வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 22, 2009

'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்

சினிமாவில் சேர நினைத்த குருவும், மதனும் 'ஊர்' பெயரில் இயக்கும் இயக்குனர்டம் உதவி இயக்குனர்களாக சேர்ந்தனர். 'ஊர்' இயக்குனர் தனது புது படத்தில் 'வம்பு' நடிகனை கதாநாயகனாக போட்டு பட பூஜை நடத்துவதாக அறிவித்திருந்தார். 'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகர் கூட்டனியில் கதைக்கு பஞ்சம் இருந்தாலும் 'பன்ச்' டைலாக்குக்கு பஞ்சம் இருக்காது என்று பத்திரிக்கை எல்லாம் பாராட்டி எழுதியிருந்தனர்.

பட பூஜையை பிரமாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டு நடந்துக் கொண்டு இருந்தது. 'வம்பு' நடிகர் பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வந்து பட பூஜைக்கு இறங்கினார். 'வம்பு' நடிகருடன் வேலை செய்வதை நினைத்து குருவும், மதனும் உடல் புரித்து இருந்தனர். 'ஊர்' இயக்குனரும், 'வம்பு' நடிகரும் பேசியே படத்தை நூறு நாள் ஓட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கை குருவுக்கும், மதனுக்கும் இருந்தது. தாங்கள் இயக்க போவும் படத்திற்கு 'வம்பு' நடிகனை கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என்று கதை கூட தாயர் செய்துவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல ஷூட்டீங் ஸ்பாட்டில் குரு, மதனுக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. தன் ரசிகர்கள் என்ற பெயரில் மாத சம்பளம் இரண்டாயிரம் தருகிறாராம். அது மட்டுமில்லாமல், முதல் நாள் தன் படம் பார்க்க வருகிறவர்கள் முட்டை பிரியானி எல்லாம் தருவாராம்.

" ஒரு வேல... அவர் அப்பா அரசியல்ல இருக்குறதால... இந்த தாக்கம் இருக்குமோ !" என்று மதன் குருவின் காதில் சொன்னான்.

"ஏதாவது பேசி இருக்குற வேலை போக போது..." என்று குரு மதனின் வாய்யை அடைத்தான்.

ஷூட்டீங் ஸ்பாட்டில் குடும்ப செண்டிமென்ட் சீன் பற்றிய காட்சியை படமாக்கி கொண்டு இருந்தனர். குரு, மதன் யோசனையை வாங்கி தன் சொந்த கற்பனை என்று சொல்லி 'ஊர்' இய க்குனர் 'வம்பு' நாயகனுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.

இயக்குனர் : ஸார் ! நீங்க ஊருல இருந்து உங்க கிராமத்துக்கு வரீங்க..

வம்பு : நோ...நோ... என் ரசிகர்கள் சிட்டி ஆளுங்க... வில்லேஜ் கதையெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது...

இயக்குனர் : பரவாயில்ல... லீவுக்கு உங்க சொந்தக்காரங்க கிராமத்துக்கு வரீங்க... ஸ்கேண்ட் ஆப் டெல்லியில கதைய மாத்திருவோம்.

வம்பு : வெரி குட்.... இத தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன். ஒரு படத்துல இரண்டு கதை சொல்லி ரசிகர்கள திருப்தி படுத்துர உங்கள மாதிரி இயக்குனர் இருக்குற வரைக்கு தமிழ் சினிமா ரொம்ப நல்லா இருக்கும்.

'ஊர்' இயக்குனர் தன் காலரை உயர்த்தி கொண்டார். 'ஊர்' இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தின் புது பட்ஜெட்டை பற்றி சொல்ல செல்கிறார். பாதி படம் பணம் போட்ட தயாரிப்பாளர் இன்னொரு வீடு விக்க வேண்டிய நிலையில் இருந்தார்.

சைக்கில் கேப்பில் மேக்கப் போட்டு கொண்டு இருந்த நாயகியிடம் 'வம்பு' நாயகன் ' உன்ன பார்த்தா என் இரண்டாவது காதலி மாதிரி இருக்கு..." கடலை போட தொடங்கினான்.

நாயகி : உங்களுக்கு மொத்தம் எத்தன காதலி...?

'வம்பு' நாயகன் : எனக்கு இது வரைக்கும் ஒரே காதலி தானு தமிழ் நாட்டுக்கே தெரியும்...

நாயகி : ஸாரி... நான் ஆந்திரா. எனக்கு தெரியாது. (மனதுக்குள்) ஆடியன்ஸ பார்த்து பேசுற மாதிரி பேசுறான். இப்ப தான் தெரியுது ! தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு...? இந்த மாதிரி ஹீரோவோட மொக்கைய கேக்க வேண்டியதா இருக்கே...!

'வம்பு' நாயகன் : என் பழைய காதலி ஒண்ணும் ரொம்ப அழகி இல்ல... நீ என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டா போதும்..

நாயகி : “உங்கள பத்தி நல்லா தெரியுமே... இது தான் உங்க முதல் படமில்ல...”
'வம்பு' நடிகன் கோபமாய் பார்க்க, "ஐ மின் அதிகம் நடிக்க வாய்ப்பிருக்குற முதல் படம்னு சொல்ல வந்தேன்" என்று நாயகி சமாளித்தாள்.

'வம்பு' நாயகன் போடும் மொக்கை கேட்டுக் கொண்டு மதனால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அவனை அடிக்க வேண்டும் போல் மதனுக்கு இருந்தது. குரு மதனை கட்டுப்படுத்தி பொறுமையாக இருக்க சொன்னான்.

இயக்குனர் : வாங்க...! ஷார்ட் எடுக்கனும்.
என்று நாயகன், நாயகி, துணை நடிகர்களை அழைத்தான். இயக்குனர் நாயகனிடம் " ஸார்... நீங்க கார விட்டு இறங்கியதும். நீங்க உங்க அத்த கிராக்டர பார்த்து எப்படி இருக்கீங்கனு கேக்கனும். இது தான் முதல் ஷார்ட்." என்றார். வம்பு நடிகனும் 'சரி' என்று தலையாட்டினான்.

எல்லோரும் காட்சி எடுக்க வேண்டிய இடத்தில் நின்றனர்.

இயக்குனர் : ரேடி... ஸ்டார்ட்.. ஆக்ஷன்....

'வம்பு' நடிகன் : அத்த...எப்படி இருக்கீங்க... ?
என்று வசனத்தை கதாபாத்திரத்தை பார்த்து பேசாமல் கேமரா பார்த்து பேசினான்.

இயக்குனர் : என்ன ஸார்... கிரெக்டர் பார்த்து பேசாம... கேமரா பார்த்து பேசுறீங்க...??
வம்பு நடிகன்: பன்ச் டைலாக்க ஆடியன்ஸ் பார்த்து பேசுன தான் நல்லா இருக்கும்.

இயக்குனர் : நீங்க உங்க அத்தை நலம் விசாரிக்குறீங்க.... இது எல்லாம் பன்ச் கிடையாது ஸார்...

'வம்பு' நடிகன் : "இது எப்படி இருக்குனு” சொன்னா பன்ச் டைலாக்க எடுத்துக்குறீங்க. "எப்படி இருக்கீங்கனு?" பன்ச் டைலாக் கிடையாதா...

இதை கேட்டதும் மதனுக்கு கோபம் தலைக்கேறியது.

மதன் : நேத்து வந்த பய நீ. எங்க தலைவரோட உன்ன கம்பார் பண்ணுற
என்று கோபமாய் வம்பு நடிகனை அடித்தான். குரு மதனை தடுக்க அவன் கையை பிடிக்கிறான். கோபத்தில் குரு கையை மதன் தள்ளி விட குருவின் கை இயக்குனரின் கண்ணித்தில் படுகிறது.

வம்பு நடிகன் கோபத்தில் 'பேக்கப்' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் நாயகன், இயக்குனர் தாக்கியதற்காக குருவையும், மதனையும் போலீஸ்யிடம் ஒப்படைக்கிறார்.

மதன் கோபத்தால் குருவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியதாக வந்தது. ‘வம்பு’ நடிகன் படத்தை பார்த்த ரசிகர்கள் அவனை அடிப்பதற்காக தேடிக் கொண்டு இருந்தனர்.

3 comments:

முரளிகண்ணன் said...

\\இப்ப தான் தெரியுது ! தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு...? இந்த மாதிரி ஹீரோவோட மொக்கைய கேக்க வேண்டியதா இருக்கே...!
\\

:-))))))))

Test said...

Very Nice

குகன் said...

Thanks முரளிகண்ணன், Logan, Valaipookal :)

LinkWithin

Related Posts with Thumbnails