கணேச மூர்த்திக்கு சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. ஒரு தேசியவாதிக்கு மகனாக பிறந்த கணேசமூர்த்தி 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' நாடகத்தில் வெள்ளைக்காரப் பட்டாளத்தில் ஒருவனாக நடித்தான். விஷயம் தெரிந்த அவரது தந்தை 'அடேய் கூத்தாடிப் பயலே ! உனக்கு என்ன தைரியம் இருந்தா, நீ என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்' என்று கூறி அடித்தார்.
அந்த சிறு வயதில் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட கணேசமூர்த்தி ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை என்பவரின் நாடகக் கம்பெனியான 'மதுரை ஸ்ரீ பாலகான' சபாவில் சேர்ந்தான். அங்கு பெரும்பாலும் பெண் வேஷம் தான் போடுவான். கணேசமூர்த்தி அங்கையே தங்கி, உண்டு, நடிப்பை கற்று கொண்டு வந்தான். யாரும் அவனுடைய வீட்டை பற்றி கேட்கவில்லை. காரணம், அவர் அந்த கம்பெனியில் சேரும் போது 'எனக்கு தாய் தந்தை இல்லை' என்று போய் சொல்லி தான் சேர்ந்தான். அவர் தான் நம் ‘நடிகர் திலகம்’ ‘சிவாஜி’ கணேசன்.
திரைப்பட கலைஞர்களால் 'அப்பா' என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர். நடிகர்களுக்கு பல்கலைக்கழகமாக திகழ்பவர். 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே' என்று பல பெருமைக்குரிய பட்டங்களை பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கும் போது நாடகத்திலும் நடித்தவர். நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறக்குடியவர். இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் ‘நடிகர் திலகம்’ ‘சிவாஜி’ கணேசன்.
இராமாயண நாடகத்தில் சீதை, பரதன், இந்திரஜித், சூர்ப்பனகை என்று மாற்றி மாற்றி வேஷம்ப் போட்டுயிருக்கிறார். இரண்டு பெண் வேஷம், இரண்டு ஆண் வேஷம் போடுவதால் தன்னிடம் கதாப்பாத்திரத்திற்கு தேவையான பெண் தன்மையில்லாமல் போனது அவரே ஏற்றுக் கொண்டு இருக்கிறார். பிறகு இது ஒரே நாடகத்தில் இரண்டு பால் வேஷம் போடுவதை தவிர்த்தார்.

அண்ணாதுரை அவர்கள் எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் கணேசன் முதல் முறையாக 'சிவாஜியாக' நடித்தார். அண்ணாதுரை காகபட்டராக நடித்தார். அந்த நாடகத்தை பார்த்த தந்தை பெரியார் அவர்கள் கணேசனை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அவர் பெயரோடு 'சிவாஜி' என்ற பெயர் ஒட்டிக் கொண்டது.
‘பராசக்தி’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். என்ன காரணத்தினாலோ அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது, புது முக நடிகனான கணேசனை தேடி கண்டு பிடித்து டெஸ்ட் எடுத்தனர். முதல் வார்த்தையே 'சக்ஸஸ்' என்று சொல்ல சொன்னார்கள். அவரும் சொன்னார். இதை பார்த்த எ.வி.மெய்யப்ப செட்டியார் 'என்னப்பா இந்த புது பையன் 'சத்தத், சத்தத் என்கிறான்' என்று கேலி செய்தார். சவுண்ட் இன்ஜினியர் 'மீன் மாதிரி வாயை திறக்கிறான்' என்றார். பிறகு, ‘பராசக்தி’ படம் வெற்றி பெற்ற பிறகு 'அந்த நாள்' படத்தில் நடிக்க 'சிவாஜியை வைத்து எடுங்கள்' என்று எ.வி.மெய்யப்ப செட்டியாரே கூறினார்.
வில்லனோ ஹீரோவோ எதுவாக இருந்தாலும் தான் நடிக்கும் பாத்திரத்திற்கு பெருமை சேர்க்க குடியவர் சிவாஜி. திரையில் நல்லவனாக நடித்து அரசியலில் தாக்கு பிடிக்க தெரியாதவர்.

எம்.ஜி.ஆரை தன்னை அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் தன்னை முந்திக் கொண்டு சென்ற கதையும் அவர் தனது சுய சரிதையில் குறிப்பிடாமல் இல்லை.
1956ல் புயல் நிவாரணத்திற்காகக் பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர். அண்ணாதுரை அவர்கள் அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் போது சிவாஜியை அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள். தன்னை இப்படி தான் தி.மு.கவில் ஓரம் கட்டிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
" ஒருவன் தன் திறமையாலும், உழைப்பாலும் மக்கள் மதிப்பை பெறுகின்ற நேரத்திலும், நன்றாக வளர்ந்து வருகின்ற நேரத்திலும், அவர்களைத் தட்டி கீழே இறக்கப் பார்ப்பார்கள். அப்போது எச்சரிக்கையாக இருந்தால் தான் அரசியலில் நிலைத்திருக்க முடியும். அதற்கு உதாரணம், அரசியலில் நிலைத்தவர் என் அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்கள். அரசியலில் தள்ளப்பட்டவன் நான்"
"Ugly American" படத்தில் நடித்த மார்லர் பிராண்டோ சிவாஜியிடம் " சத்யஜித்ரே எடுத்த படத்தை கூறுகிறார். அதில் வரும் காட்சிகளை பார்த்து கண்ணீர் வந்துவிட்டதாக குறி, " it was a good entertainment film" என்று சொல்லி முடித்தார்.
அதற்கு சிவாஜி, " நீங்கள் பணக்காரர். அவர் எடுத்த படம் உங்களுக்கு என்டெர்டெய்ன்மெண்டாக உள்ளது. நான் அந்த நாட்டின் வாழ்பவன். எங்கள் மக்கள் மாற வேண்டும். வறுமை நீங்க வேண்டும். நாடு வளர வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக எங்களுக்கு நாங்களே எடுத்தக் கொண்ட படம் " என்றார். அதற்கு மார்லர் பிராண்டோ பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.
"ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில்" கட்டப்பொம்மன் படத்திற்கு சிறந்த நடிகனுக்கான விருதும், எகிப்து அதிபர் நாசர் விருந்தினராக சிவாஜியை சந்தித்தது, நயகரா மேயராக ஒரு நாள் இருந்தது, சிவாஜி அஞ்சல் தலை என்று பல கௌரவங்கள் அவரை அழங்கரித்துள்ளன.
'Sivaji' Ganesan is always a legend.
விலை.135, பக்கங்கள் : 318
பதிப்பாளர் : சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்
25, பெஸன்ட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14
தொலைபேசி: 28350126/28350127
6 comments:
நான் படித்து மகிழ்ந்த புத்தகம் .தொகுப்புக்கு நன்றி!
உங்க விமர்சனத்துக்காகவே கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்..
நானும் வாங்கணும் இந்த புத்தகத்தை...
// ஜோ/Joe said...
நான் படித்து மகிழ்ந்த புத்தகம் .தொகுப்புக்கு நன்றி!
//
வருகைக்கு நன்றி ஜோ :)
// கவிதை காதலன் said...
உங்க விமர்சனத்துக்காகவே கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்..
தீப்பெட்டி said...
நானும் வாங்கணும் இந்த புத்தகத்தை...
//
அவசியம் வாங்கி படிங்க....தீப்பெட்டி, கவிதை காதலன்
முன்பே படித்திருக்கிறேன். அருமையான அறிமுகம்.
நன்றி நண்பரே..
Post a Comment