எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய "தேசாந்திரி" புத்தகத்தை படிக்கும் போது, கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக சென்று உலக திரைப்படங்களை திரையிடப்படுவதை சொல்லுவார். 'உலக சினிமா'வை கிராமத்து மக்கள் எப்படி எல்லாம் ரசிக்கிறார்கள் என்று விளக்கி இருப்பார். படத்தை பார்த்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்த அளவு பொருள் உதவியை சினிமா இயக்கத்திற்கு கொடுப்பார்கள். இப்படி நல்ல ரசனை உள்ள மக்கள் இருப்பதால் தான் கெரளாவில் மட்டும் நல்ல திரைப்படங்கள் வருகின்றன.
கெரளா கிராமத்து மக்களின் ரசனை இப்படி இருக்க, நகரத்தில் வாழும் நாம் மட்டும் 'சிவாஜி', 'வில்லு', 'படிக்காதவன்', 'தோரனை' போன்ற படங்களை பார்க்கும் சாபத்தில் ஆளாகி இருக்கிறோம். இந்த சாபத்தில் இருந்து விடுப்படுவது கடினம் தான். ஆனால், கொஞ்சம் இளைப்பாருவதற்காக நம்ப ‘பைத்தியக்காரன்’ அவர்கள் 'இலவசமாக உலக திரைப்படங்களை பார்க்கலாம்' பதிவின் மூலம் உலக திரைப்படங்களை நம் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை போட்டி மூலம் பதிவர்களின் சிந்தனை தூண்டி விட்டவரின்… அடுத்த புதிய முயற்சி இது ! அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
இதுவரை 'உலக சினிமா' என்று படித்து வந்த பதிவர்களுக்கு, பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான் முதன் முதலில் பார்த்து ரசித்த ‘கிம் கி டுக்’ இயக்கிய " Spring, Summar, Fall, Winter and Spring" படம்.
இந்த படத்தை பற்றின நான் எழுதின விமர்சனத்தை பார்க்க... இங்கு பார்க்கவும்.
என் பதிவை பைத்தியக்காரன் பதிவில் குறிப்பிட்ட வண்ணத்துபூச்சியார் நன்றி :)
5 comments:
பதிவுக்கு நன்றி குகன் :-)
முன்பே படம் பார்த்திருந்தாலும் அவசியம் வாங்க.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
குகன்
\\கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக \\
அந்த திரைப்பட இயகத்தின் பெயர்
ஒடேசா என நினைக்கிறேன்.
பதிவுக்கு நன்றி
தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க
http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html
// பைத்தியக்காரன் said...
பதிவுக்கு நன்றி குகன் :-)
முன்பே படம் பார்த்திருந்தாலும் அவசியம் வாங்க.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
கண்டிப்பா வரேன்
// முரளிகண்ணன் said...
குகன்
\\கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக \\
அந்த திரைப்பட இயகத்தின் பெயர்
ஒடேசா என நினைக்கிறேன்.
//
எனக்கு சரியாக நினைவில் இல்லை முரளி.
அந்த இயக்கத்தை போல் நம் சக பதிவரின் முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறிப்பிட்டேன்.
-- பழமொழி சொன்ன அனுபவிக்கனும்... ஆராய்ச்சி பண்ண கூடாது. :) --
Post a Comment