிர்வாணம் விரசமாயில்லை வித்தியாசமாயிருக்கிறது. வாழ்த்துகள்//

நன்றி ஷோபிகண்ணு :)

Anonymous said...

super boss

குகன் said...

// இங்கிலீஷ்காரன் said...
super boss
//

Thank you :)

Vicky Vignesh said...

நல்ல கதை நண்பா மேலும் தொடர வாழ்த்துக்கள் ...

Vicky Vignesh said...

நல்ல கதை நண்பா மேலும் தொடர வாழ்த்துக்கள் ...

LinkWithin

Related Posts with Thumbnails