வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 22, 2009

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry lab.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அவளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.

நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

2 comments:

Vidhoosh said...

///அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ///

சந்தேகமே வேண்டாம். இது அதான்.

குகன் said...

// Vidhoosh said...

சந்தேகமே வேண்டாம். இது அதான்.
//

:))))))))

LinkWithin

Related Posts with Thumbnails