வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 26, 2012

ஞாயிறு - மருத்துவர் விடுமுறை ??

சென்ற சனிக்கிழமை (21.4.12), என் உறவினர் ஒருவர் (வயது 56) உடல் நலம் சரியில்லாமல் திருச்சி மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தவர் என்பதால், நர்ஸ்க்கு தண்ணி அடித்திருப்பார் என்ற சந்தேகம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சேர்க்க முடியாது என்றார். ட்யூடி டாக்டர் பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சொன்னதால் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ( இவர் பெருமாளை பக்தன் என்பதால், சனிக்கிழமை மட்டும் தண்ணி அடிக்கமாட்டார் என்பது எங்கள் உறவினர்களுக்கு தெரியும். நர்ஸ் சொன்னதால் ஒரு சந்தேகம். அவர் தண்ணியடிக்கவில்லை என்பது தான் உண்மை).

அடுத்த நாள் (22.4.12) வரை, அவருக்கு நினைவு திரும்பாததால் மீண்டும் மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை ச்சீஃப் (Chief) டாக்டர் என் உறவினருக்கு நெருக்கமானவர். முதலில், இறுதய பிரச்சனை என்று பரிசோதித்தனர். எல்லாம் சரியாகவே இருந்தது. எதற்கும், Brain CT Scan எடுத்து பார்க்கலாம் என்று பார்த்த போது, 'Brain attack' வந்திருப்பதாக சொன்னார்கள். Neurologist ஞாயிற்றுகிழமை வர மாட்டார் என்பதால், தொலைப்பேசியிலே அவரை தொடர்பு கொண்டு சில மருந்து கொடுக்க சொன்னார். மருத்துவமனையில் இருக்கும் டியூட்டி டாக்டரும் பயப்படும் படி ஒன்று இல்லை என்றனர்.



திங்கள் (23.4.12) காலை வருவதாக சொன்ன Neurologist மதியம் வரை வரவில்லை. அவர் வர மாலை ஆகலாம் என்று சொன்ன பிறகு, ஊரில் இருந்து வந்த மகன் சென்னைக்கு அழைத்து வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவு செய்தார். பரிசோத்த டாக்டரும், தாராளமாக அழைத்து செல்லலாம். கவலைப்படும் நிலை இல்லை என்றே சொன்னார்.

ஆம்பிலென்ஸ் வண்டியில் அழைத்து வரும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் பள்ஸ் பார்த்து சரியாக இருப்பதாக சொன்னார். சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், அவரை பார்த்த டாக்டர் உயிர் போய் இரண்டு மணி நேரமாகிறது என்றார். வரும் வழியில் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

என் உறவினர் டெத் சர்ட்டிப்பிக்கெட்டில் 2005ல் இருந்து தற்போது வரை அவர் மேற்கொள்ள மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் நெருங்கி டாக்டர் குறிப்பிட்டு கொடுத்திருந்தார். அழைத்து செல்லும் போது இரண்டாவது Brain attack வந்து இறந்ததாக சொன்னார்.

Brain attrack என்று சொல்லப்படும் ஒரு நோயாளிக்கு ஒன்றரை நாள் வரை மருத்துவர் இல்லாததால் வைத்தியம் பார்க்கவில்லை. ஞாயிறு, ஒரு Neurologist வரவில்லை என்றால் இன்னொரு Neurologist ஏன் அந்த மருத்துவமனை ஏற்பாடு செய்யவில்லை ?

ஒரு மனிதர் தானே அவர் விடுமுறை எடுக்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒருவர் விடுப்பு எடுத்திருக்கும் போது மாற்று ஏற்பாடு செய்வது மருத்துவமனையின் கடமை. அதை ஏன் இவர்கள் செய்யவில்லை ?

இங்கு Neurologist இல்லை. வேறு மருத்துவமனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்லவில்லை ? ( நோயாளி மூலம் வரும் பணம் வெளியே போய் விடக்கூடாது )

வழியில் உயிர் பிரிந்தது என்றால், உடன் இருந்த நர்ஸ் பள்ஸ் ஏன் சரியாக இருப்பதாக சொல்ல வேண்டும். ? ( இவர்கள் எங்கு நர்ஸிங் படித்தார்களோ ? ) 

இதைப் பற்றி நண்பர்களிடம் கூறிய போது, "தனியார் மருத்துவமனையில் ஞாயிறு டாக்டர்ஸ் வர மாட்டாங்க... ட்யூடி டாக்டர் வச்சி ஓட்டுவாங்க!! " என்று பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

இன்று (26 ஏப்ரல்) இறந்த என் உறவினரின் பிறந்தநாள்.

Heart attack, Brain attack எந்த வியாதியாக இருந்தாலும் இனிமேல் விடுமுறை நாட்களில் வரக் கூடாது. வந்தாலும் தனியார் மருத்துவமனையில் சேரக் கூடாது. ( G.Hயில் சேர்ப்பது வேறு விதமான பிரச்சனை. எங்க தான்டா போறது ??? )

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் மருத்துவர்களை நம்பிதான் ஆக வேண்டியுள்ளது. நீங்கள் தவறு செய்யக் கூடாது என்பதை தான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான். அதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

2 comments:

கோவை நேரம் said...

துரதிஷ்டமான சம்பவம்..

soundar said...

to diagnose stroke or paralysis neurologist is not necessary. if CT scan shoes evidence of stroke, the patient has to be referred to a good hospital where ICU facility is available.

LinkWithin

Related Posts with Thumbnails