வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, June 27, 2009

வீடு வாடகைக்கு - 1

காட்சி - 1

[ ஏகாம்பரம், பிச்சைக்காரன் ( பிரோக்கர் கந்தசாமி), கார்த்திக், வரதன்]

ஏகாம்பரம் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கிறான். வெளியே பிச்சைக்காரன் பிச்சை கேட்க வருகிறான்.

பிச்சைக்காரன் : ஐய்யா... சாமி !
ஏகாம்பரம் :டேய் கார்த்திக்..! உள்ள பழைய சாதம் இருக்கு... வெளியே இருக்குற பிச்சகாரனுக்கு போடு !

( உள்ளே இருந்து ‘குண்டு’ கார்த்திக் பிச்சைக்காரனுக்கு சாதம் கொண்டு வருகிறான் )

பிச்சைக்காரன் : என்ன பழைய சாதம் கொண்டு வர... புதுசா செஞ்சிக் கொண்டு வா..!

(பேப்பர் படித்துக் கொண்டு இருந்த ஏகாமபரம் கோபமாக எழுந்து வருகிறான்)

ஏகாம்பரம் : பிச்சைக்காரனுக்கு பழைய சாதம் போடாம...என்னத பொடுறது...?

பிச்சைக்காரன் : பழைய சாதம் போட்ட... நான் கன்ஸூம்மர் கோர்ட் போய் உன் மேல கேஸ் போடுவேன்.ஏகாம்பரம் : அடபாவி ! பிச்சைக்காரங்க கன்ஸூம்மர் கோர்ட்க்கு போக ஆரம்பிச்சா... பழைய சாதத்த அவங்க வீட்டு புருஷங்க தான் சாப்பிடனும்...

ஒரு நிமிடம் பிச்சைக்காரனை உற்று பார்க்கிறார்.

ஏகாம்பரம் : உன்ன பார்த்தா பிச்சக்காரன் மாதிரி தெரியல... பென்ட்,ஷர்ட் போட்டு பக்கா பார்மல்ஸ்ல இருக்க...

பிச்சைக்காரன் : இது தான் எங்க ட்ரெஸ் கோட்...

ஏகாம்பரம் : உங்களுக்கு ட்ரெஸ் கோட்லாம் வந்தாச்சா...! (Software Enggineer மாதிரி பேசுறான்) சரி..சரி.. இனிமேட்டு தான் சமைக்கனும். பழச சாப்பிட்டா சாப்பிடு இல்லனா கலம்பு...

பிச்சைக்காரன் : சாப்பிடு இல்லனா விடு... “வீடு வாடகைக்கு” போர்டு போட்டிருக்க..வாடகை எவ்வளவு...?
ஏகாம்பரம் : எதுக்கு கேக்குற..

பிச்சைக்காரன் : நான் பார்ட் டைம்மா பிரோக்கரா இருக்கேன் !
ஏகாம்பரம் : ஏன்டா... என் பொண்டாடி வீட்டுல இல்லன்சிட்டு... என்ன தப்பு பண்ண வைக்க நினைக்கிறியா..

பிச்சைக்காரன் : ஸார் ! நா அந்த மாதிரி பிரோக்கர் இல்ல... வீட்டு பிரோக்கர் !
ஏகாம்பரம் : வீட்டு ப்ரோக்கரா... இப்படி தெளிவா சொல்லு.. ('அம்பாசமுத்திரத்துல அம்பானி' இவனா இருப்பானா....)

பிச்சைக்காரன் : உள்ள போய் மத்த விஷயம் பேசலாமா...
ஏகாம்பரம் : பென்ட், ஷர்ட் போட்டு நீட்டா தான் இருக்க...சரி ! உள்ள வா..

பிச்சைக்காரன் : உங்க வீட்டுல எத்தன பேரு ?
ஏகாம்பரம் : நானும், என் பொண்டாடி, இரண்டு பசங்க... பெரிய பையனும், பொண்டாடியும் ஊருக்கு போய்யிருக்காங்க. இவ என் இரண்டாவது பையன் கார்த்திக். +2 படிக்கிறான்.

பிச்சைக்கார ப்ரோக்கர் : என்ன ஸார் ! இரண்டாவது பையன் சொன்னீங்க... இரண்டு பேரு வந்து நிக்குறாங்க..
ஏகாம்பரம் : யோவ் ! அவ ஒருத்த தான் கண்ணு வைக்காத...

ப்ரோக்கர் : கண்ணா... பிரோவே வைக்கலாம் போல இருக்கு...

கார்த்திக் : அப்பா ! நீங்க பேசிட்டு இருங்க எனக்கு எக்ஸமுக்கு டைமாச்சு...
ஏகாம்பரம் : இருப்பா... ( பூஜை படத்தில் இருந்து விபூதி நெற்றியில் பூசி) நல்லப்படியா பரிட்சை எழுது...

கார்த்திக் : ஐயோ அப்பா ! கண்ணுல விபூதிய போட்டீங்க.. பக்கத்து பையன் பேப்பர் பார்த்து எழுதலாம் இருந்தேன். இப்போ என் பேப்பர் பார்க்க முடியாம இருக்கே..!

ஏகாம்பரம் : சாமி விபூதிடா... காபி அடிக்கிறதுக்கு கூடவே இருப்பாரு..! எவன் பேப்பரையோ பார்த்து நல்லா எழுது..

( கார்த்திக் வெளியே செல்கிறான் )

ஏகாம்பரம் : சொல்லுப்பா...!
ப்ரோக்கர் : வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு ?

ஏகாம்பரம் : வாடகை 5000. அட்வான்ஸ் 50,000.
ப்ரோக்கர் : என்ன ஸார் ! வேளச்சேரியில வீடு வச்சிட்டு கம்மியா வாடகை சொல்லுறீங்க.. 10,000 வாடகை, 1 லட்சம் அட்வான்ஸ் கொடுக்குற பார்ட்டியா புடிச்சி தரேன்.

ஏகாம்பரம் : அவ்வளவு வாடகைக்கு ஆள் வருவாங்களா...!
ப்ரோக்கர் : நாலு பார்ட்டி இருக்காங்க.. இப்பவே போன் போட்டு வர சொல்லுறேன். நீங்களே பேசிக்கோங்க...

ப்ரோக்கர் செல் மூலம் 'பேங்க்' ஊழியர் வரதனை வரவழைக்கிறார்.

ஏகாம்பரம் : என்னைய்யா... போன் போட்டு அரை மணி நேரமாச்சு... பார்டி வரானா இல்லையா...

ப்ரோக்கர் : இருங்க வந்திருவாரு...
வரதன் : 3/11 வீடு இது தானே... (பிரோக்கரை பார்த்து) அட நீங்க இங்க தான் இருக்கீங்களா...

ப்ரோக்கர் : தம்பி பேரு வரதன்.. பேங்க்ல வேல செய்யுறாரு...
ஏகாம்பரம் : அப்படியா.. ரொம்ப நல்லது... வீடு பாக்குறதுக்கு முன்னாடி வாடகைய சொல்லிடுறேன்... 10000 வாடகை, 1 லட்சம் அட்வான்ஸ்..

வரதன் : வாடகைய ‘EMI’ கட்டலாமா...
ஏகாம்பரம் : உன் தல மட்டும் தனியா இங்க தங்க போகுதா... உடம்பு சேர்த்து தானே... வாடகை முழுசா தரனும்...

வரதன் : வீடு நீங்க வாங்குனதா... உங்க பரம்பர சொத்தா...
ஏகாம்பரம் : ம்..கல்யாண சீர்வரிசையா வந்தது...

வரதன் : வீட்டோ Parent Document, House tax எல்லாம் இருக்குல..
ஏகாம்பரம் : யோவ்.. வீடுல தங்க வந்தியா...வாங்க வந்தியா... நீ என் வீட்டுக்கு வேண்டாம் கலம்பு

வரதன் : போய்யா.... உன் வீடு எனக்கு வேண்டாம்... ( பிரோக்கரை பார்த்து ) வெளிய வா உன்ன பாத்துக்கிறேன்.

ஏகாம்பரம் : என்னைய்யா இந்த மாதிரி ஆள என் வீட்டுல தங்க வைக்குற..

ப்ரோக்கர் : இருங்க ஸார்...! டென்ஷன் ஆகாதிங்க... அடுத்து வர பார்ட்டி 'சாப்ட்' பர்சன் 'சாப்ட்வேர்'ல வேல செய்யுறாரு..

(தொடரும்.... )

10 comments:

ஜெகநாதன் said...

அப்ப இன்னும் கன்டினியூ ஆவுதா இந்த வீடு வாடகைக்கு விடும் படலம்?

கட்டபொம்மன் said...

//பிச்சைக்காரங்க கன்ஸூம்மர் கோர்ட்க்கு போக ஆரம்பிச்சா... பழைய சாதத்த அவங்க வீட்டு புருஷங்க தான் சாப்பிடனும்...//

இப்ப மட்டும் ? :)

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com

யூர்கன் க்ருகியர்..... said...

சரியான தமாசு :-)

குகன் said...

// ஜெகநாதன் said...
அப்ப இன்னும் கன்டினியூ ஆவுதா இந்த வீடு வாடகைக்கு விடும் படலம்?
//

ஆமாங்க அண்ணா... :)

குகன் said...

// கட்டபொம்மன் said...
//பிச்சைக்காரங்க கன்ஸூம்மர் கோர்ட்க்கு போக ஆரம்பிச்சா... பழைய சாதத்த அவங்க வீட்டு புருஷங்க தான் சாப்பிடனும்...//

இப்ப மட்டும் ? :)

கட்டபொம்மன்
//

:-))))))

குகன் said...

// யூர்கன் க்ருகியர்..... said...

சரியான தமாசு :-)
//

நன்றி யூர்கன் க்ருகியர் :)

Vidhoosh said...

சூப்பர் சார். சிரிப்பில் கலக்கறீங்க.

கலையரசன் said...

நகைசுவை நடையில் கலகறேள் போங்கோ..
அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்!!

குகன் said...

// Vidhoosh said...
சூப்பர் சார். சிரிப்பில் கலக்கறீங்க.
//

நன்றி Vidhoosh :)

குகன் said...

// கலையரசன் said...
நகைசுவை நடையில் கலகறேள் போங்கோ..
அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்!!
//

அடுத்த பார்ட்டு போட்டாச்சு... :)

LinkWithin

Related Posts with Thumbnails