வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, June 28, 2009

வீடு வாடகைக்கு - 2

காட்சி - 1 படிக்க

காட்சி - 2

[ ஏகாம்பரம், பிச்சைக்காரன் ( பிரோக்கர் கந்தசாமி), கார்த்திக், ரங்கன், 'BPO' சுந்தர் ]

அடுத்து சாப்ட்வேர் என்ஜினியர்

ஏகாம்பரம் : யோவ் ப்ரோக்கர் ! பிரச்சனையில்லாத சாப்ட்டான வாடகை தர ஆள காட்டு..

ப்ரோக்கர் : கவலப்படாதீங்க அடுத்து வர போறது சாப்ட்வேர் இன்ஜினியர் தான்.

[ போன் போட்டு 'சாப்ட்வேர்' ரங்கனை அழைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரும் அந்த வீட்டுக்கு வருகிறான். ]

ரங்கன் : ஸார் ! உள்ள வரலாமா...!
ப்ரோக்கர் : வாங்க ரங்கன் ( ஏகாம்பரத்திடம்) இவர் பேரு ரங்கன். சாப்ட்வேர் கம்பெனியில வேல செய்யுறாரு

ஏகாம்பரம் : ஓ... அப்படியா ! தம்பி உங்க கம்பெனியில எந்த மாதிரி வேல செய்யுறீங்க..
ரங்கன் : கம்ப்யூட்டர்ல கோடிங் அடிக்கிறது..



ஏகாம்பரம் : குறுக்கலையா... நெடுக்கலையா....?
ரங்கன் : இல்லைங்க... லைன் பை லைனா கோர்ட் அடிப்போம். உங்களுக்கு எப்படி சொல்லனும் புடியல்லையே...

ஏகாம்பரம் : டி.வியில புரியாம கோடு வர மாதிரி... புரியாம கோர்டிங்க் அடிப்பீங்க..
ப்ரோக்கர் : ஸார் ! அவரு எந்த வேல செஞ்சா என்ன ... நீங்க சொல்லுற வாடகை தராரா கேளுங்க...

ஏகாம்பரம் : மாச வாடக 10,000 ! அட்வான்ஸ் ஒரு லட்சம். என் சின்ன பையன் அடிக்கடி மாடி ரூம்ல தான் படிப்பான். நீ வெளியே போகும் போது உன் ரூம் சாவி என் கிட்ட கொடுத்திட்டு போகனும்.
ரங்கன் : (கொஞ்ச நேரம் யோசித்து) சரிங்க..! ஆனா ஒரு சின்ன ரெக்வெஸ்ட்.

ஏகாம்பரம் : சொல்லு...
ரங்க : நா காலையில போய்ட்டு ராத்திரி தான் வருவேன். வீட்டுல இருக்குற என் பொருள பத்திரமா பாத்துக்கனும்.

ஏகாம்பரம் : கவலப்படதா... என் சின்ன பையன் உன் பொருள பத்திரமா வச்சிப்பான்....ச்சே பாத்துப்பான். போதுமா.
ரங்கன் : அப்போ...இப்பவே என் திங்க்ஸ், பணம் கொண்டு வந்து வெச்சிடுறேன். சாய்ந்திரம் வந்து அட்வான்ஸ் கொடுக்குறேன். எனக்கு ஒன் அவர் தான் பரிமிஷன் கொடுத்தாங்க. நான் சீக்கிரம் போகனும். வரேன் ஸார் !

( ரங்கன் அவசரமா செல்கிறான்.)

ஏகாம்பரம் : ப்ரோக்கர் ! சொன்ன மாதிரி பார்ட்டி கொண்டு வந்திட்ட...உன் கம்மிஷன் எவ்வளவு ?

( 'BPO' சுந்தர் உள்ள வருகிறார்)
சுந்தர் : Is any Room available for accomadation ?
ஏகாம்பரம் : யாருய்யா அவன்... உன் மாதிரி இங்கிலீஷ்ல பிச்ச எடுக்குறவனா...

ப்ரோக்கர் : எங்க சங்கத்துல இவன பார்த்தேயில்ல...இருங்க... ( சுந்தரிடம் ) தம்பி ! நல்லா பேசுறீங்க...ஆனா ஒண்ணும் புரியல்ல...

சுந்தர் : ஸார் ! இங்க வீடு காலியா இருக்கா...
ப்ரோக்கர் : நீங்க யாரு..?

சுந்தர் : என் பேரு சுந்தர்.BPO கம்பெனியில வேலை செய்யுறேன். ராத்திரி போன காலையில தான் வருவேன்.
ஏகாம்பரம் : இப்ப தான் ஒருத்தனுக்கு வாடக...

( ப்ரோக்கர் ஏகாம்பரத்தை தனியாக அழைத்து செல்கிறான்)

ப்ரோக்கர் : வீட்டுக்கு வர ஸ்ரீ தேவியும், கொல்ல பக்கமா வர லட்சுமி வேண்டாம் சொல்ல கூடாது..
ஏகாம்பரம் : ஸ்ரீ தேவி, லட்சுமி சொல்லுற... உண்மைய சொல்லு நீ எந்த மாதிரி ப்ரோக்கர் ?
ப்ரோக்கர் : விளையாடதீங்க ஸார் ! அவ காலையில போய் ராத்திரி வருவான். இந்த பைய ராத்திரி போய்ட்டு காலையில வருவான். ஒரே வீட்ட இரண்டு பேருக்கு வாடகை விடுவோம்.

ஏகாம்பரம் : யோவ் ! வம்பாய்யிடும் வேண்டாம்.
ப்ரோக்கர் : யோசிச்சு பாருங்க.. 20 ஆயிரம் வாடகை, இரண்டு லட்சம் அட்வான்ஸ் எப்படியிருக்கும்.

ஏகாம்பரம் : நல்லா தான் இருக்கு... ஆனா வேண்டாம்...
ப்ரோக்கர் : எல்லா நா பாத்துக்கிறேன் வாங்க ( சுந்தரை பார்த்து ) தம்பி ! 10,000 வாடகை, ஒரு லட்சம் அட்வான்ஸ் ஓ.கேவா ?

சுந்தர் : சரிங்க... ராத்திரி வந்து என் பொட்டி எல்லாம் வச்சிட்டு குடிவந்திடுறேன்.
ஏகாம்பரம் : ஏன்ப்பா ராத்திரி வர...

சுந்தர் : ராத்திரி வேல செஞ்சு செஞ்சு... எல்லா வேலையும் ராத்திரி செஞ்சே பழகி போச்சு..

( சுந்தர் வெளியே செல்கிறான்.)

ப்ரோக்கர் : ஸார் ! ஒரே வீட்டுக்கு இரண்டு பார்ட்டி பிடிச்சு கொடுத்திருக்கேன். கம்மிஷன் 20% கொடுத்தா நல்லாயிருக்கும்.

ஏகாம்பரம் : சரி ! இந்தா நாலாயிரம்...

ப்ரோக்கர் : நா கேட்டது அட்வான்ஸ் இருந்து 20%.

ஏகாம்பரம் : என்னது நாற்பதாயிரமா... இவங்க ஒரு வருஷம் மேல இந்த வீட்டுல தங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

(கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ப்ரோக்கர் வெளியே செல்கிறான். அவர் கொஞ்ச நேரத்தில், மகன் கார்த்திக் உள்ளே வருகிறான். )

ஏகாம்பரம் : வாடா ! எக்ஸம் எப்படி எழுதுன... என்னடா ! நெத்தியில இங்க்கு !
கார்த்திக் : எக்ஸம் எழுதும் போது பேப்பர்ல இங்க் கொட்டிடுச்சு... அதான் நெத்தியில இருக்குற விபூதிய வச்சு உரிஞ்சிட்டேன்.

(தொடரும்.... )

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

சிரிப்பு சீரியல் அமர்க்களம் !
அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்

குகன் said...

// யூர்கன் க்ருகியர்..... said...
சிரிப்பு சீரியல் அமர்க்களம் !
அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்
//

அடுத்த எபிசோட் ரேடி... :)

LinkWithin

Related Posts with Thumbnails