வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Monday, April 9, 2012
பெரம்பூர் ரெயில் நிலையம் மிக மிக அருகில் !!
பெரம்பூர் ரயில் நிலைய அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் எடுத்த படம்.
ஒரு வருடம் முன்பு, இங்கு பயணிகளை ஏற்றி, இறக்கி விட ஆட்டோக்கள் அதிகமாக நிற்க்கும். திரு.வி.க நகர், ரெட்டேரி, பெரியார் நகர் செல்பவர்கள் ரயிலில் இறங்கியதும் இன்கு ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு சுலபமாக இருக்கும்.ஒரு நாளைக்கு இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ்யை ஷேஎ ஆட்டோக்கள் தான் அதிகம் நிற்கிறது. காலையில் வேலையில் செல்பவர்களுக்கு அதே வழி என்பதால் பஸ், கார், இரு சக்கர வாகன்ங்களோடு அடிக்கடி ஷேர் ஆட்டோக்காரர்க்ளுக்கு வாக்கு வாதம் ஏற்ப்படும்.
ஒரு கட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் "இவ்விடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது" என்று போர்ட் வைத்தார்கள். ஆனால், அப்படியும் ஷேர் ஆட்டோக்கள் கேட்பகதாக இல்லை.தினமும் ஆட்டோ நிற்பதும், வண்டிகள் போகாமல் தடைப்படுவது தொடர்ந்துக் கொண்டே இருந்தது. காவலர்கள் சில சமயம் லத்தியால் ஆட்டோவின் பின்புறம் அடிப்பார்கள். ஒன்றும் பலனில்லை.
பஸ் முன்பு, கார் முன்பு வண்டியை நிறுத்தி பயணிகள் ஏறி, இறங்கும் வரை அங்கு போக்குவரத்து தடங்கள் இருந்துக் கொண்டு இருக்கும்.
காவல்துறையினர் வைத்த போர்ட்க்கு மதிப்பே இல்லாமல் போனது. வேறு வழியில்லாமல், “ஏற்றக்கூடாது” என்ற வார்த்தைக்கு மேல் “ஏற்றும் இடம்” என்று ஸ்டிக்கர் ஓட்டிவிட்டார்கள். அதாவது, டிராபிக் அதிகமாக இருக்கும் இடத்தில் அவர்கள் வண்டியை நிறுத்தி, ஏற்ற வழி வகுத்துக் கொடுத்துள்ளார்கள்.
போர்ட் வைக்கும் முன்பே இங்கு ஷேர் ஆட்டோ நின்றுக் கொண்டு தான் இருந்தது. இப்போது இருக்கும் போர்ட்க்கு என்ன பயன் தெரியுமா ? போது மக்கள் வழியில் நிற்கும் ஆட்டோக்களிடம் சண்டைப் போடாமல் செல்ல வேண்டும். ஏன் என்றால் இங்கு ஆட்டோ பயணிகளை எற்றிவிடும் இடம் மாயிற்றே !!
முன்பு வைத்த போர்ட் ஆட்டோக்காரர்களுக்கு... அவர்கள் அதை கேட்கவில்லை. பின்பு அதே போர்ட்டை மக்களுக்கு மாட்டிவிட்டார்கள்.
இந்த போர்ட்டை பார்த்ததும் சோவின் ‘துக்ளக்’ நாடகத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது.
"Yesterday illegal today’s law.
Today’s illegal tomorrow’s law."
அது சரியாக தான் இருக்குகிறது.
Labels:
அனுபவம்,
மக்கள் குரல்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Yesterday illegal today’s law.
Today’s illegal tomorrow’s law."
சரி தான்
நல்ல விஷயம் தலைவரே..!!
இன்னும் என்னன்ன அநியாயம் நடக்கப்போகுது பாருங்க..!!
அப்பதான் நாம் கொதிச்செழுந்து இந்த அக்கிரமக்காரர்களை சூறையாட வசதியா இருக்கும்..!!
நல்ல விஷயம் தலைவரே..!!
இன்னும் என்னன்ன அநியாயம் நடக்கப்போகுது பாருங்க..!!
அப்பதான் நாம் கொதிச்செழுந்து இந்த அக்கிரமக்காரர்களை சூறையாட வசதியா இருக்கும்..!!
Post a Comment